Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிக மிக குறைந்த விலையில் பஜாஜ் பிளாட்டினா 100 கேஎஸ் பைக் அறிமுகம்... ஆஹா இப்பவே இந்த பைக்க புக் பண்ண தோணுதே!!
பஜாஜ் நிறுவனம் மிக மிக குறைந்த விலையில் பிளாட்டினா 100 கேஎஸ் எனும் மாடல் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் பற்றிய முழு தகவல்களை இப்பதிவில் காணலாம்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதன் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றான பிளாட்டினாவில் புதிய தேர்வு ஒன்றை இன்று (புதன்கிழமை) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பிளாட்டினா 100 கேஎஸ் (கிக் ஸ்டார்ட்) எனும் மாடலை அது அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இந்த புதிய பைக்கிற்கு ரூ. 51.667 என்ற விலையை அது நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக்கில் குறிப்பிட்ட சில சிறப்பு வசதிகளை பஜாஜ் வழங்கியிருக்கின்றது. குறிப்பாக, சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக ஸ்பிரிங்-ஆன்-ஸ்பிரிங் வசதிக் கொண்ட நைட்ராக்ஸ் சஸ்பென்ஷன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இது, 15 சதவீத கூடுதல் கம்ஃபோர்டான பயண அனுபவத்தை வழங்க உதவும். குறிப்பாக, நீண்ட தூர பயணங்களில்கூட களைப்பை ஏற்படுத்தாத வண்ணம் இது சிறப்பாக செயல்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால் முன் மற்றும் பின்பக்க பயணிகள் இருவருக்கும் சொகுசான பயண அனுபவம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

இதுதவிர, ட்யூப்லெஸ் டயர்கள் இந்த பைக்கிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுவும், பயணத்தை பாதுகாப்பானதாகவும், தொந்தரவு இல்லாததாகவும் மாற்ற உதவுகின்றது. எஞ்ஜினைப் பொருத்தவரை பஜாஜ் பிளாட்டினா 100 கேஎஸ் பைக்கில் 102சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எந்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது அதிகபட்சமாக 7.9 பிஎஸ் பவரையும், 8.34 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இந்த எஞ்ஜின் 4 ஸ்பீடு வேகக்கட்டுப்பாட்டு கருவியில் இயங்கும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆகும்.

மேலும், புதிய பிளாட்டினா 100 கேஎஸ் பைக்கை ஸ்மார்டானதாக மாற்றும் நோக்கில் புதிய ஹேண்ட் குவார்ட், மெத்தைப் போன்ற இருக்கை, எல்இடி டிஆர்எல்கள், பொதுகாப்பான எரிபொருள் தொட்டி, மறு வடிவமைக்கப்பட்ட இன்டிகேட்டர் மின் விளக்குகள் மற்றும் கண்ணாடிகள் இப்பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இத்துடன், கால்களுக்கு கூடுதல் கிரிப்பான அனுபவத்தை தருகின்ற வகையில் புதிய ரப்பர் ஃபூட் பேட்கள் இப்பைக்கில் பொருத்தப்பட்டிருக்கின்றது. பஜாஜ் நிறுவனம் இப்பைக்கை இரு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

இதன்படி, காக்டெயில் ஒயின் ரெட் மற்றும் இபோனி கருப்பு ஆகிய நிறங்களில் புதிய பஜாஜ் பிளாட்டினா 100 கேஎஸ் கிடைக்க இருக்கின்றது. இவ்விரு நிற பைக்குகளிலுமே சில்வர் நிறம் கலந்திருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பு: கடைசி நான்கு படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.