ரூ.15,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக்...

பஜாஜ் நிறுவனம் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட புதிய டோமினார் பைக்கை இந்திய சந்தையில் இன்னும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் இந்த புதிய பிஎஸ்6 பைக் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.15,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக்...

இந்திய அரசாங்கம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய மாசு உமிழ்வு விதியை நாடு முழுவதும் அமல்படுத்தவுள்ளதால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது தயாரிப்பு வாகனங்களை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக தயாரித்து வருகின்றன. இதனால் பல நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக சிறிய அப்டேட்களுடன் பிஎஸ்6 வாகனங்களை சந்தையில் இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருகின்றன.

ரூ.15,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக்...

இதற்கு சிறந்த எடுத்துகாட்டு புதிய பஜாஜ் டோமினார். இந்த பைக் கிட்டத்தட்ட தற்போதைய பிஎஸ்4 மாடலின் டிசைனில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் தான் இந்த புதிய பிஎஸ்6 பைக் புனேக்கு அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.15,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக்...

ஏற்கனவே கூறியதுபோல் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த பிஎஸ்6 பைக் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் பிஎஸ்4 தோற்றத்தை தான் அப்படியே கொண்டுள்ளது. தற்போதைய பிஎஸ்4 டோமினார் பைக் வைன் ப்ளாக் மற்றும் அரோரா க்ரீன் என இரு விதமான நிறங்களில் மட்டுமே டீலர்ஷிப்களில் கிடைக்கிறது.

ரூ.15,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக்...

இதனால் இந்த புதிய பிஎஸ்6 பைக்கின் அறிமுகத்தை பயன்படுத்தி கூடுதலாக சில நிற தேர்வுகளை பஜாஜ் நிறுவனம் வழங்கும் என வாடிக்கையாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். நிற தேர்வுகள் மட்டுமின்றி அப்டேட்டான தொழிற்நுட்பங்களையும் இந்த புதிய பைக்கில் பஜாஜ் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

ரூ.15,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக்...

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக மாற்றப்பட்டுள்ள டோமினார் பைக்கில் 373சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்4 என்ஜினின் வெளியிடு ஆற்றலின் அளவான 34.5 பிஎச்பி பவரை விட அதிகமாக 39 பிஎச்பி வரையில் ஆற்றலை பைக்கிற்கு வழங்கவல்லது. இந்த பிஎஸ்6 என்ஜின் அதிகப்பட்சமாக வெளியிடும் டார்க் திறனின் அளவு 35 என்எம் ஆகும்.

ரூ.15,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக்...

இந்த புதிய பைக்கில் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் கூடிய 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அப்கிரேடான இசியூ யூனிட் மற்றும் அருமையான சத்தத்தை வெளிப்படுத்தக்கூடிய புதிய எக்ஸாஸ்ட் சிஸ்டம் போன்றவையும் இந்த டோமினார் பிஎஸ்6 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.15,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக்...

கேடிஎம் 390 ட்யூக் மாடலின் தொழிற்சாலையில் தான் இந்த பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேடிஎம் 390 ட்யூக் பைக்கானது 43 பிஎச்பி பவரையும் 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. கேடிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு பைக்குகள் அனைத்தும் பிஎஸ்4 தரத்தில் தான் தற்போதுவரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ரூ.15,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக்...

இந்நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடல் பைக்கான 390 அட்வென்ஜெர் சமீபத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த புதிய அட்வென்ஜெர் பைக் குறித்த முழுமையான தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

கேடிஎம் 390 அட்வென்ஜர் மீண்டும் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்...

ரூ.15,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக்...

பொதுவாக பைக் ஒன்று பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டால் அதன் வெளிப்படுத்தும் ஆற்றலானது குறையும். ஆனால் டோமினார் பிஎஸ்6 மாடலின் என்ஜினின் தரத்தில் அத்தகைய மாற்றங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. பிஎஸ்6-ரெடி என்கிற டேக் மட்டும் தான் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.15,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக்...

இருப்பினும் இந்த பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக்கின் பல முக்கியமான பாகங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பைக்கின் அதிர்வு, கிராஃபிக்ஸ், என்ஜினின் வெப்பம், ஸ்டைல் போன்ற பகுதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பைக்கின் வெளிப்புறத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து பேனல்களும் இரும்பால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ரூ.15,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக்...

விலை பிரிவில் சிறந்த டூரர் மோட்டார்சைக்கிளாக விளங்கும் பஜாஜ் டோமினாரின் தற்போதைய பிஎஸ்4-ன் விலை ரூ.1.90 லட்சமாக இந்திய எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 மாற்றத்தால் இந்த பைக் ரூ.15,000 வரையில் விலை அதிகரிப்பை பெறவுள்ளது. பஜாஜ் டோமினார் பைக்கிற்கு போட்டியாக கேடிஎம் 390 ட்யூக், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் போன்ற பைக்குகள் இந்திய சந்தையில் உள்ளன.

Source: Rushlane

Most Read Articles

மேலும்... #பஜாஜ் #bajaj auto
English summary
Bajaj Dominar BS6 spied on test in Pune ahead of launch
Story first published: Tuesday, January 7, 2020, 13:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X