புதிய பஜாஜ் டோமினார் 250 பைக்கின் தோற்றம் எப்படி இருக்கும்..? முதல் டீசர் வீடியோ இதோ...!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து புதிய டோமினார் 250 பைக் இந்திய சந்தையில் மிக விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கிடையில் இந்த புத்தம் புதிய 250சிசி பைக்கின் முதல் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

புதிய பஜாஜ் டோமினார் 250 பைக்கின் முதல் டீசர் வீடியோ...!

டீலர்ஷிப் ஷோரூம்களில் ஏற்கனவே சென்றடைந்துவிட்ட டோமினார் 250 பைக் இந்தியாவில் வருகிற மார்ச் 20ஆம் தேதி விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் நான்காவது குவார்டர் லிட்டர் மோட்டார்சைக்கிளாக விளங்கவுள்ள இந்த பைக், கேடிஎம் ட்யூக் 250, ஹஸ்க்வர்னா விட்பிளேன் 250 மற்றும் ஸ்வர்ட்பிளேன் 250 உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு போட்டியாக கருதப்படுகிறது.

புதிய பஜாஜ் டோமினார் 250 பைக்கின் முதல் டீசர் வீடியோ...!

ப்ரீமியம் டோமினார் ப்ராண்ட்டில் தயாரிக்கப்பட்டு வருகின்ற இந்த பைக் வருங்கால வாடிக்கையாளர்களை கவரும் விதமாக மட்டுமில்லாமல் 250சிசி பைக்குகளை இந்தியாவில் பிரபலப்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனால் யமஹா எஃப்இசட்25 மற்றும் சுசுகி ஜிக்ஸெர் 250 பைக்குகளுடன் இந்தியன் ப்ரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் இந்த பைக் நிலைநிறுத்தப்படவுள்ளது. தோற்றத்தை பொறுத்த வரையில் பஜாஜின் இந்த டோமினார் 250சிசி பைக் டோமினார் 400 பைக் மாடலை கிட்டத்தட்ட ஒத்து காணப்படுகிறது.

புதிய பஜாஜ் டோமினார் 250 பைக்கின் முதல் டீசர் வீடியோ...!

ஆனால் வித்தியாசமான ஸ்விங்க் ஆர்ம், சிறிது வேறுப்பட்ட டிசைனில் அலாய் சக்கரங்கள் மற்றும் சிறிய அளவிலான டயர்களினால் டோமினார் 250 பைக், டோமினார் 400 மாடலில் இருந்து வித்தியாசப்படுகிறது. அதேபோல் இந்த 250சிசி பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள பளிச்சிடும் சிவப்பு நிறத்தேர்வும் டோமினார் 400 பைக்கிற்கு வழங்கப்படவில்லை.

எல்இடி-ல் ஹெட்லைட்டை கொண்டுள்ள புதிய பஜாஜ் டோமினார் 250 பைக், டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், சஸ்பென்ஷன் அமைப்பாக தலைக்கீழான டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க் மற்றும் பின்சக்கர மோனோஷாக் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

ப்ரேக்கிற்காக முன்புறம் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் ப்ரேக்குகளை கொண்டுள்ள இந்த பைக்கில் ட்யூல்-சேனல் அல்லது சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

புதிய பஜாஜ் டோமினார் 250 பைக்கின் முதல் டீசர் வீடியோ...!

கேடிஎம் ட்யூக் 250 மாடலில் உள்ள பிஎஸ்6 250சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜின் தான் இந்த 250சிசி பைக்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பஜாஜ் நிறுவனம் டோமினார் 250 மாடலின் செயல்பாடு தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக ட்ரிபிள்-ஸ்பார்க் முறையை இந்த பிஎஸ்6 என்ஜினில் கொண்டுவந்துள்ளது.

புதிய பஜாஜ் டோமினார் 250 பைக்கின் முதல் டீசர் வீடியோ...!

இதனால் கேடிஎம் ட்யூக் 250 பைக்கை விட சிறந்த எரிபொருள் திறனை டோமினார் 250 பைக்கில் எதிர்பார்க்கலாம். கேடிஎம் ட்யூக் 250 பைக்கிற்கு இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 28 பிஎச்பி பவரையும் 24 என்எம் டார்க் திறனையும் வழங்கி வருகிறது. இந்த என்ஜினுடன் அந்த பைக்கில் ட்ரான்ஸ்மிஷனிற்காக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் டோமினார் 250 பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.6 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த விலை மதிப்பினால் பஜாஜின் இந்த 250சிசி பைக் எண்ட்ரீ லெவல் ராயல் எண்ட்பீல்டு பைக்குகளுடனும் போட்டியிடவுள்ளது.

புதிய பஜாஜ் டோமினார் 250 பைக்கின் முதல் டீசர் வீடியோ...!

ஒருவேளை மேற்கூறப்பட்டுள்ள இதன் எக்ஸ்ஷோரூம் விலை உண்மையானால், இந்த 250சிசி பைக் தற்போதைய டோமினார் 400 மாடலை விட ரூ.30,000 குறைவான விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்திய சந்தையில் டோமினார் 400 பைக் மாடல் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை எண்ணிக்கைகளை பெறாததால், புதிய டோமினார் 250 மாடலின் மீது தான் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முழு நம்பிக்கையை வைத்துள்ளது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj dominor 250 first teaser
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X