இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது பஜாஜ் டிஸ்கவர் 110 & 125...

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டிஸ்கவர் வரிசையில் உள்ள 110சிசி மற்றும் 125சிசி பைக்குகளின் விற்பனை இந்தியாவில் நிறுப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகள் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படாததால் பஜாஜ் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது பஜாஜ் டிஸ்கவர் 110 & 125...

இந்தியாவில் வாகனங்களை சந்தைப்படுத்தி வரும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக தங்களது தயாரிப்புகளை அப்டேட் செய்து வருகின்றன. பிஎஸ்6-க்கு அப்டேட் செய்ய விருப்பம் இல்லாத வாகனங்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தவும் அவை மறப்பதில்லை.

இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது பஜாஜ் டிஸ்கவர் 110 & 125...

இந்த வகையில் தான் பஜாஜ் நிறுவனம் டிஸ்கவர் 110 & 125 பைக்குகளின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் டிஸ்கவர் பெயர்பலகை பழமையான ஒன்றாகும். கிட்டத்தட்ட 16 வருடங்களாக டிஸ்கவர் மாடல் பைக்குகளை இந்நிறுவனம் இந்தியாவில் சந்தைப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது பஜாஜ் டிஸ்கவர் 110 & 125...

முதன்முதலில் 125சிசி-ல் கொண்டுவரப்பட்ட பஜாஜ் டிஸ்கவர் மாடல், பிறகு 100, 135 மற்றும் 150சிசி-க்கு நீட்டிக்கப்பட்டது. இந்த பைக்குகளில் தொடர்ச்சியாக டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளிட்ட வன்பொருள் அப்கிரேட்களை இந்நிறுவனம் வழங்கி வந்துள்ளது.

இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது பஜாஜ் டிஸ்கவர் 110 & 125...

இதனால் வாடிக்கையாளர்கள் இடையே டிஸ்கவர் பைக்கிற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததால், கடந்த ஆண்டில் மட்டும் இந்த மாடலின் 30 வேரியண்ட்களை பஜாஜ் நிறுவனம் சந்தைப்படுத்தி இருந்தது. தற்போது விற்பனை நிறுத்தப்பட்டுள்ள டிஸ்கவர் 110 மற்றும் 125 பைக்குகளை கடந்த 2018ல் அறிமுகப்படுத்தியது.

MOST READ:அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு... மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்... நடுங்க வைக்கும் போலீஸ்

இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது பஜாஜ் டிஸ்கவர் 110 & 125...

எளிமையான டிசைன் அமைப்பை கொண்டிருந்தாலும் இந்த பைக்கில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த தொழிற்நுட்பங்கள் வழங்கப்படவில்லை. இதனால் டிஸ்கவர் மாடலின் இந்த இரு பைக்குகளின் விற்பனையும் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது.

MOST READ:இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சதமாக்கும் விஷ கிருமிகள்.. கொரோனா வைரசைவிட கொடியவர்கள் இவர்..

இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது பஜாஜ் டிஸ்கவர் 110 & 125...

பஜாஜ் டிஸ்கவர் 110 மற்றும் 125சிசி பைக்குகள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் நிறுத்தப்படவுள்ளதா என்பது சரியாக தெரியவில்லை. ஏனெனில் சில நாடுகள் இன்னமும் புதிய மாசு உமிழ்வு விதியை அமலுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் மைலேஜ் 15 சதவீதம் அதிகரிப்பு... விலையும் 8 ஆயிரம் உயர்வு...

இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது பஜாஜ் டிஸ்கவர் 110 & 125...

முன்னதாக பஜாஜ் நிறுவனம் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட சிடி மற்றும் ப்ளாடினா பைக்குகளை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த மலிவு பைக்குகள் மட்டுமில்லாமல் பல்சர் என்எஸ்200 போன்ற இளம் தலைமுறையினர் இடையே பிரபலமாக உள்ள மோட்டார்சைக்கிள்களையும் பிஎஸ்6 தரத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #பஜாஜ் #bajaj auto
English summary
Bajaj Discover 110 & 125 Discontinued In India
Story first published: Sunday, April 5, 2020, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X