Just In
- 18 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 10 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- News
30 சீட்தான் தர முடியும்.. அமித்ஷாவிடம் சப்ஜாடாக சொன்ன எடப்பாடியார்.. பாஜக அப்செட்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்!
பழைய இருசக்கர வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஏத்தர் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறது. ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டுமே ஏத்தர் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் ஸ்கூட்டரை வாங்கும் திட்டத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தை CredR என்ற நிறுவனத்துடன் இணைந்து ஏத்தர் அமல்படுத்தப்பட உள்ளது. சென்னை, பெங்களூர் நகரங்களில் உள்ள ஷோரூம்களில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பழைய பெட்ரோல் இருசக்கர வாகனம் எந்த பிராண்டாக இருந்தாலும் எக்ஸ்சேஞ்ச் செய்யப்படும். பைக், ஸ்கூட்டர்களின் கண்டிஷன் மற்றும் இதர அம்சங்களை ஆய்வு செய்து அதற்கு தக்கவாறு விலை நிர்ணயிக்கப்படும்.

புதிய ஏத்தர் 450 ப்ளஸ் மற்றும் 450எக்ஸ் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு இந்த திட்டம் வழங்கப்படுகிறது. புதிய ஏத்தர் ஸ்கூட்டரின் விலையில் எக்ஸ்சேஞ்ச் விலை கழித்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர்த்து, ஏத்தர் 450 ஸ்கூட்டருக்கு குத்தகை திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, மாதம் ரூ.2,589 கட்டணம் செலுத்த வேண்டும்.

அனைத்து விதமான செலவீனங்களும் இதில் அடங்கிவிடும் என்று ஏத்தர் தெரிவித்துள்ளது. மாதாந்திர திட்டமும் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மையை தரும் என்று ஏத்தர் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், விரைவில் கோவை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் வர்த்தகத்தை துவங்குவதற்கான முயற்சிகளில் ஏத்தர் ஈடுபட்டுள்ளது. கொரோனாவால் தள்ளிப் போன விரிவாக்கத் திட்டத்தை மீண்டும் கையில் எடுக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் முதல் வெளிநாடுகளுக்கும் ஏத்தர் ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.