பஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் அறிமுகமானது... விலை ரூ.3,597 அதிகம்...

பஜாஜ் பல்சர் 125 பைக் வரிசையில் புதிய பல்சர் 125 பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் இணைந்துள்ளது. இந்த புதிய வேரியண்ட்டில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் அறிமுகமானது... விலை ரூ.3,597 அதிகம்...

இன்று இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கும் பஜாஜ் பல்சர் 125 பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் டிஸ்க் ப்ரேக் உடன் எக்ஸ்ஷோரூமில் ரூ.79,091-ஐ விலையாக பெற்றுள்ளது. இது பல்சர் 125 நியோன் டிஸ்க் மாடலை காட்டிலும் 3,597 ரூபாய் அதிகமாகும்.

பஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் அறிமுகமானது... விலை ரூ.3,597 அதிகம்...

ஏனெனில் வழக்கமான பல்சர் பைக்கானது ரூ.75,494 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு மட்டுமில்லாமல் இதன் புதிய வேரியண்ட்டில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.

பஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் அறிமுகமானது... விலை ரூ.3,597 அதிகம்...

புதிய க்ராப் ரெயில், பெல்லி பேன் மற்றும் புதிய நிறத்தேர்வுகள் உள்ளிட்டவை இந்த காஸ்மெட்டிக் மாற்றங்களில் அடங்கும். அதேநேரம் புதிய பிளவுப்பட்ட இருக்கையால் இந்த புதிய பல்சர் வேரியண்ட், விற்பனையில் உள்ள பல்சர் 125 நியோன் பைக்கை காட்டிலும் மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

பஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் அறிமுகமானது... விலை ரூ.3,597 அதிகம்...

மற்றப்படி இரட்டை பைலட் விளக்குகள் உடன் ஓநாயின் கண் வடிவிலான ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர், முடிவிலா இரட்டை-ஸ்ட்ரிப் எல்இடி டெயில்லேம்ப்கள், பெட்ரோல் டேங்கில் 3டி லோகோ, ரியர் கௌல், கருப்பு நிற அலாய் சக்கரங்கள் மற்றும் ட்ரிப் மீட்டர் உடன் அகலமான டிஜிட்டல் கன்சோல் போன்ற பல்சர் 125 பைக்கில் வழங்கப்பட்டு வரும் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.

பஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் அறிமுகமானது... விலை ரூ.3,597 அதிகம்...

அதேபோல் இயக்க ஆற்றலை வழங்குவதற்காக பைக்கில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் அமைப்பிலும் எந்தவொரு அப்டேட்டையும் பஜாஜ் நிறுவனம் கொண்டுவரவில்லை. இதனால் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 125சிசி டிடிஎஸ்-ஐ என்ஜினை தான் இந்த புதிய வேரியண்ட்டும் பெற்றுள்ளது.

பஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் அறிமுகமானது... விலை ரூ.3,597 அதிகம்...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 12 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. என்ஜின் அமைப்பு மேம்படுத்தப்படாவிட்டாலும், பல்சர் 125 பைக் தான் அதன் பிரிவில் மிகவும் ஆற்றல் மிக்க மாடலாக உள்ளது.

பஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் அறிமுகமானது... விலை ரூ.3,597 அதிகம்...

சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் பணிகளுக்கு பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் 240மிமீ டிஸ்க் ப்ரேக்கும், பின்புறத்தில் இரட்டை கேஸ்-சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்ஸ் மற்றும் 130மிமீ ட்ரம் ப்ரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஏபிஎஸ்-ம் இந்த பைக்கில் உள்ளது

பஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் அறிமுகமானது... விலை ரூ.3,597 அதிகம்...

இந்த புதிய பல்சர் வேரியண்ட்டிற்கு நியோன் பச்சை, ப்ளாக்-சில்வர் மற்றும் கருப்பு-சிவப்பு என்ற மூன்று நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பைக்கின் அறிமுகம் குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இயக்குனர் சாரங் கனடே பேசுகையில், புதிய பல்சர் 125சிசி வேரியண்ட்டை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

பஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் அறிமுகமானது... விலை ரூ.3,597 அதிகம்...

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமான பல்சர் 125 பைக் அடுத்த ஆறு மாதத்திற்கு உள்ளாகவே 1 லட்ச யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. புதிய பல்சர் 125 பிளவுப்பட்ட இருக்கை வேரியண்ட், சிறப்பான செயல்திறன், ஸ்டைல் மற்றும் அட்டகாசமான விலை மதிப்புடன் ஸ்போர்ட்டியான மோட்டார்சைக்கிளை வாங்க நினைப்போரை கவரும் என நம்புகிறோம்.

பஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் அறிமுகமானது... விலை ரூ.3,597 அதிகம்...

கடந்த சில மாதங்கள் ஆட்டோமொபைல் துறைக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சோதனை காலமாக இருந்தது. இதனால் குறைந்துள்ள புதிய வாகனங்களை வாங்குவது குறித்த வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை மீண்டும் புதிய பல்சர் 125 பிளவுப்பட்ட வெர்சன் உயிர்பிக்க வைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Bajaj Pulsar 125 Split Seat Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X