ரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே!!!

பஜாஜ் நிறுவனத்தின் பிரபல பைக்குகளில் ஒன்றான பல்சர் 200 என்எஸ் பைக் ரூ. 2.5 லட்சம் செலவில் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ் பைக்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே..!

பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான பைக்குகளில் பல்சர் மாடலும் ஒன்று. இதனாலேயே இந்த பிராண்டில் பல தேர்வுகளை பஜாஜ் வழங்கி வருகின்றது.

இது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற மாடலாக இருக்கின்றது. பஜாஜ் பல்சர் பைக்குகள் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான அம்சங்களைக் கொண்டிருப்பதன் காரணத்தினாலேயே இளைஞர்கள் மத்தியில் இன்றளவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ரூ. 2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ் பைக்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே..!

இந்நிலையில், பைக்குகள் மீது அதீத காதலை வைத்திருக்கும் டெல்லியைச் சேர்ந்த ஓர் இளைஞர் அவரது பல்சர் பைக்கை, வெற லெவல் தோற்றத்திற்கு மாடிஃபை செய்துள்ளார்.

குறிப்பிட்டு கூற வேண்டுமானால், பஜாஜ் பல்சர் என்எஸ் 200 மாடலை விலையுயர்ந்த சுசுகி ஹயபுசா பைக்கிற்கு இணையாக மாடிஃபை செய்துள்ளார். இது உலகளவில் புகழ்வாய்ந்த பைக்காகும்.

ரூ. 2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ் பைக்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே..!

ஆனால், இந்தியாவில் ஹயபுசா பைக்கிற்கு குறைந்தளவே விற்பனை காணப்பட்டது. ஆகையால் இந்த பைக்கின் விற்பனையை சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் பின் வாங்கிக்கொண்டது. இருப்பினும், பல உலக நாடுகளில் தற்போது வரை நல்ல விற்பனை வளர்ச்சியையே சுசுகி ஹயபுசா பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ் பைக்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே..!

இந்நிலையிலேயே, இந்த புகழ்வாய்ந்த பைக்கின் உருவத்திற்கு இணையாக பல்சர் என்எஸ்200 பைக் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதனை டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் ஜிஎஸ் கஸ்டம்ஸ் என்ற நிறுவனம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிறுவனம், ஏற்கனவே இதேபோன்று சாதாரண பைக்குகளை மிகவும் விலையுயர்ந்த பைக்குகளுக்கு இணையாக மாடிஃபை செய்திருக்கின்றது.

ரூ. 2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ் பைக்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே..!

ஹயபுசா பைக்கின் தோற்றத்தை பல்சருக்கு வழங்குவதற்காக, அந்த பைக்கில் இருந்து அனைத்து பேனல்களையும் அந்நிறுவனம் நீக்கியிருக்கின்றது. அவ்வாறு, பைக்கின் வீல் முதல் ஃபூட் ரெஸ்ட் வரை அனைத்து பாகங்களும் நீக்கப்பட்டு, மாற்றப்பட்டிருக்கின்றது. இதனாலயே இந்த பைக்கிற்கு தற்போது ஹயபுசா பைக்கின் தோற்றம் கிடைத்துள்ளது.

ரூ. 2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ் பைக்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே..!

ஆனால், எஞ்ஜின் மட்டும் மாற்றப்படாமல் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. அது, 200 சிசி திறன் எஞ்ஜின் ஆகும்.

அது அதிகபட்சமாக 23.2 பிஎச்பி பவரையும், 18.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால், ஒரிஜினல் ஹயபுசா பைக்கில் 1340 சிசி திறன் கொண்ட இன்லைன் 4 சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ. 2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ் பைக்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே..!

இது, அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த திறனில் பாதி திறனைக்கூட மாடிஃபைச் செய்யப்பட்ட பல்சர் பைக் வழங்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ் பைக்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே..!

இருப்பினும், இந்த பைக்கின் தோற்றம் விலையுயர்ந்த ஹயபுசா பைக்கிற்கு இணையாக மாறியிருக்கின்றது. இந்த சிறப்பான தோற்றத்திற்காக அதன் உரிமையாளர் வெறும் ரூ. 2.5 லட்சமே செலவு செய்திருக்கின்றார். இந்த விலை உங்களுக்கு அதிகமானதாக தெரியலாம்.

ரூ. 2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ் பைக்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே..!

ஆனால், சுசுகி ஹயபுசா பைக்கின் விலையுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். இது தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கவில்லையென்றாலும், முன்னதாக விற்பனையில் இருந்தபோது ரூ. 14 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டது. தற்போது, செலவு செய்யப்பட்டிருக்கும் தொகையை விட இது பல மடங்கு அதிகம்.

ரூ. 2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ் பைக்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே..!

ரூ. 2.5 லட்சம் என்பது உடல் பேனல், சஸ்பென்ஷன், சைலென்சர் மற்றும் இதர உதிரிபாகங்களை வாங்கவே செலவிடப்பட்டுள்ளது. இதில், மெக்கானிக் சேவைக்கான கட்டணமும் அடங்கும்.

இந்தளவிலான தொகையை அந்த இளைஞர் செலவு செய்த காரணத்தினால், பைக் சாலையில் செல்லும்போது துளியளவும் பல்சர் பைக் என்ற உண்மைத் தோற்றத்தை வழங்கவில்லை. மாறாக, விலையுயர்ந்த சுசுகி ஹயபுசா பைக்கின் தோற்றத்தையே வழங்குகின்றது.

இதை உறுதி செய்கின்ற வகையில் அதன் வீடியோக் காட்சியை தி ஹஸன் ரோட்ஸ்டர்ஸ் யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பல்சர் என்எஸ் 200 பைக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து விதமான மாற்றங்கள் காட்சியளிக்கின்றன.

Most Read Articles
English summary
Bajaj Pulsar NS 200 Modified Into Suzuki Hayabusa. Read In Tamil.
Story first published: Saturday, February 22, 2020, 15:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X