விலையுயர்ந்த டூ-வீலராக மாறும் பட்ஜெட் பைக்! இந்தியர்களை மிரள வைத்த பஜாஜ் நிறுவனத்தின் முடிவு!

இந்தியாவின் மலிவு விலை பைக் என்று போற்றப்பட்டு வரும் பஜாஜ் பிளாட்டினா விலையுயர்வைப் பெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

விலையுயர்ந்த டூ-வீலராக மாறும் பட்ஜெட் பைக்! இந்தியர்களை மிரள வைத்த பஜாஜ் நிறுவனத்தின் முடிவு!

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் மலிவு விலையில் விற்பனையாகும் பைக்குளில் பஜாஜ் நிறுவனத்தின் சிடி 100 பைக்கும் ஒன்று.

இது பட்ஜெட் டூ வீலர் பிரியர்களின் மிகவும் பிடித்தமான மோட்டார்சைக்கிளில் ஒன்றாகவும் இருந்து வருகின்றது. இதன்காரணத்தினாலயே இந்திய சந்தையில் அமோகமான வரவேற்பைப் பெற்று வரும் பைக்குகளில் ஒன்றாக இது உள்ளது.

விலையுயர்ந்த டூ-வீலராக மாறும் பட்ஜெட் பைக்! இந்தியர்களை மிரள வைத்த பஜாஜ் நிறுவனத்தின் முடிவு!

குறிப்பாக, மலிவு விலையில், குறைந்த பராமரிப்பை விரும்பும் வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் பைக்காக இது இருந்து வருகின்றது. இதனாலயே, இந்த பைக்கை அதிகளவில் கிராமப்புற வாசிகள் விரும்புகின்றனர். ஏனென்றால், இந்த பைக் அதிக மைலேஜை குறைந்த எரிபொருள் செலவில் வழங்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கின்றது.

விலையுயர்ந்த டூ-வீலராக மாறும் பட்ஜெட் பைக்! இந்தியர்களை மிரள வைத்த பஜாஜ் நிறுவனத்தின் முடிவு!

எனவே, தினசரி பயனர்கள் மற்றும் அதிக மைலேஜை விரும்பும் மக்களிடத்தில் இந்த பைக் புகழ்வாய்ந்த மாடலாக இருந்து வருகின்றது.

இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் அதிரடியாக இந்த பைக்கின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு அதன் ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலையுயர்ந்த பைக்காக மாறும் மலிவு விலை பஜாஜ் சிடி100... பட்ஜெட் வாகன பிரியர்களை இதைவிட வேற எதுவும் கஷ்டப்படுத்த முடியாது...

குறிப்பாக, பட்ஜெட் வாகனங்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் சிடி100 பைக்கின் விலையுயர்வை அறிந்ததில் இருந்து ஷாக்கடித்ததைப் போன்று உறைந்திருக்கின்றனர்.

ஆம், பஜாஜ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள பஜாஜ் சிடி100 பிஎஸ்-6 பைக்கின் விலையில் அதிரடியாக ரூ. 1,497 வரை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வால் சிடி100 பைக் சற்றே விலையுயர்ந்த பைக்காக மாறியுள்ளது.

விலையுயர்ந்த பைக்காக மாறும் மலிவு விலை பஜாஜ் சிடி100... பட்ஜெட் வாகன பிரியர்களை இதைவிட வேற எதுவும் கஷ்டப்படுத்த முடியாது...

பஜாஜ் சிடி100 தற்போது இந்திய சந்தையில் இரு வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. ஒன்று கிக் ஸ்டார்ட் வேரியண்டிலும், மற்றொன்று எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்டிலும் கிடைத்து வருகின்றது.

இதில், கிக் ஸ்டார்ட் வேரியண்டின் விலை ரூ. 42,790 என்றும், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்டின் விலை ரூ. 50,470 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த பைக்காக மாறும் மலிவு விலை பஜாஜ் சிடி100... பட்ஜெட் வாகன பிரியர்களை இதைவிட வேற எதுவும் கஷ்டப்படுத்த முடியாது...

மேற்கூறிய இரண்டும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். எனவே, தமிழகத்தில் இந்த விலை சற்றே கூடுதலாக இருக்கும். பஜாஜ் நிறுவனம் சிடி100 பைக்கின் விலையை உயர்த்துவது இது முதல் முறையல்ல. சமீபத்தில்தான் இதன் விலையை கணிசமாக உயர்த்தியிருந்தது.

விலையுயர்ந்த பைக்காக மாறும் மலிவு விலை பஜாஜ் சிடி100... பட்ஜெட் வாகன பிரியர்களை இதைவிட வேற எதுவும் கஷ்டப்படுத்த முடியாது...

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் கடந்த மாதம்தான் இதன் விலை உயர்த்தியிருந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் இம்மாதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வு பஜாஜ் சிடி100 பைக்கின் விற்பனையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும், இந்த விலையுயர்வு எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என ஆட்டோத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

விலையுயர்ந்த பைக்காக மாறும் மலிவு விலை பஜாஜ் சிடி100... பட்ஜெட் வாகன பிரியர்களை இதைவிட வேற எதுவும் கஷ்டப்படுத்த முடியாது...

பஜாஜ் சிடி100 பைக்கில் 102 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் எலெக்ட்ரானிக் இன்ஜெக்டட் தொழில்நுட்பத்தில் இயங்கும். எனவே முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக மைலேஜை வழங்கும் என தெரிகின்றது.

விலையுயர்ந்த பைக்காக மாறும் மலிவு விலை பஜாஜ் சிடி100... பட்ஜெட் வாகன பிரியர்களை இதைவிட வேற எதுவும் கஷ்டப்படுத்த முடியாது...

4 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 7.7 பிஎச்பி பவரை 7,500 ஆர்பிஎம்மிலும், 8.34 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

இத்துடன், சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

விலையுயர்ந்த பைக்காக மாறும் மலிவு விலை பஜாஜ் சிடி100... பட்ஜெட் வாகன பிரியர்களை இதைவிட வேற எதுவும் கஷ்டப்படுத்த முடியாது...

இது முன்பக்கத்தில் மட்டும் காணப்படுகின்றது. பின்பக்கத்தில் ட்யூவல் ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது பள்ளம் மேடுகள் நிறைந்த சாலையில் அதிக குலுங்கள் இல்லாமல் செல்ல உதவும்.

பைக்கின் ஒட்டுமொத்த எடை 114 கிகி ஆகும். இதில் 17 இன்ச் அளவுடைய வீல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் டிரம் பிரேக் வசதி மட்டுமே சிபிஎஸ் வசதியுடன் கிடைக்கின்றது. இந்த பைக் இந்தியாவில் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் மற்றும் டிவிஎஸ் ஸ்போர்ட் ஆகிய பைக்குகளுக்கு விற்பனையில் டஃப் கொடுத்து வருகின்றது.

விலையுயர்ந்த பைக்காக மாறும் மலிவு விலை பஜாஜ் சிடி100... பட்ஜெட் வாகன பிரியர்களை இதைவிட வேற எதுவும் கஷ்டப்படுத்த முடியாது...

பஜாஜ் நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்துவது மட்டுமின்றி மின்சார வாகனங்களை அறிமுகம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது.

அந்தவகையில், விரைவில் பஜாஜ் மற்றும் கேடிஎம் கூட்டணியில் புதிய உயர் ரக பெர்ஃபார்மென்ஸ் பைக் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலையுயர்ந்த பைக்காக மாறும் மலிவு விலை பஜாஜ் சிடி100... பட்ஜெட் வாகன பிரியர்களை இதைவிட வேற எதுவும் கஷ்டப்படுத்த முடியாது...

அந்த மின்சார பைக்குகளின் செயல்திறன் 3 கிலோவாட் முதல் 10 கிலோவாட் வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனை உற்பத்தி செய்யும் பணியில் இரு நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருவதால் அது 2022ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மின்சார பைக்கைத் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட மின்சார பைக்குகளும் களமிறக்கப்பட இருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த பைக்காக மாறும் மலிவு விலை பஜாஜ் சிடி100... பட்ஜெட் வாகன பிரியர்களை இதைவிட வேற எதுவும் கஷ்டப்படுத்த முடியாது...

தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் விலையுயர்வை பட்டியலில் பார்க்கலாம்:

வேரியண்ட் பழைய விலை புதிய விலை விலையுயர்வு
கிக் ஸ்டார்ட் வேரியண்ட் ₹40,794 ₹42,790 ₹1,996
எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்ட் ₹48,474 ₹50,470 ₹1,996
Most Read Articles

மேலும்... #பஜாஜ் #bajaj auto
English summary
Bajaj CT 100 BS6 gets price hike Rs. 1,497. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X