பஜாஜ் பல்சர் 180எஃப் & 220எஃப் பிஎஸ்6 பைக்குகளின் விலை அதிரடியாக உயர்வு... புதிய தகவல் வெளியானது...!

புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிஎஸ்6 தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பல்சர் 180எஃப் மற்றும் 220எஃப் மோட்டார்சைக்கிள்களின் சிறப்பம்சங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் பல்சர் 180எஃப் & 220எஃப் பிஎஸ்6 பைக்குகளின் விலை அதிரடியாக உயர்வு... புதிய தகவல் வெளியானது...!

பிஎஸ்6 மாற்றத்தால் பல்சர் 220எஃப் பைக்கின் பவர் மற்றும் செயல்பாட்டு திறனில் சிறிய அளவிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் பல்சர் 180 எஃப் மாடல் இத்தகைய அப்டேட்கள் எதையும் பெறவில்லை.

பஜாஜ் பல்சர் 180எஃப் & 220எஃப் பிஎஸ்6 பைக்குகளின் விலை அதிரடியாக உயர்வு... புதிய தகவல் வெளியானது...!

178.66சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை கொண்டுள்ள பல்சர் 180எஃப் பைக்கானது தற்போது பிஎஸ்4 என்ஜினுடன் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் 17 பிஎச்பி பவர் மற்றும் 14 என்எம் டார்க் திறனை தான் பிஎஸ்6 தரத்தில் வெளிப்படுத்தவுள்ளது. இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

பஜாஜ் பல்சர் 180எஃப் & 220எஃப் பிஎஸ்6 பைக்குகளின் விலை அதிரடியாக உயர்வு... புதிய தகவல் வெளியானது...!

இந்த 180சிசி பல்சர் பிஎஸ்6 பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மிக பெரிய மாற்றமே அதன் நீளத்தில் 5மிமீ அதிகரிக்கப்பட்டது தான். ஆனால் இந்த மாற்றத்தால் பைக் ரைடிங்கில் சிறிய அளவிலாவது வித்தியாசம் இருக்கும்.

பஜாஜ் பல்சர் 180எஃப் & 220எஃப் பிஎஸ்6 பைக்குகளின் விலை அதிரடியாக உயர்வு... புதிய தகவல் வெளியானது...!

பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்டுள்ள பல்சர் 220எஃப் பைக்கில் 220சிசி ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்4 தரத்தில் வெளிப்படுத்தியதை விட 0.61 பிஎச்பி குறைவாக 20.39 பிஎச்பி பவரை பைக்கிற்கு வழங்கவுள்ளது.

பஜாஜ் பல்சர் 180எஃப் & 220எஃப் பிஎஸ்6 பைக்குகளின் விலை அதிரடியாக உயர்வு... புதிய தகவல் வெளியானது...!

மற்றப்படி என்ஜினின் 18.55 என்எம் டார்க் திறனில் எந்த மாற்றமும் இல்லை. புதிய 220எஃப் மாடலின் இந்த பிஎஸ்6 என்ஜினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. என்ஜினின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளில் மாற்றம் தவிர்த்து இந்த பைக்கில் வேறெந்த அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை.

பஜாஜ் பல்சர் 180எஃப் & 220எஃப் பிஎஸ்6 பைக்குகளின் விலை அதிரடியாக உயர்வு... புதிய தகவல் வெளியானது...!

புதிய பல்சர் 180எஃப் பிஎஸ்6 பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.07 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதன் பிஎஸ்4 வெர்சன் பைக்கை விட ரூ.11,437 அதிகமாகும். பிஎஸ்6 பல்சர் 220எஃப் ரூ.1.16 லட்சத்தை ஆரம்ப விலையாக பெற்றுள்ளது. இதன் இந்த புதிய விலை தற்போதைய பிஎஸ்4 மாடலை விட ரூ.8,960 அதிகமாகும்.

பஜாஜ் பல்சர் 180எஃப் & 220எஃப் பிஎஸ்6 பைக்குகளின் விலை அதிரடியாக உயர்வு... புதிய தகவல் வெளியானது...!

பிஎஸ்6 அப்டேட்டால் பல்சர் 180எஃப் மாடலின் என்ஜினின் ஆற்றலில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாமல், பல்சர் 220எஃப் பிஎஸ்6 பைக்கின் என்ஜினில் மட்டும் அப்டேட் கொண்டுவரப்பட்டிருப்பது பல்சர் பிரியர்கள் இடையே மிகுந்த ஆச்சிரயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஜாஜ் பல்சர் 180எஃப் & 220எஃப் பிஎஸ்6 பைக்குகளின் விலை அதிரடியாக உயர்வு... புதிய தகவல் வெளியானது...!

இந்தியாவில் புதிய மாசு உமிழ்வு விதி ஏப்ரல் 1 முதல் அமலாகவுள்ளதால் பஜாஜ் நிறுவனம் தனது தயாரிப்பு மோட்டார்சைக்கிள்களை பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் இருந்து மேலும் சில பிஎஸ்6 பைக்குகளை வரும் வாரங்களில் எதிர்ப்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #பஜாஜ் #bajaj auto
English summary
Bajaj Pulsar 180F And Pulsar 220F BS6 Variant Specifications Revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X