அனைத்து மாடல் பல்சர் பைக்குகளின் விலையும் உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்தது?.. இதோ புதிய விலை பட்டியல்!

பஜாஜ் நிறுவனம் அதன் பல்சர் வரிசையில் இருக்கும் பைக்குகளின் விலையை மீண்டும் உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து மாடல் பல்சர் பைக்குகளின் விலையும் உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்தது?.. இதோ புதிய விலை பட்டியல்!

பஜாஜ் நிறுவனத்தின்கீழ் விற்பனைக்கு கிடைக்கும் புகழ்வாய்ந்த பைக்குகளில் பல்சர் மாடலும் ஒன்று. இந்த பெயரில் பன்முக தேர்வுகளை பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதில் விற்பனைக்குக் கிடைக்கும் வேரியண்டுகளின் விலையையே பஜாஜ் தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளது.

அனைத்து மாடல் பல்சர் பைக்குகளின் விலையும் உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்தது?.. இதோ புதிய விலை பட்டியல்!

இதனால் பல்சர் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்குகளின் விலை ரூ. 999 முதல் ரூ. 1,498 வரை விலையுயர்வைப் பெற்றிருக்கின்றன. இதனால், ரூ. 72,122 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்த பல்சர் 125 தற்போது 80,218 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோன்று, 150 விலையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக உயர்த்தப்பட்ட விலையால் இதன் ட்வின் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ஏற்கனவே ஒரு லட்ச ரூபாயை எட்டியுள்ளது.

அனைத்து மாடல் பல்சர் பைக்குகளின் விலையும் உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்தது?.. இதோ புதிய விலை பட்டியல்!

இதையடுத்து, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் விலையுயர்வால் இதன் வழக்கமான வேரியண்ட்கூட ஒரு லட்ச ரூபாயை விரைவில் எட்டிவிடும் என தெரிகின்றது. தொடர்ந்து, பல்சர் 150 நியான் விலையும் உயர்த்தப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இப்பைக் விலைக்குறைந்த பைக்காகவே காட்சியளிக்கின்றது. இதன் ஆரம்பநிலை மாடலின் விலை ரூ. 92,627 ஆக இருக்கின்றது.

அனைத்து மாடல் பல்சர் பைக்குகளின் விலையும் உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்தது?.. இதோ புதிய விலை பட்டியல்!

தொடர்ந்து, 180எஃப் மாடலின் விலை ரூ. 1.13 லட்சமாகவும், 220எஃப் மாடலின் விலை ரூ. 1.23 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகள் விலையுயர்வைப் பெற்றிருந்தாலும், இதற்கு போட்டியாக விற்பனையில் இருக்கும் பைக்குகளைக் காட்டிலும் குறைந்த விலையிலேயேக் காட்சியளிக்கின்றன.

அனைத்து மாடல் பல்சர் பைக்குகளின் விலையும் உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்தது?.. இதோ புதிய விலை பட்டியல்!

பல்சர் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்எஸ் 160 மற்றும் என்எஸ் 200 மாடல் பைக்குகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், புதிய என்எஸ்ஸ 160 பைக்கின் ஆரம்ப விலை ரூ. 1.08 லட்சமாகவும், என்எஸ்200 பைக்கின் ஆரம்ப விலை ரூ. 1.31 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.

அனைத்து மாடல் பல்சர் பைக்குகளின் விலையும் உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்தது?.. இதோ புதிய விலை பட்டியல்!

பல்சர் பைக்குகளின் புதிய விலையைப் பட்டியலாகக் கீழே காணலாம்:

பஜாஜ் பல்சர் புதிய விலை
125 நியான் டிரம் ரூ. 72,122
125 நியான் டிஸ்க் ரூ. 76,922
125 ஸ்பிளிட் இருக்கை டிரம் ரூ. 73,274
125 ஸ்பிளிட் இருக்கை டிஸ்க் ரூ. 80,218
150 நியான் ரூ. 92,627
150 ரூ. 99,584
150 ட்வின் டிஸ்க் ரூ. 1,03,482
180எஃப் ரூ. 1,13,018
220எஃப் ரூ. 1,23,245
என்எஸ்160 ரூ. 1,08,589
என்எஸ்200 ரூ. 1,31,219
ஆர்எஸ்200 ரூ. 1,52,179
அனைத்து மாடல் பல்சர் பைக்குகளின் விலையும் உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்தது?.. இதோ புதிய விலை பட்டியல்!

மேலே குறிப்பிட்ட அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும். இனி இந்த விலையிலேயே பஜாஜ் நிறுவனத்தின் அனைத்து பல்சர் மாடல் பைக்குகளும் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன. இது மாநிலத்தின் வரி போன்ற சிலவற்றால் கூடுதல் விலைகளுடனேயே விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Bajaj Increased All Pulsar Price: Here Is New Price List. Read In Tamil.
Story first published: Wednesday, December 16, 2020, 18:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X