Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விற்பனையில் முதல் மைல்கல்லை எட்டியது பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்!
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஒருவழியாக விற்பனையில் முதல் மைல்கல்லை தொட்டுள்ளது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இருசக்கர வாகன உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பைக் உற்பத்தியில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், எதிர்கால சந்தையை மனதில் வைத்து முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஓர் ஆண்டுக்கு முன் விற்பனைக்கு கொண்டு வந்தது.

ஏற்கனவே பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்த சேத்தக் என்ற பெயரிலேயே இந்த முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் விரைவாக இந்த ஸ்கூட்டர் பிரபலமானது.

முதல்கட்டமாக புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டுமே இந்த ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கிட்டத்தட்ட ஓர் ஆண்டு நெருங்கும் இவ்வேளையில், சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை 1,000 யூனிட்டுகள் என்ற முதல் மைல்கல்லை தொட்டுள்ளது.

புனே மற்றும் பெங்களூர் நகரங்களை தவிர்த்து நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், விற்பனை இலக்கு எதிர்பார்த்த அளவு அமையவில்லை. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, பஜாஜ் நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, விற்பனை படிப்படியாக முன்னேற்றம் காணத் துவங்கி இருக்கிறது. மாதத்த்திற்கு மாதம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்த ஸ்கூட்டர் பெற்று வருகிறது.

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பனைட் மற்றும் பிரிமீயம் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த இரண்டு வேரியண்ட்டுகளிலும் 3kWh லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 4kWh எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 கிமீ வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும் வாய்ப்பை வழங்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணிநேரம் பிடிக்கும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்கு, எல்இடி டெயில் லைட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது.

புதிய பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரின் அர்பனைட் வேரியண்ட்டில் சிட்ரஸ் ரஷ் மற்றும் சைபர் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரிமீயம் வேரியண்ட்டில் சிட்ரஸ் ரஷ், ஹசல்நட், புரூக்ளீன் பிளாக், வெல்லூட்டோ ராஸ்ஸோ மற்றும் இன்டிகோ மெட்டாலிக் ஆகிய வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ரூ.1.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா நெருக்கடியில் இருந்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் மெல்ல விடுபட்டு வரும் நிலையில், விரைவில் சென்னை உள்ளிட்ட நாட்டின் இதர முக்கிய நகரங்களிலும் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.