காத்திருந்தது போதும்! பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் சமீபத்தில் புதியதாக வழங்கப்பட்ட நிறங்களுடன் பல்சர் 200சிசி பைக்குகள் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோக்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

காத்திருந்தது போதும்! பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பண்டிகை காலத்தை சிறப்பிக்க அதன் என்எஸ் மற்றும் ஆர்எஸ் பைக்குகளுக்கு புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ளது. பாடி கிராஃபிக்ஸ் உடன் புத்துணர்ச்சியான நிறத்தில் இந்த பல்சர் பைக்குகள் கடந்த அக்டோபர் 23ஆம் தேதியில் இருந்து அனைத்து ஷோரூம்களிலும் கிடைக்கின்றன.

காத்திருந்தது போதும்! பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன

புதிய நிறங்களில் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் உடன் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் விலை ரூ.1,52,179 ஆகவும், என்எஸ்200-ன் விலை சற்று குறைவாக ரூ.1,31,219 ஆகவும், என்எஸ்160 பைக்கின் விலை ரூ.1,08,589 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தி பக்கெட் லிஸ்ட் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த பைக்குகள் குறித்த வீடியோ இதோ...

பல்சர் என்எஸ் வரிசை 200 மற்றும் 160 பைக்குகள் எரியும் நெருப்பின் சிவப்பு (மேட் ஃபினிஷ்), மெட்டாலிக் பேர்ல் வெள்ளை, வெள்ளியம் & காரீயம் கலந்த கலவையின் க்ரே, பிளாஸ்மா சாடின் நீலம் என்ற நான்கு நிறத்தேர்வுகளை புதியதாக பெற்றுள்ளன.

காத்திருந்தது போதும்! பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன

200சிசி-இல் மட்டும் விற்பனை செய்யப்படும் பல்சர் ஆர்எஸ்-விற்கு எரியும் நெருப்பின் சிவப்பு (மேட் ஃபினிஷ்), மெட்டாலிக் வெள்ளை மற்றும் வெள்ளியம் & காரீயம் கலந்த கலவையின் க்ரே என்ற மூன்று நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘கலர் ப்ளாக்கிங்' என்ற டிசைன் மொழியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள இந்த நிறத்தேர்வுகள் வெள்ளை நிற அலாய் சக்கரங்களுடன் பைக்கிற்கு மிகவும் ஸ்போர்டியான பண்பை வழங்குகின்றன.

காத்திருந்தது போதும்! பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன

அதுமட்டுமில்லாமல் முன் மற்றும் பின்பக்க ஃபெண்டர்கள் கார்பன் ஃபைபரால் ஃபினிஷ் செய்யப்பட்டிருப்பதும், இருக்கைகள் ஹாட் ஸ்டாம்பிங் முறையிலும் வழங்கப்பட்டிருப்பது இந்த பல்சர் பைக்குகளுக்கு கூடுதல் பலம் சேர்ப்பதுபோல் உள்ளது. இதனை எம்ஆர்டி விலாக்ஸ் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம் அறியலாம்.

இந்த அப்டேட்களை தவிர்த்து மேற்கூறப்பட்டுள்ள மோட்டார்சைக்கிள்களில் வேறெந்த மெக்கானிக்கல் மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டரான பஜாஜ் பல்சர் என்எஸ்200-லிலும், பேனல்களால் நிரப்பட்ட ஆர்எஸ்200 பைக்கிலும் ஒரே 199.5சிசி, லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின்தான் வழங்கப்படுகிறது.

காத்திருந்தது போதும்! பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன

அதிகப்பட்சமாக 24.5 பிஎச்பி மற்றும் 18.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு இரண்டு பைக்கிலும் 6-ஸ்பீடு தொடர்ச்சியான கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அதுவே பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்கில், 160.3சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.

காத்திருந்தது போதும்! பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன

அதிகப்பட்சமாக 17.2 பிஎச்பி மற்றும் 14.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு தொடர் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. புதிய நிறத்தேர்வுகள் மட்டுமின்றி பஜாஜ் நிறுவனம் அதன் பட்ஜெட் ரக பைக்குகளுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு சில சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது. அவற்றை அறிய நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தினை அணுகவும்.

Most Read Articles
மேலும்... #பஜாஜ் ஆட்டோ
English summary
Bajaj Pulsar 200 New Colours Arrive At Showroom – First Look Walkaround
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X