பஜாஜ் சேத்தக் பற்றி வெளியாகிய ஷாக் தகவல்... மிரண்டுபோன மின்சார ஸ்கூட்டர் பிரியர்கள்... என்ன தெரியுமா

பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் பற்றிய அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

பஜாஜ் சேத்தக் பற்றி வெளியாகிய ஷாக் தகவல்... மிரண்டுபோன மின்சார ஸ்கூட்டர் பிரியர்கள்... என்ன தெரியுமா?

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு பெயர்போன நிறுவனமான பஜாஜ், வெகு நீண்ட நாட்களுக்கு பின்னர் அண்மையில்தான் ஸ்கூட்டர் தயாரிப்பில் களமிறங்கியது. அதன் புகழ்வாய்ந்த சேத்தக் ஸ்கூட்டருக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக, அதனை நவீன கால இருசக்கர வாகனங்களுக்கு இணையான தோற்றத்தில் அறிமுகப்படுத்தியது.

பஜாஜ் சேத்தக் பற்றி வெளியாகிய ஷாக் தகவல்... மிரண்டுபோன மின்சார ஸ்கூட்டர் பிரியர்கள்... என்ன தெரியுமா?

ஆனால், இம்முறை எரிபொருளால் இயங்கும் வாகனமாக அல்லாமல் மின்சார ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தியது. எனவே இந்த ஸ்கூட்டர் மீது இந்தியர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவியது. ஆனால், இந்த ஸ்கூட்டரின் விற்பனையை நாடு முழுவதுமாக அல்லாமல் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே அந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

பஜாஜ் சேத்தக் பற்றி வெளியாகிய ஷாக் தகவல்... மிரண்டுபோன மின்சார ஸ்கூட்டர் பிரியர்கள்... என்ன தெரியுமா?

பெங்களூரு மற்றும் புனே ஆகிய இரு நகரங்களில் மட்டுமே சேத்தக் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. பஜாஜ் நிறுவனத்தின் இந்த செயல் ஏமாற்றத்தை அளித்து வந்தநிலையில் கூடுதல் ஏமாற்றத்தை வழங்கும் விதமாக அதன் புக்கிங்கையும் பஜாஜ் நிறுத்தியுள்ளது.

பஜாஜ் சேத்தக் பற்றி வெளியாகிய ஷாக் தகவல்... மிரண்டுபோன மின்சார ஸ்கூட்டர் பிரியர்கள்... என்ன தெரியுமா?

ஆம், பஜாஜ் நிறுவனம் சேத்தக் மின்சார ஸ்கூட்டருக்கான புக்கிங்கை தற்போது நிறுத்தி வைத்துள்ளது. இதன் புக்கிங் மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்ற தகவலை அறிவிக்காமல், நிறுத்தத்திற்கான தகவலை மட்டும் அது வெளியிட்டுள்ளது. இதற்கு பஜாஜ் சேத்தக்கிற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஜாஜ் சேத்தக் பற்றி வெளியாகிய ஷாக் தகவல்... மிரண்டுபோன மின்சார ஸ்கூட்டர் பிரியர்கள்... என்ன தெரியுமா?

ஆம், ஆரம்பத்தில் நல்ல டிமாண்டைப் பெற்று வந்த பஜாஜ் சேத்தக் கொரோனா வைரசால் நிலவிய பொதுமுடக்கத்திற்கு பின்னர் மிகப் பெரிய சரிவைச் சந்தித்து வருகின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், அண்மைக் காலங்களாக இதன் புக்கிங் எதிர்பாராத அளவில் குறையத் தொடங்கியிருக்கின்றது. எனவேதான், இந்த மின்சார ஸ்கூட்டருக்கான புக்கிங் மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்ற தகவலை வெளியிடாமலே அது நிறுத்தியிருக்கின்றது.

பஜாஜ் சேத்தக் பற்றி வெளியாகிய ஷாக் தகவல்... மிரண்டுபோன மின்சார ஸ்கூட்டர் பிரியர்கள்... என்ன தெரியுமா?

பஜாஜ் நிறுவனம், சேத்தக் மின்சார ஸ்கூட்டரை நடப்பாண்டின் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது. ஆரம்பகட்டம் என்பதனாலேயே புனே மற்றும் பெங்களூருவில் இந்த ஸ்கூட்டரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. மேலும், வெகுவிரைவில் பிற நகரங்களிலும் களமிறக்க அது திட்டமிட்டிருந்தது. ஆனால், உயிர் கொல்லி வைரஸ் கொரோனா பரவல் இதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

பஜாஜ் சேத்தக் பற்றி வெளியாகிய ஷாக் தகவல்... மிரண்டுபோன மின்சார ஸ்கூட்டர் பிரியர்கள்... என்ன தெரியுமா?

அதேசமயம், பஜாஜ் நிறுவனம் சேத்தக்கிற்கு உருவாக்கிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை இன்னும் முடுக்கிவிடவில்லை. ஆகையால், விரைவில் சேத்தக்கிற்கான புக்கிங் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

பஜாஜ் சேத்தக் பற்றி வெளியாகிய ஷாக் தகவல்... மிரண்டுபோன மின்சார ஸ்கூட்டர் பிரியர்கள்... என்ன தெரியுமா?

பஜாஜ் நிறுவனத்தின் இந்த புக்கிங் நிறுத்தத்திற்கு மற்றுமொரு காரணமும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன நாட்டுக்கு எதிராக வினையாற்றும் விதமாக அந்நாட்டு தயாரிப்பு பொருள்களுக்கு நாடு முழுவதும் தடைவிதித்த நிலை காணப்படுகின்றது. இந்த நிலை, சேத்தக்கிற்கான உபரி பாகங்களை இறக்குமதி செய்வதில் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதனாலும் புதிய ஸ்கூட்டர்களுக்கான புக்கிங் ஏற்கப்படுவதில்லை என கூறப்படுகின்றது.

பஜாஜ் சேத்தக் பற்றி வெளியாகிய ஷாக் தகவல்... மிரண்டுபோன மின்சார ஸ்கூட்டர் பிரியர்கள்... என்ன தெரியுமா?

இந்தியா-சீனா இடையில் நடந்து வரும் எல்லை பதற்றம் பஜாஜ் நிறுவனத்திற்கு மட்டுமின்றி நாட்டின் பிற முக்கிய நிறுவனங்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக கூறுகளின் விநியோகத்தை இது பாதித்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால் பஜாஜ் ஏற்கனவே பெற்றிருக்கும் புக்கிங்குகளுக்கு வாகனங்களை டெலிவரி கொடுப்பதும் கடினமாகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஜாஜ் சேத்தக் பற்றி வெளியாகிய ஷாக் தகவல்... மிரண்டுபோன மின்சார ஸ்கூட்டர் பிரியர்கள்... என்ன தெரியுமா?

இதே சவாலைதான் இந்தியாவின் பிற மின் வாகன தயாரிப்பாளர்களும் எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது எதிர்வரும் காலத்திற்கான உற்பத்திக்கும் தடைவிதிக்கும்.

பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரில் 3.0kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ரூ.1 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் இது விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Chetak Electric Scooter Booking Closed. Read In Tamil.
Story first published: Saturday, September 12, 2020, 16:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X