அமெரிக்க எக்செல்சியர் பைக்குகளை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? பஜாஜ் மூலம் இந்தியா வருதாம்!!

எக்செல்சியர்-ஹென்டர்சன் என்ற அமெரிக்க மோட்டார்சைக்கிள் பிராண்டை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தைக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்க எக்செல்சியர் பைக்குகளை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? பஜாஜ் மூலம் இந்தியா வருதாம்!!

1870ல் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் சைக்கிள் மற்றும் அவற்றின் பாகங்களின் தயாரிப்பு நிறுவனமாக அறியப்பட்டதுதான் எக்செல்சியர்-ஹென்டர்சன். இதே பணியை சுமார் 30 வருடங்களுக்கு தொடர்ந்த வந்த இந்த நிறுவனம் 1905ல் மோட்டார்சைக்கிள் வணிகத்தில் இறங்கியது.

அமெரிக்க எக்செல்சியர் பைக்குகளை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? பஜாஜ் மூலம் இந்தியா வருதாம்!!

1920களில் இந்த பிராண்டில் இருந்து வி-ட்வின் எக்செல்சியர் மற்றும் 4 சிலிண்டர் ஹெண்டர்சன் என்ற இரு மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனையில் இருந்தன. ஆனால் விரைவாக 1931ல் இந்த அமெரிக்க நிறுவனம் மூடப்பட்டது.

அமெரிக்க எக்செல்சியர் பைக்குகளை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? பஜாஜ் மூலம் இந்தியா வருதாம்!!

அதன்பின் நீண்ட வருடங்களாக எந்தவொரு மோட்டார்சைக்கிள் தயாரிப்பிலும் ஈடுபடாமல் இருந்த இந்த நிறுவனம் 90களில் ஹன்லோன் என்ற நிறுவனத்தால் மீண்டும் பிறவி எடுத்தது. அதன்பின் 1998ல் முதல் மோட்டார்சைக்கிளாக சூப்பர் எக்ஸ் வெளிவந்தது.

அமெரிக்க எக்செல்சியர் பைக்குகளை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? பஜாஜ் மூலம் இந்தியா வருதாம்!!

இத்தகைய நிறுவனத்தின் அறிவுசார் சொத்துரிமைகளை இந்தியாவில் வாங்குவதற்கான மனுவை பஜாஜ் ஆட்டோ 2020 டிசம்பர் மாத துவக்கத்தில் தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்த காப்புரிமை படத்தினை கீழே பார்க்கலாம்.

அமெரிக்க எக்செல்சியர் பைக்குகளை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? பஜாஜ் மூலம் இந்தியா வருதாம்!!

இதனால் எக்செல்சியர்-ஹென்டர்சன் பிராண்ட்டை பஜாஜ் நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனம் சாகான் புதியதொரு தொழிற்சாலையை உருவாக்க ஆயத்தமாகி வருகிறது.

அமெரிக்க எக்செல்சியர் பைக்குகளை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? பஜாஜ் மூலம் இந்தியா வருதாம்!!

சுமார் ரூ.650 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் இந்த தொழிற்சாலையில் கேடிஎம், ஹஸ்க்வர்னா மற்றும் ட்ரையம்ப் போன்ற பிராண்ட்களின் ப்ரீமியம் தரத்திலான மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கவும், சேத்தக் போன்ற எலக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

அமெரிக்க எக்செல்சியர் பைக்குகளை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? பஜாஜ் மூலம் இந்தியா வருதாம்!!

எப்படியிருந்தாலும் இந்த தொழிற்சாலை முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு வாகன தயாரிப்பு பணிகள் துவங்குவதற்கு 2023 வந்துவிடும். இவ்வாறு வியாபாரத்தை பெருக்கும் திறன் கொண்ட பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அமெரிக்கவை சேர்ந்த கிளாசிக் மோட்டார்சைக்கிள் பிராண்டான எக்ஸ்செல்சியர்-ஹென்டர்சனை இந்தியா கொண்டுவருவது உண்மையில் நல்ல முடிவாகும்.

Most Read Articles

English summary
Will Bajaj launch Excelsior-Henderson motorcycles in India
Story first published: Tuesday, December 29, 2020, 19:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X