8 புதிய அம்சங்களுடன் அறிமுகமானது பஜாஜ் சிடி100 கேஎஸ் பைக்... முழு விபரம்!

வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை தரும் 8 புதிய அம்சங்களுடன் பஜாஜ் சிடி100 கேஎஸ் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில் கொடுக்கப்பட்டு இருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

8 புதிய அம்சங்களுடன் அறிமுகமானது பஜாஜ் சிடி100 கேஎஸ் பைக்... முழு விபரம்!

இந்தியாவின் பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் பஜாஜ் சிடி100 பைக் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. கவரும் டிசைன், எளிதான கையாளுமை என்பதுடன், இந்த பைக்கின் மைலேஜ் என்பது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த விஷயமாக இருந்து வருகிறது.

8 புதிய அம்சங்களுடன் அறிமுகமானது பஜாஜ் சிடி100 கேஎஸ் பைக்... முழு விபரம்!

இந்த நிலையில், பஜாஜ் சிடி100 பைக்கின் மதிப்பை உயர்த்தும் விதத்தில் 8 புதிய சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக் மாடலுக்கு ரூ.46,432 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

8 புதிய அம்சங்களுடன் அறிமுகமானது பஜாஜ் சிடி100 கேஎஸ் பைக்... முழு விபரம்!

புதிதாக வந்திருக்கும் பஜாஜ் சிடி100 பைக்கில் க்ராஸ் ட்யூப் எனப்படும் ஹேண்டில்பாரின் இடையில் புதிய கம்பி மூலமாக இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, முன்புற கைப்பிடி அதிக உறுதியாகவும், சிறப்பான கையாளுமை மற்றும் நிலைத்தன்மையை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

8 புதிய அம்சங்களுடன் அறிமுகமானது பஜாஜ் சிடி100 கேஎஸ் பைக்... முழு விபரம்!

இந்த பைக்கின் முன்புற சஸ்பென்ஷனில் பெல்லோஸ் எனப்படும் இணைப்பு இடைவெளிக்கான ரப்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதிக குஷன் மற்றும் தட்டையான இருக்கை அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனால், மோசமான சாலைகளிலும் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும்.

8 புதிய அம்சங்களுடன் அறிமுகமானது பஜாஜ் சிடி100 கேஎஸ் பைக்... முழு விபரம்!

இருக்கைக்கு பின்புறத்தில் இருக்கும் கிராப் ரெயில் கைப்பிடியானது பெரிதாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், பின்னால் அமர்ந்திருப்பவர் வசதியாக பிடித்துக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை வழங்கும்.

8 புதிய அம்சங்களுடன் அறிமுகமானது பஜாஜ் சிடி100 கேஎஸ் பைக்... முழு விபரம்!

பெட்ரோல் டேங்க் இருபுறத்திலும் ரப்பர் பேடுகள் உள்ளன. இதனால், கால்களை நெருக்கி வைத்து ஓட்டும்போது சிறந்த பிடிப்பயைும், தேய்மானம் ஏற்படுவதை தவிர்க்கவும் உதவும். புதிதாக எரிபொருள் அளவை காட்டும் எரிபொருள் மானியும் இடம்பெற்றுள்ளது.

8 புதிய அம்சங்களுடன் அறிமுகமானது பஜாஜ் சிடி100 கேஎஸ் பைக்... முழு விபரம்!

ரியர் வியூ மிரர்களின் பிடி பெரிதாக மாற்றம் கண்டுள்ளது. அதேபோன்று, க்ளியர் லென்ஸ் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் பஜாஜ் சிடி100 பைக்கின் மதிப்பை வெகுவாக உயர்த்தும் வகையில் உள்ளன.

8 புதிய அம்சங்களுடன் அறிமுகமானது பஜாஜ் சிடி100 கேஎஸ் பைக்... முழு விபரம்!

புதிய பஜாஜ் சிடி100 கேஎஸ் பைக் மாடலானது நீல வண்ண ஸ்டிக்கர் அலங்காரத்துடன் க்ளாஸ் எபோனி பிளாக் என்ற நீலம்- கருப்பு வண்ணத் தேர்விலும், மஞ்சள் வண்ண ஸ்டிக்க்ர் அலங்காரத்துடன் மேட் ஆலிவ் க்ரீன் என்ற மஞ்சள் - பச்சை வண்ணத் தேர்விலும், சிவப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரத்துடன் க்ளாஸ் ஃப்ளேம் என்ற சிவப்பு வண்ணத் தேர்விலும் கிடைக்கும்.

Most Read Articles

English summary
Bajaj Auto has launched refreshed CT100 with 8 new features ahead of diwali festival.
Story first published: Monday, October 26, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X