Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
20 வருடங்களான போதிலும் விற்பனையில் கர்ஜித்துவரும் பஜாஜ் பல்சர்!! ஏற்றுமதியும் அதிகரிக்கிறது
கடந்த 2020 நவம்பர் மாதத்தில் ஒரேடியாக பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கிட்டத்தட்ட 20 வருடங்களாக பல்சர் பைக்குகள் மூலம் பஜாஜ் நிறுவனம் இருசக்கர வாகன துறையை ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றால் அது மிகையில்லை. முதன்முதலாக 2001ல் 150சிசி மாடலாக அறிமுகமான பல்சர் ஆரம்பத்தில் இருந்தே வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

குறிப்பாக 2000- 2010ஆம் காலக்கட்டங்களில் பலரது முதல் பைக் மாடலாக பல்சராக தான் இருந்தது. 20 வருடங்களான போதிலும் விற்பனையில் கர்ஜித்துவரும் பல்சர் பைக்குகள் அதனை கடந்த 2020 நவம்பர் மாதத்திலும் தொடர்ந்துள்ளன.

இன்னும் சொல்லப்போனால், கொரோனா சூழ்நிலைக்கு மத்தியிலும் கடந்த 2019ஆம் வருடத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் அதிகளவிலான எண்ணிக்கையில் பல்சர் பைக்குகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பல்சர் வரிசையில் 125சிசி பைக்குகள் 20,193 யூனிட்கள் கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2019 நவம்பரை காட்டிலும் சுமார் 180.04 சதவீதம் அதிகமாகும். இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.72,090 ஆக உள்ளது.

பல்சர் 150 பைக்குகளை கடந்த மாதத்தில் 30,719 யூனிட்கள் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது மட்டுமே 2019 நவம்பரை காட்டிலும் 9.47 சதவீதம் குறைவாக விற்பனையாகியுள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.93,075 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Pulsar Sales | Nov'20 | Nov'19 | Growth (%) |
125 | 56,549 | 20,193 | 180.04 |
150 | 30,719 | 33,933 | -9.47 |
160, 180, 200 | 10,522 | 8,497 | 23.83 |
200F | 7,114 | 5,645 | 26.02 |
Total | 1,04,904 | 68,268 | 53.66 |
Pulsar Exports | Nov'20 | Nov'19 | Growth (%) |
160, 180, 200 | 14,198 | 9,551 | 48.65 |
150 | 11,112 | 9,117 | 21.88 |
125 | 5,820 | 2,432 | 139.31 |
220F | 1,410 | 4,196 | -66.40 |
Total | 32,540 | 25,296 | 28.64 |

பல்சர் என்எஸ்160, பல்சர் 180, பல்சர் என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 உள்ளிட்டவை அடங்கிய பஜாஜின் ஸ்போர்டியர் பிரிவில் மொத்தமாக 10,522 பைக்குகள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. என்எஸ் மற்றும் ஆர்எஸ் பைக்குகளுக்கு இந்தியாவில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால் 2019 நவம்பரை விட கடந்த மாதத்தில் 23.83 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.08 லட்சம், ரூ.1.12 லட்சம், ரூ.1.30 லட்சம் மற்றும் ரூ.1.50 லட்சம் என்ற அளவில் உள்ளன. பஜாஜ் பல்சர் பிராண்டின் விலையுயர்ந்த மாடலான 220எஃப் 7,114 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

எக்ஸ்ஷோரூமில் ரூ.1.22 லட்சத்தை விலையாக கொண்டுள்ள இந்த 220சிசி பைக்கின் விற்பனையும் 26.02% உயர்ந்துள்ளது. கடந்த 2019 நவம்பரில் மொத்தமாக 68,268 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் 2020 நவம்பரில் பல்சர் பைக்குகளின் விற்பனை 1 லட்சத்தை கடந்து 1,04,904 என்ற எண்ணிக்கையில் நின்றுள்ளது.

இது வெறும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பஜாஜ் பல்சர் பைக்குகளின் எண்ணிக்கையே. வெளிநாடுகளுக்கு கடந்த மாதத்தில் மொத்தம் 32,540 பல்சர் பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2019 நவம்பரில் 25,296 பல்சர் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டிருந்தன.