பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லையாம் டோமினார் 250...

பஜாஜ் டோமினார் 400 பைக் மாடலின் சிறிய ரக மோட்டார்சைக்கிளாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற டோமினார் 250 பைக்கின் புதிய டெலிவிஷன் கமர்ஷியல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பஜாஜ் நிறுவனம் கூற வந்துள்ள கருத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லையாம் டோமினார் 250...

பெரிய என்ஜினை கொண்ட டோமினார் 400 பைக்கை கனவாக கொண்டிருந்தவர்களுக்கு புதிய டோமினார் 250 வர பிரசாதமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பஜாஜ் டோமினார் பைக்குகளுக்குரிய டிசைன் மற்றும் தோற்றத்தை அப்படியே பெற்றுள்ள இந்த 250சிசி பைக்கின் விலை மலிவானதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிவிசி வீடியோவில், ரைடர் ஒருவர் தனது டோமினார் 250 பைக்கை தேநீர் அருந்தும் இடத்திற்கு முன்பாக நிறுத்திவிட்டு உள்ளே செல்கிறார். பிறகு சிறிது நேரத்தில் டோமினார் 400 பைக்குகளுடன் குழுவாக ஜாலி ரைட் செல்பவர்கள் அவரது பைக்கிற்கு இருபுறமும் தங்களது பைக்குகளை நிறுத்துகின்றனர்.

பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லையாம் டோமினார் 250...

அதில் ஒருவர் தனது டோமினார் 250 பைக்கின் மீது கை வைத்து ஏதோ ஒன்று செய்வதை தேநீர் அருந்தும் இடத்தின் ஜன்னல் வழியாக அவர் பார்க்க, உடனே பைக்கை நோக்கி செல்கிறார். பிறகு தான் தெரிகிறது, அந்த நபர் டோமினார் 250 பைக்கில் திபெத்தியன் பிராத்தனைக்கான கொடியை கட்டியுள்ளார் என்பது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லையாம் டோமினார் 250...

இது டோமினார் 250 பைக்கை தேர்வு செய்து வாங்கியவரை பாராட்டும் விதத்தில் அமைகிறது. இத்துடன் இந்த விடியோ நிறைவடைகிறது. இதிலிருந்து சிறிய என்ஜினை தவிர்த்து டோமினார் 400 பைக்கிற்கு எந்த விதத்திலும் டோமினார் 250 பைக் சளைத்தது இல்லை என்பதை பஜாஜ் நிறுவனம் தெரிவிக்கிறது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லையாம் டோமினார் 250...

இருப்பினும் டோமினார் 400 பைக்குடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்த 250சிசி பைக் சிலவற்றில் வேறுபடுகிறது. அதாவது 250சிசி வெர்சனில் முன்புற சஸ்பென்ஷனிற்காக வழங்கப்பட்டுள்ள யுஎஸ்டி ஃபோர் சற்று தடிமனானதாகவும், மொத்த எடை 4 கிலோ குறைவானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லையாம் டோமினார் 250...

ப்ரேக் அமைப்பில் பின்புற டிஸ்க்கை பெரிய என்ஜின் பைக்கில் இருந்து பகிர்ந்து கொண்டாலும் டோமினார் 250 பைக்கில் முன்புற டிஸ்க் ப்ரேக் ஆனது சிறிய அளவில் தான் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் டோமினார் 400 பைக்கில் ரேடியல் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இதன் 250சிசி வெர்சனில் வழக்கமான டயர்களே உள்ளன.

பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லையாம் டோமினார் 250...

மற்றப்படி ஸ்லிப்பர் க்ளட்ச், எக்ஸாஸ்ட்டின் தொண்ட பகுதி மற்றும் இரட்டை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் 250சிசி வேரியண்ட்டில் கியர் பொசிஷனை காட்டுவதில்லை.

பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லையாம் டோமினார் 250...

டோமினார் 250 பைக்கில் கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் அடிப்படையிலான 248சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 26.6 பிஎச்பி பவரையும், 23.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லையாம் டோமினார் 250...

விற்பனையில் சுசுகி ஜிக்ஸெர் 250, யமஹா எஃப்இசட்25 பைக்குகளின் போட்டியினை எதிர்கொண்டு வரும் டோமினார் 250 பைக்கிற்கு எக்ஸ்ஷோரூமில் ரூ.1.6 லட்சத்தை விலையாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

English summary
Bajaj Dominar 250 TVC: Check it out
Story first published: Thursday, July 2, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X