100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

மிகவும் குறைவான விலையில் புதிய மின்சார பைக் ஒன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பணிகளை மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் முடுக்கி விட்டுள்ளன. மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், இந்தியாவிற்கு பெரும் தலைவலியாக இருந்து வரும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு பிரச்னை குறையும்.

100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

அத்துடன் மின்சார வாகனங்களின் மூலம் காற்று மாசுபாடு பிரச்னைக்கும் முடிவு கட்டப்படும். இதன் காரணமாகதான் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் அதிகரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ஊக்கம் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டி கொண்டு இந்திய சந்தையில் மின்சார வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன. முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது, சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் தற்போது மின்சார வாகன சந்தையில் கால் பதிக்க தொடங்கியுள்ளன.

100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

இந்த வரிசையில், ஐதராபாத் நகரை மையமாக கொண்டு செயல்படும் ஆட்டம்மொபைல் பிரைவேட் லிமிடெட் (Atumobile Pvt Ltd) என்னும் நிறுவனம், புதிய லோ-ஸ்பீடு மின்சார பைக் ஒன்றை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மின்சார பைக்கிற்கு ஆட்டம் 1.0 (Atum 1.0) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

ஐதராபாத்தை சேர்ந்த இந்த நிறுவனத்திடம் இருந்து வெளிவரும் முதல் தயாரிப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மலிவான விலை மற்றும் அட்டகாசமான சிறப்பம்சங்கள் மூலம் முதல் தயாரிப்பிலேயே அனைவரது கவனத்தையும் இந்த நிறுவனம் கவர்ந்து விட்டது. இது 'மேட் இன் இந்தியா' மின்சார பைக் ஆகும். தெலங்கானா மாநிலத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் ஆலையில் ஆட்டம் 1.0 உற்பத்தி செய்யப்படும்.

100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

இந்த ஆலையில் ஒரு ஆண்டுக்கு 15,000 மின்சார பைக்குகளை உற்பத்தி செய்ய முடியும். தேவைப்பட்டால் இன்னும் 10,000 பைக்குகளை அதிகமாக தயாரிப்பதற்கான வசதிகளையும் அந்த ஆலை பெற்றுள்ளது. ஆட்டம் 1.0 மின்சார பைக்கானது, ஐசிஏடி-யால் (ICAT - International Centre for Automotive Technology) அங்கீகரிக்கப்பட்ட லோ-ஸ்பீடு மின்சார வாகனம் ஆகும்.

100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

அதாவது இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆட்டம் 1.0 மின்சார பைக்கை பதிவு செய்ய தேவையில்லை. அத்துடன் இதனை ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமமும் தேவைப்படாது. இந்த மின்சார பைக்கில் லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.

100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

இந்த மின்சார பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர்கள் வரை தாராளமாக பயணம் செய்ய முடியும். 2 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் இந்த மின்சார பைக் வருகிறது. அத்துடன் பல்வேறு வண்ண தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு சுமார் 1 யூனிட் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

ஒரு முறை முழுமையாக சார்ஜ் நிரப்பினால், 100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். எனவே 100 கிலோ மீட்டர்களுக்கு சுமார் 7-10 ரூபாய் வரை மட்டுமே செலவாகும். நீங்கள் ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டர் இந்த மின்சார பைக்கை ஓட்டுவதாக இருந்தால், அதனை இயக்குவதற்கான செலவு வெறும் 7-10 ரூபாய் மட்டும்தான்.

100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

அதே சமயம் பெட்ரோலில் இயங்க கூடிய பைக்குகள் என்றால், 100 கிலோ மீட்டர்கள் ஓட்டுவதற்கு சுமார் 80-100 ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், எரிபொருள் செலவை கட்டுப்படுத்த விரும்பும் நபர்களுக்கு இது நல்ல தேர்வாக அமையும். இந்த மின்சார பைக்கின் விலை வெறும் 50,000 ரூபாய் மட்டும்தான்.

100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

விலை மிகவும் குறைவாக இருப்பதால், இந்த மின்சார பைக் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும், இதேபோன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பல்வேறு புதிய மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன.

Most Read Articles

English summary
Atum 1.0 Electric Bike Launched In India: Affordable Price - Full Details. Read in Tamil
Story first published: Thursday, September 3, 2020, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X