பிளவுப்பட்ட இருக்கையுடன் ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 பைக்... அறிமுகம் எப்போது...?

பிளவுப்பட்ட இருக்கை அமைப்பில் பஜாஜ் பல்சர் 125 நியோன் பிஎஸ்6 மாடலின் ஸ்போர்டியர் வேரியண்ட் டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதனால் மிக விரைவில் சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய பல்சர் பிஎஸ்6 பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

பிளவுப்பட்ட இருக்கையுடன் ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 பைக்... அறிமுகம் எப்போது...?

பல்சர் 125 பைக்கின் பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் தற்சமயம் பிஎஸ்4 தரத்தில் தான் இந்தியாவில் சில டீலர்ஷிப்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. பல்சர் 125 நியோன் பிஎஸ்6 மாடலை இந்த வருடத்தின் துவக்கத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்த பஜாஜ் நிறுவனத்தில் இருந்து இதன் பிஎஸ்6 பிளவுப்பட்ட இருக்கை வேரியண்ட்டின் அறிமுகம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

பிளவுப்பட்ட இருக்கையுடன் ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 பைக்... அறிமுகம் எப்போது...?

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலில் இந்த பிஎஸ்6 பல்சர் மாடல் டீலர்ஷிப்களை சென்றடைந்து வருவதாகவும், இதனால் இதன் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் பிஎஸ்4 வெர்சனை போல இந்த பிஎஸ்6 வேரியண்ட்டும் இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது.

MOST READ: லாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

பிளவுப்பட்ட இருக்கையுடன் ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 பைக்... அறிமுகம் எப்போது...?

பல்சர் 125 நியோன் பைக்குடன் ஒப்பிடும்போது இந்த பிளவுப்பட்ட இருக்கை கொண்ட வேரியண்ட் சில வேறுப்பட்ட ஸ்டைலிங் பாகங்களை பெற்றுள்ளது. குறிப்பாக பெயருக்கு ஏற்றாற் இந்த பிஎஸ்6 பைக்கில் இருக்கை அமைப்பு பிளவுப்பட்ட டிசைனில் வழங்கப்பட்டுள்ளது.

பிளவுப்பட்ட இருக்கையுடன் ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 பைக்... அறிமுகம் எப்போது...?

இதை தான் தற்போது 91 வீல்ஸ் என்ற செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்கள் வெளிக்காட்டுகின்றன. இதை தவிர்த்து பார்த்தோமேயானால், பல்சர் 125 பைக்கின் இந்த பிஎஸ்6 வேரியண்ட், பிளவுப்பட்ட பில்லன் க்ராப் ரெயில்கள் மற்றும் கவர்ச்சிக்கரமான கிராஃபிக்ஸ் டிசைன் உடன் என்ஜின் கௌல்-ஐ கொண்டுள்ளது.

MOST READ: பஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது! கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்!

பிளவுப்பட்ட இருக்கையுடன் ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 பைக்... அறிமுகம் எப்போது...?

தேர்வு செய்யும் நிறத்தில் பைக்கில் எரிபொருள் டேங்க் எக்ஸ்டென்ஷன்ஸ், முன்புற ஃபெண்டர், அலாய் சக்கரங்கள் மற்றும் பின்புற கௌல் உள்ளிட்டவை இருக்கும். இதனால் இந்த ஸ்போர்டியான வேரியண்ட் ஒட்டு மொத்தமாக பல்சர் 150 ட்வின் டிஸ்க் பிஎஸ்6 மாடலை ஒத்து காணப்படுகிறது.

பிளவுப்பட்ட இருக்கையுடன் ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 பைக்... அறிமுகம் எப்போது...?

மற்றப்படி என்ஜின் அமைப்பை இந்த வேரியண்ட் வழக்கமான பல்சர் 125 நியோன் மாடலுடன் தான் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த வகையில் டிடிஎஸ்-ஐ தொழிற்நுட்பம் மற்றும் 2-வால்வு யூனிட்களுடன் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 124.4சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 12 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

MOST READ: தீவிரமாக பரவும் வரைஸ்! அச்சத்தில் மக்கள்! நம்பிக்கையை விதைக்க புதிய தந்திரத்தை கையாளும் எடப்பாடியார்

பிளவுப்பட்ட இருக்கையுடன் ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 பைக்... அறிமுகம் எப்போது...?

பல்சர் 125 பிளவுப்பட்ட இருக்கை பிஎஸ்6 வெர்சன் இன்னமும் பஜாஜ் நிறுவனத்த்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்படவில்லை. பல்சர் 125 நியோன் பிஎஸ்6 டிஸ்க் ப்ரேக்கின் விலை சந்தையில் ரூ.75,494 லட்சமாக உள்ளது. இந்த பிஎஸ்6 வேரியண்ட்டின் விலையை இதனை காட்டிலும் ரூ.3,000- ரூ.4,000 அதிகமாக எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Bajaj Pulsar 125 Split Seat BS6 variant to be launched soon
Story first published: Sunday, June 7, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X