பஜாஜ் டிஸ்கவர் விற்பனையில் இருந்து நீக்கம்... பிஎஸ்6 எஞ்சினுடன் வருமா?

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த பஜாஜ் டிஸ்கவர் பைக் மாடல்கள் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த பைக் மாடல்கள் பிஎஸ்6 அப்டேட் பெறுமா என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் விற்பனையில் இருந்து நீக்கம்?... பிஎஸ்6 எஞ்சினுடன் வருமா?

பிஎஸ்6 மாசு உமிழ்வு அமலுக்கு வந்த நிலையில், பல பிரபலமான வாகன மாடல்கள் சந்தையிலிருந்து விடைபெற்றுள்ளன. பல ஆண்டு காலமாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற மாடல்களுக்கு கூட இந்த கடுமையான மாசு உமிழ்வு விதிகள் ஆப்பு வைத்துவிட்டன.

பஜாஜ் டிஸ்கவர் விற்பனையில் இருந்து நீக்கம்?... பிஎஸ்6 எஞ்சினுடன் வருமா?

இந்த சூழலில், பஜாஜ் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களாக வலம் வந்த 110சிசி மற்றும் 125சிசி டிஸ்கவர் பைக்குகள் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் மத்தியில் டிஸ்கவர் பைக் மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றிருந்தன.

பஜாஜ் டிஸ்கவர் விற்பனையில் இருந்து நீக்கம்?... பிஎஸ்6 எஞ்சினுடன் வருமா?

சரியான பட்ஜெட், அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான பராமரிப்பு போன்றவை இந்த பைக்குகளுக்கு வலுவான வர்த்தகத்தை பெற்று தந்தன. மேலும், பஜாஜ் ஆட்டோ நிறுவனதின் விற்பனையிலும் இந்த டிஸ்கவர் பைக்குகள் இன்றியமையாத மாடல்களாகவே உள்ளன.

பஜாஜ் டிஸ்கவர் விற்பனையில் இருந்து நீக்கம்?... பிஎஸ்6 எஞ்சினுடன் வருமா?

கடந்த 16 ஆண்டுகளாக டிஸ்கவர் பைக் மாடல்கள் மார்க்கெட்டில் இருந்து வருகின்றன. தற்போது 110சிசி, 125சிசி டிஸ்கவர் மாடல்கள் இருந்தாலும், ஏற்கனவே 100சிசி, 135சிசி மற்றும் 150 மாடல்களும் விற்பனையில் வைக்கப்பட்டு இருந்தன.

பஜாஜ் டிஸ்கவர் விற்பனையில் இருந்து நீக்கம்?... பிஎஸ்6 எஞ்சினுடன் வருமா?

பல்சர் பைக் மாடல்களை விடை குறைவான விலையில் இந்த மாடல்கள் நிலைநிறுத்தப்பட்டு இருந்தன. இதனால், ஊரக சந்தையில் டிஸ்கவர் பைக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது.

பஜாஜ் டிஸ்கவர் விற்பனையில் இருந்து நீக்கம்?... பிஎஸ்6 எஞ்சினுடன் வருமா?

இந்த நிலையில், பிளாட்டினா, சிடி100, அவென்ஜர், பல்சர், டோமினார் ஆகிய பைக் மாடல்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தி அறிமுகம் செய்துவிட்டது. ஆனால், டிஸ்கவர் பைக்குகள் மட்டும் இதுவரை விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை.

பஜாஜ் டிஸ்கவர் விற்பனையில் இருந்து நீக்கம்?... பிஎஸ்6 எஞ்சினுடன் வருமா?

இந்த நிலையில், தற்போது 110சிசி மற்றும் 125சிசி மாடல்கள் மட்டும் விற்பனையில் இருந்து வந்தது. இதில், 110சிசி மாடலின் 115.4சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.4 பிஎச்பி பவரையும், 9.8 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருந்தது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருந்தது.

பஜாஜ் டிஸ்கவர் விற்பனையில் இருந்து நீக்கம்?... பிஎஸ்6 எஞ்சினுடன் வருமா?

டிஸ்கவர் 125சிசி மாடலில் இருந்த 124.5சிசி எஞ்சின் 10.7 பிஎச்பி பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருந்தது. இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த இரண்டு டிஸ்கவர் எஞ்சின்களுமே வாடிக்கையாளர் மத்தியில் அதிக மைலேஜ் தருவதற்காக பெயர் பெற்றவையாக இருந்தன.

பஜாஜ் டிஸ்கவர் விற்பனையில் இருந்து நீக்கம்?... பிஎஸ்6 எஞ்சினுடன் வருமா?

தறதற்போது விற்பனையில் இருந்து விலக்கப்பட்டாலும், கூடிய விரைவில் பிஎஸ்6 எஞ்சின் தேர்வுடன் டிஸ்கவர் மாடல்கள் மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் போட்டி அதிகமாக இருந்து வரும் நிலையில், வர்த்தகத்தை ஸ்திரப்படுத்த பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு இந்த இரு மாடல்களுமே மிக முக்கியமானதாக இருக்கின்றன.

Most Read Articles
English summary
Bajaj Auto has removed Discover bike models from website due to BS6 transition.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X