பஜாஜ் சேத்தக் வருகை எதிரொலி... பெருநகரங்களில் ஷோரூம்களை திறக்க அவசரம் காட்டும் ஏத்தர்!

நாட்டின் பெரு நகரங்களிலும் ஷோரூம்களை அமைக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது ஏத்தர் நிறுவனம். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பஜாஜ் சேத்தக் வருகை எதிரொலி... பெருநகரங்களில் ஷோரூம்களை திறக்க அவசரம் காட்டும் ஏத்தர்!

பெங்களுரை சேர்ந்த ஏத்தர் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது. முதல்கட்டமாக சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் தனது ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதற்காக, ஏத்தர் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் என்ற பெயரில் ஷோரூம்களையும் திறந்தது.

பஜாஜ் சேத்தக் வருகை எதிரொலி... பெருநகரங்களில் ஷோரூம்களை திறக்க அவசரம் காட்டும் ஏத்தர்!

இந்த நிலையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வர்த்தகத்தை விரிவாக்கும் முயற்சிகளில் ஏத்தர் இறங்கி இருக்கிறது. இதன்படி, ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் புனே ஆகிய நகரங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்கான ஏத்தர் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் எனும் விற்பனை நிலையங்களை திறக்க இருக்கிறது.

பஜாஜ் சேத்தக் வருகை எதிரொலி... பெருநகரங்களில் ஷோரூம்களை திறக்க அவசரம் காட்டும் ஏத்தர்!

இதற்காக, அந்தந்த நகரங்களில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையங்களை திறப்பதற்கான வினியோகஸ்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. விருப்பமுடையவர்கள் ஏத்தர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு ஏத்தர் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை அமைக்கும் வாய்ப்பை பெற முடியும்.

பஜாஜ் சேத்தக் வருகை எதிரொலி... பெருநகரங்களில் ஷோரூம்களை திறக்க அவசரம் காட்டும் ஏத்தர்!

இந்த விற்பனை நிலையங்களை ஏத்தர் நிறுவனமே வடிவமைத்து தரும். இந்த விற்பனை நிலையங்கள் ஏத்தர் நிறுவனத்தின் விற்பனை கொள்கைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும். இதில், ஏத்தர் ஸ்கூட்டர்களை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு மற்றும் விற்பனை தொடர்பான பணிகள் செய்து தரப்படும்.

பஜாஜ் சேத்தக் வருகை எதிரொலி... பெருநகரங்களில் ஷோரூம்களை திறக்க அவசரம் காட்டும் ஏத்தர்!

இதனிடையே, நாடு முழுவதும் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு ஏதுவாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது ஏத்தர் நிறுவனம்.

பஜாஜ் சேத்தக் வருகை எதிரொலி... பெருநகரங்களில் ஷோரூம்களை திறக்க அவசரம் காட்டும் ஏத்தர்!

இதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஓசூரில் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த புதிய தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதன்மூலமாக, தங்கு தடையில்லாமல் நாடு முழுவதும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சப்ளை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

MOST READ: பாஸ்ட்டேக் கோல்மால்... அரசு அதிகாரி கணக்கில் இருந்த பணம் அபேஸ்... ஷாக் அடிக்க வைக்கும் பகீர் சம்பவம்

பஜாஜ் சேத்தக் வருகை எதிரொலி... பெருநகரங்களில் ஷோரூம்களை திறக்க அவசரம் காட்டும் ஏத்தர்!

ஏத்தர் நிறுவனம் தற்போது 450 என்ற பெயரில் ஒரேயொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்கூட்டர் பெங்களூரில் 1.14 லட்சம் விலையிலும், சென்னையில் ரூ.1.22 லட்சம் ஆன்ரோடு விலையிலும் விற்பனை செ்யயப்படுகிறது.

MOST READ: ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய சொகுசு கார்.. அடேங்கப்பா இதுக்கா இவ்ளோ தொகை கொடுத்து வாங்கினாங்க?

பஜாஜ் சேத்தக் வருகை எதிரொலி... பெருநகரங்களில் ஷோரூம்களை திறக்க அவசரம் காட்டும் ஏத்தர்!

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.4kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரியானது தூசு மற்றும் தண்ணீர் புகாத வடிவமைப்பையும், ஐபி67 தர மதிப்பீட்டிற்கு ஒப்பானதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

MOST READ: இந்தியர்கள் எதிர்பார்ப்பு வீணாகாது.. உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்.. எப்போது?

பஜாஜ் சேத்தக் வருகை எதிரொலி... பெருநகரங்களில் ஷோரூம்களை திறக்க அவசரம் காட்டும் ஏத்தர்!

ஏத்தர் 450 ஸ்கூட்டரில் பிரஷ்லெஸ் டிசி மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 7.3 பிஎஸ் பவரையும், 20.5 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. அதாவது, கேடிஎம் 200 ட்யூக் உள்ளிட்ட பைக்குகளுக்கு இணையான டார்க் திறனை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கிறது.

பஜாஜ் சேத்தக் வருகை எதிரொலி... பெருநகரங்களில் ஷோரூம்களை திறக்க அவசரம் காட்டும் ஏத்தர்!

ஏத்தர் 450 ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக நேவிகேஷன், சர்வீஸ் டரிமைன்டர், வாகனத்தின் பதிவு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக பெறும் வாய்ப்பை வழங்கும். மொத்தத்தில் மிகவும் பிரிமீயம் ஸ்கூட்டர் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather is mulling to expand of its dealer network in other metro cities like Hyderabad, Mumbai, Delhi and Pune.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X