தயாரிப்பு பணியில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400... அறிமுகம் எப்போது...?

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய 400சிசி பைக் மாடலாக பல்சர் ஆர்எஸ்400 தயாரிப்பு பணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படும் இந்த புதிய பஜாஜ் பைக்கை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

தயாரிப்பு பணியில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400... அறிமுகம் எப்போது...?

இந்நிறுவனத்தின் ஆர்எஸ்200 மாடலின் பெரிய அளவு தோற்ற பைக்காக வெளிவரும் புதிய ஆர்எஸ்400 பைக்கை பற்றிய தகவல்கள் எதுவும் பெரிய அளவில் தற்போதைக்கு கிடைக்கவில்லை. ஆனால் இந்த பைக் குறித்த வெளியாகியுள்ள சில செய்திகளில் இந்த பைக் ஆர்எஸ்200 மாடலை காட்டிலும் சவுகரியமான ரைடிங்கை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

தயாரிப்பு பணியில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400... அறிமுகம் எப்போது...?

அதேபோல் பைக்கின் உயரத்தையும் குறைவாக எதிர்பார்க்கலாம். இதனால் உயரம் குறைவான ரைடர்களுக்கும் இந்த பைக் கச்சிதமாக விளங்கும். தற்சமயம் பஜாஜ் நிறுவனத்தில் இருந்து அதிக பேனல்களுடன் விற்பனையாகும் ஒரே ஒரு மோட்டார்சைக்கிளாக ஆர்எஸ்200 விளங்குகிறது.

தயாரிப்பு பணியில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400... அறிமுகம் எப்போது...?

இருப்பினும் இதன் டிசைனால் அதிகளவில் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டு வருகின்றனரா என்றால், இல்லை என்று தான் பதில். ஏனெனில் இதற்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் பேனல்கள் பைக்கிற்கு அகலமான தோற்றத்தை மட்டுமே வழங்குகின்றன. பின்புற டெயில்லேம்ப் க்ரிஸ்டலும் அவ்வளவாக கவனிக்கத்தக்க வகையில் இல்லை.

தயாரிப்பு பணியில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400... அறிமுகம் எப்போது...?

இதனால் புதிய பல்சர் ஆர்எஸ்400 மாடலில் புதிய டிசைன் அமைப்பை பஜாஜ் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் எல்இடி டிஆர்எல்களுடன் இரட்டை எல்இடி ஹெட்லேம்ப்களை இந்த 400சிசி பைக் பெற்றிருக்கலாம். அதேபோல் பஜாஜின் டோமினார் 400 மாடலில் இருந்து டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் பெற்றிருக்கலாம்.

தயாரிப்பு பணியில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400... அறிமுகம் எப்போது...?

இவை மட்டுமின்றி புதுமையான எல்இடி டெயில்லேம்ப் செட்அப், பிளவுப்பட்ட இருக்கைகள் மற்றும் பிளவுப்பட்ட பில்லியன் க்ராப் ரெயில்களையும் புதிய ஆர்எஸ்400 பைக்கில் எதிர்பார்க்கலாம். என்ஜின் அமைப்பை பொறுத்தவரையில் இந்த பைக்கில் 373.3சிசி சிங்கிள்-சிலிண்டர், ட்ரிபிள் ஸ்பார்க், பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.

தயாரிப்பு பணியில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400... அறிமுகம் எப்போது...?

டோமினார் 400 பைக்கிலும் வழங்கப்பட்டு வருகின்ற இந்த என்ஜின் டோமினார் மாடலில் அதிகப்பட்சமாக 40 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. ஆனால் ஆர்எஸ்400 மாடலில் வேறுப்பட்ட ஆற்றலை வழங்கும் விதத்தில் இந்த என்ஜின் அமைப்பு வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பு பணியில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400... அறிமுகம் எப்போது...?

சர்வதேச சந்தையில் புதிய பஜாஜ் ஆர்எஸ்400 மாடல் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாகவுள்ளது. இதற்கு தேவையான ஆவணங்களை இந்தோனிஷிய அரசாங்கத்துடன் பூர்த்தி செய்யும் பணிகளில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இதன் இந்திய அறிமுகம் எப்போது நடைபெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
English summary
Bajaj Pulsar RS400 in the making, to be launched overseas in August
Story first published: Wednesday, May 20, 2020, 1:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X