பிஎஸ்6 தரத்தில் பஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 & ஸ்ட்ரீட் 160 பைக்குகள் சந்தையில் அறிமுகம்...

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் மொத்த மோட்டார்சைக்கிள் லைன்-அப்பையும் பிஎஸ்6 தரத்திற்கு கொண்டு வந்துவிட்டது. இந்த வகையில் தற்போது புதிய பிஎஸ்6 பைக் மாடல்களாக 2020 பஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 மற்றும் அவென்ஜெர் ஸ்ட்ரீட் 160 சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் பஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 & ஸ்ட்ரீட் 160 பைக்குகள் சந்தையில் அறிமுகம்...

தற்போதைய பிஎஸ்4 மாடலில் இருந்து பெரிய அளவில் எந்த அப்டேட்டையும் பெறாத இந்த இரு பிஎஸ்6 பைக்குகளில் 2020 பஜாஜ் அவென்ஜெர் ஸ்ட்ரீட் 160-ன் விலை ரூ.12,000 அதிகரிக்கப்பட்டு ரூ.93,677 ஆகவும், 2020 அவென்ஜெர் க்ரூஸ் 220-ன் விலை ரூ.11,500 அதிகரிக்கப்பட்டு ரூ1.16 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் பஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 & ஸ்ட்ரீட் 160 பைக்குகள் சந்தையில் அறிமுகம்...

முன்பே கூறியதுபோல் அதே டிசைன் அமைப்பை தான் இந்த பிஎஸ்6 பைக்குகள் பெற்றுள்ளதால் பெரிய அளவிலான விண்ட்ஸ்க்ரீன் உள்ளிட்டவை பிஎஸ்4 மாடலில் இருந்து தொடர்ந்துள்ளன. இதேபோல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பெட்ரோல் டேங்கில் இரண்டாம் நிலை திரை உள்ளிட்டவையும் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் பஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 & ஸ்ட்ரீட் 160 பைக்குகள் சந்தையில் அறிமுகம்...

டிசைன்கள் மட்டுமின்றி ஹேண்டில்பார்களின் வடிவிலும் எந்த மாற்றமும் இல்லை. அவென்ஜெர் க்ரூஸ் 220 பிஎஸ்6 பைக்கில் வழக்கமான 220சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு, ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-ல் 18.7 பிஎச்பி பவரையும், 7000 ஆர்பிஎம்-ல் 17.5 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கவுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் பஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 & ஸ்ட்ரீட் 160 பைக்குகள் சந்தையில் அறிமுகம்...

இந்த என்ஜின் பிஎஸ்4 தரத்தில் 19 பிஎச்பி பவரை வெளிப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ட்ரான்ஸ்மிஷனிற்கு இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வருகிறது. 2020 அவென்ஜெர் ஸ்ட்ரீட் 160 பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கான 160சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் பஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 & ஸ்ட்ரீட் 160 பைக்குகள் சந்தையில் அறிமுகம்...

இந்த 160சிசி என்ஜின் பைக்கிற்கு வழங்கக்கூடிய ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றத்தையும் பஜாஜ் நிறுவனம் கொண்டுவரவில்லை. இதனால் வழக்கமான 14.8 பிஎச்பி பவர் மற்றும் 13.7 என்எம் டார்க் திறனை தான் வெளிப்படுத்தவுள்ளது. இந்த என்ஜின் உடனும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் தான் வழங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் பஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 & ஸ்ட்ரீட் 160 பைக்குகள் சந்தையில் அறிமுகம்...

இந்த இரு பிஎஸ்6 பைக்குகளிலும் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்புறத்திலும், ட்யூல் ஷாக் அப்சார்ஸ் பின்புறத்திலும் சஸ்பென்ஷன் அமைப்புகளாக பொருத்தப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை முன் சக்கரத்தில் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் ட்ரம்மும் கவனிக்கவுள்ளன. இவற்றுடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் நிலையாக உள்ளது.

பிஎஸ்6 தரத்தில் பஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 & ஸ்ட்ரீட் 160 பைக்குகள் சந்தையில் அறிமுகம்...

பஜாஜ் அவென்ஜெர் 220 மாடலுக்கு எந்த பைக்கும் நேரடியாக போட்டியினை தருவதில்லை. ஸ்ட்ரீட் 160 மட்டும் சுசுகி இண்ட்ரூடர் 155 பைக் உடன் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது. சுசுகி நிறுவனத்தின் இந்த 155சிசி பைக்கும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
BS6 Bajaj Avenger Cruise 220 & Street 160 Launched In India; Prices Start At ₹ 93,677
Story first published: Friday, April 3, 2020, 21:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X