ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6... ஆன்-ரோடு விலை எவ்வளவு..?

இந்தியாவில் தயாரிப்புகளை சந்தைப்படுத்தியுள்ள அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது மாடல்கள் லைன்-அப்பை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்து வருகின்றன. இந்த வகையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பிரபலமான ஆர்எஸ்200 மாடல் பைக்கை பிஎஸ்6 வெர்சனுக்கு மேம்படுத்தி சில டீலர் ஷோரூம்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இது உண்மையா அல்லது இல்லையா என்பதை சரிப்பார்க்க இது சரியான நேரம் கிடையாது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் ஆட்டோமொபைல் துறையையும் தலைக்கீழாக புரட்டி போட்டுள்ளது. இதனால் பிஎஸ்4 வாகனங்களின் பதிவிற்கான காலக்கெடுவை 2 மாதங்கள் தள்ளி வைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டிடம் ஆட்டோ டீலர்கள் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6... ஆன்-ரோடு விலை எவ்வளவு..?

மீண்டும் பிஎஸ்6 பஜாஜ் ஆர்எஸ்200 பைக் பற்றிய விஷயத்திற்கு வருவோம். இந்த பிஎஸ்6 பைக் தற்போதைய பிஎஸ்4 வெர்சனில் இருந்து பெரிய அளவில் எந்த டிசைன் மாற்றத்தையும் பெறவில்லை. அப்டேட்டாக இந்த பைக்கில் இரண்டு ஃபோர்க்குகளிலும் பிரதிபலிப்பானை எதிர்பார்க்கலாம்.

ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6... ஆன்-ரோடு விலை எவ்வளவு..?

டீலர்ஷிப்களுக்கு தற்போது சென்றுள்ள பிஎஸ்6 ஆர்எஸ்200 பைக் கொண்டுள்ள சிவப்பு/வெள்ளை ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பை ஏற்கனவே இதன் பிஎஸ்4 வெர்சன் பைக்கிலும் பார்த்திருப்போம்.

ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6... ஆன்-ரோடு விலை எவ்வளவு..?

ஆனால் இந்த பிஎஸ்6 பைக்கின் மூலம் ஆர்எஸ்200 மாடலுக்கு கூடுதலான நிறத்தேர்வுகளை வழங்க பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. ஆனால் இப்போதுவரை இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6... ஆன்-ரோடு விலை எவ்வளவு..?

ஒரே விதமான தோற்றத்தை கொண்டிருக்கும் ஆர்எஸ்200 மற்றும் என்எஸ்200 மாடல்கள் அவற்றின் தற்போதைய பிஎஸ்4 வெர்சன்களை போல் அல்லாமல் புதிய பிஎஸ்6 வெர்சனில் ஒரே என்ஜின் ஆற்றலை பெற்றுள்ளன.

ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6... ஆன்-ரோடு விலை எவ்வளவு..?

2020 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 199.5சிசி லிக்யூடு-கூல்டு ஃப்யூல்-இன்ஜெக்டட் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 24.14 பிஎச்பி பவரையும், 18.3 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கும் வழங்கும்.

ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6... ஆன்-ரோடு விலை எவ்வளவு..?

பிஎஸ்4 தரத்திலும் இதே அளவிலான ஆற்றலை தான் பைக்கிற்கு வழங்கி வருகிறது. இதன் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. டெல்லியில் ரூ.1.69 லட்சத்தை ஆன்-ரோடு விலையாக பெற்றுள்ள பிஎஸ்6 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக், அதன் முந்தைய பிஎஸ்4 வெர்சனை விட ரூ.2 ஆயிரத்தை விலை அதிகரிப்பாக பெற்றுள்ளது.

ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6... ஆன்-ரோடு விலை எவ்வளவு..?

பஜாஜ் நிறுவனத்தின் இந்த ஆர்எஸ்200 மற்றும் என்எஸ்200 மாடல் பைக்குகள் தயாரிக்கப்பட்டு வரும் சாகான் தொழிற்சாலையில் தான் கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி200 மற்றும் ட்யூக்200 பிஎஸ்6 பைக்குகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6... ஆன்-ரோடு விலை எவ்வளவு..?

200சிசி பிரிவை போன்று 250சிசி பிரிவிலும் அப்டேட் செய்யப்பட்ட தங்களது நிறுவனத்தின் பைக் மாடல்கள் இருக்க வேண்டும் என்பதற்காக பஜாஜ் நிறுவனம் புதிய டோமினார் 250 பைக்கை சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது.

Source: Burn Piston/YouTube

Most Read Articles
English summary
Bajaj Pulsar RS200 BS6 Arrives At Dealer, Price Revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X