சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையில் இலாபத்தை பார்க்கும் பஜாஜ்!! வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

சந்தையில் அறிமுகமானதில் இருந்து பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 1,000 யூனிட்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த அட்டவணையை இந்த செய்தியில் பார்ப்போம்.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையில் இலாபத்தை பார்க்கும் பஜாஜ்!! வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை இந்தியாவில் பெரிய அளவில் இப்போதுவரையில் இல்லை என்பதை இங்கு முதலில் சொல்லியாக வேண்டும். அத்தகைய நிலைக்கு இந்திய சந்தை செல்ல இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையில் இலாபத்தை பார்க்கும் பஜாஜ்!! வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

ஆனால் நிச்சயம் இந்தியா மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து போக்குவரத்தும் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இதற்கு ஏற்ப இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மிகவும் மெதுவாக வளர்ச்சியை கண்டு வருகிறது.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையில் இலாபத்தை பார்க்கும் பஜாஜ்!! வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

இந்தியாவில் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் குறைந்தது ஒரு எலக்ட்ரிக் வாகனத்தையாவது தனது லைன்-அப்பில் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த வகையில் இந்த 2020ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து வெளிவந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் தான் சேத்தக்.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையில் இலாபத்தை பார்க்கும் பஜாஜ்!! வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

தற்சமயம் பஜாஜின் ஒரே எலக்ட்ரிக் வாகனமான சேத்தக், அறிமுகமானதில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் வரையில் விற்பனையில் 1000 யூனிட்களை கடந்துள்ளது. இந்த விற்பனை எண்ணிக்கை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு மிகவும் சிறியது தான் என்றாலும், நிறுவனத்தின் இவி வணிகத்திற்கு மிகவும் முக்கிய உந்துதலாக இருக்கும்.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையில் இலாபத்தை பார்க்கும் பஜாஜ்!! வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

2020ஆம் ஆண்டின் மத்தியில் உலகளவில் ஆட்டோமொபைல் துறை மிக பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இதற்கு இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை மட்டும் என்ன விதிவிலக்கா. இந்த வருட துவக்கத்தில் சுமாரான விற்பனையுடன் துவங்கிய சேத்தக், அதன்பின் ஏப்ரலில் இருந்து ஜூன் மாதம் வரையில் அந்த 3 மாதங்களில் பூஜ்ஜிய விற்பனையையே சந்தையில் பதிவு செய்துள்ளது.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையில் இலாபத்தை பார்க்கும் பஜாஜ்!! வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு
2020 Chetak iQube
January 21 0
February 100 0
March 91 18
April 0 0
May 0 0
June 0 30
July 120 23
August 192 23
September 288 7
October 258 32
Total 1,070 133

இருப்பினும் கடந்த 2020 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கணிசமான எண்ணிக்கையில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1 லட்சம் என்ற அளவில் உள்ளது.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையில் இலாபத்தை பார்க்கும் பஜாஜ்!! வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

பஜாஜ் சேத்தக்கிற்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் டிவிஎஸ் மோட்டார்ஸின் ஐக்யூப் கடந்த 2019ஆம் வருட மத்தியில் இருந்தே விற்பனையில் உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த 2020ஆம் வருடத்தில், கடந்த அக்டோபர் மாதம் வரையில் வெறும் 133 யூனிட்கள் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #பஜாஜ் ஆட்டோ
English summary
Bajaj Chetak elecreic sales cross 1,000 units. That will help establish the Bajaj EV business in more noticeable manner in the years to come.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X