Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விற்பனையில் வெற்றிநடைப்போடும் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! டிவிஎஸ் ஐக்யூப்-ஐ மீண்டும் முந்தியது
2020 நவம்பர் மாத விற்பனையில் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரை மீண்டும் ஒரு முந்தியுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 நவம்பர் மாதத்தில் விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கை ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், கொரோனாவினால் சரிவை சந்தித்துவந்த ஆட்டோமொபைல் துறை சிறிது சிறிதாக முன்னேற்றத்தை கண்டுவருவதை அவற்றின் மூலம் காண முடிகிறது.

ஏனெனில் சில நிறுவனங்கள் தற்போதைய சூழலிலும் நேர்மறையான விற்பனை எண்ணிக்கையை பெற்று வருகின்றன. நாம் தற்போது பார்க்கப்போவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை நிலவரத்தை பற்றி.

இந்திய சந்தையில் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சந்தைப்படுத்தி வருகின்றன. இதில் சேத்தக் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 264 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் 99 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் புனேவில் உள்ள 5 டீலர்ஷிப்கள் மூலமாகவும், பெங்களூருவில் உள்ள 13 டீலர்ஷிப் மையங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஐக்யூப் ஸ்கூட்டரை விற்க டிவிஎஸ் நிறுவனம் பெங்களூருவில் உள்ள 10 டீலர்ஷிப்களை பயன்படுத்துகிறது. சேத்தக் விற்பனைக்கு கிடைப்பதைப் பொறுத்தவரை, பஜாஜ் ஆட்டோ இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகளவில் ஸ்டாக்கில் கொண்டுள்ளது.

இதன் காரணமாக டிவிஎஸ் ஐக்யூப் உடன் ஒப்பிடும்போது சேத்தர் ஸ்கூட்டர் அதிக டீலர்ஷிப் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் பழமையான பெயரை கொண்ட சேத்தக்கின் ரெட்ரோ கிளாசிக் ஸ்டைலிங் தோற்றம், பழமையான தோற்றம் கொண்ட வாகனங்களை விரும்புகிறார்களை ஈர்க்கிறது என்பதே உண்மை.

இதுவே, இந்த நவம்பர் மாதம் மட்டுமில்லாமல் கடந்த மாதங்களிலும் ஐக்யூப்-ஐ காட்டிலும் சேத்தக்கின் அதிகப்படியான விற்பனைக்கு காரணமாகும். 2020 ஏப்ரல் - நவம்பர் மாத காலத்தில் மொத்தம் 1,122 பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் இந்த ஆறு மாதத்தில் மொத்தமாகவே வெறும் 234 டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களே விற்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை சேத்தக்கின் கடந்த நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் குறைவு என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

இதனால் ஐக்யூப் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படும் டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே அதன் விற்பனையை டிவிஎஸ் அதிகப்படுத்த முடியும். இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுடன் விரைவில் சுஸுகியின் பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் இணையவுள்ளது.