பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

பிஎஸ்6 எஞ்சினுடன் புதிய பஜாஜ் பல்சர் 125 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பல்சர் விரும்பிகள் எதிர்பார்த்து காத்திருந்த இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் வரிசை பைக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருவது தெரிந்ததே. குறிப்பாக, அந்த நிறுவனத்தின் பல்சர் 150 பைக் மிகவும் பிரபலமானது. இந்த நிலையில், பல்சர் 150 டிசைனை அப்படியே வைத்து, அதில் 125 எஞ்சினுடன் கொண்டு வந்தது பஜாஜ் ஆட்டோ. பட்ஜெட் பிரச்னை இருப்பவர்களின் பல்சர் கனவை இந்த பைக் நிறைவேற்றி வருகிறது.

பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

பஜாஜ் பல்சர் 125 நியான் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த பைக் தற்போது பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

MOST READ: தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ்.. புது வகை டெஸ்டிங் லேப்பை கையாளும் பிரபல நிறுவனம்...

பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

இந்த பைக்கில் 124.4 சிசி பிஎஸ்4 கார்புரேட்டர் எஞ்சின் தற்போது ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மாறி இருக்கிறது. இந்த எஞ்சின் தற்போது 11.6 பிஎச்பி பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

பிஎஸ்4 எஞ்சினைவிட பவரை வெளிப்படுத்தும் திறன் 0.2 பிஎச்பி என்ற மிகச் சிறிய அளவு குறைந்துள்ளது. இந்த பைக்கில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

MOST READ: அட்டகாசமான நிறத்தில் டீலர்களை சென்றடைந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245...

பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடலில் எஞ்சினை தவிர்த்து வேறு எந்த பெரிய மாற்றங்களும் இல்லை. இந்த பைக்கில் வலிமையான ஹெட்லைட் ஹவுசிங், முரட்டுத்தனமான பெட்ரோல் டேங்க் அமைப்பு, கூர்மையான வால் பகுதி ஆகியவை தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையிலேயே உள்ளது. பல்சர் பிராண்டு எழுத்துகள் கவர்ச்சிகரமான வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

இந்த பைக்கில் ஹாலஜன் பல்புடன் கூடிய ஹெட்லைட், இரண்டு பைலட் விளக்குகள், எல்இடி டெயில் லைட் ஆகியவை இடம்பெற்றுள்ளது. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

MOST READ: 1 ரூபா செலவில்லாம 32,000 கிமீ ஓட்டியாச்சு.. கோனா மின்சார காரின் உரிமையாளர் பெறுமிதம்.. இது உண்மைதானா

பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் இரண்டு கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்திற்கு டிரம் அல்லது டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. பின்சக்கரத்தில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

இந்த பைக்கில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. இதனால், கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும். புதிய பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடலானது 140 கிலோ கொண்டுள்ளது. எடையில் வேறுபாடு இல்லை.

MOST READ: கொரோனா தடுப்பு பணிகள்... ரூ.3 கோடி மதிப்புடைய உதவிகளை வழங்கும் பிஎம்டபிள்யூ!

பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

புதிய பஜாஜ் பல்சர் 125 பைக் நியான் புளூ, சோலார் ரெட் மற்றும் பிளாட்டினம் சில்வர் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 மாடலின் டிரம் பிரேக் மாடலுக்கு ரூ.67,997 எக்ஸ்ஷோரூம் விலையும், முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக் கொண்ட மாடலுக்கு ரூ.74,118 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்4 மாடலுடன் ஒப்பிடும்போது விலை ரூ.7,500 வரை அதிகரித்துள்ளது.

Most Read Articles

English summary
Bajaj Auto has launched Pulsar 125 with BS6 compliant engine in India prices starting at Rs.67,997 (Ex-Showroom, Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X