பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்... நிறுத்தப்படுகிறதா எலெக்ட்ரிக் சேத்தக் உற்பத்தி..?

பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் ஸ்கூட்டர் பற்றி பரவி வந்த வதந்திக்கு அந்நிறுவனம் முற்றுப் புள்ளி வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்... நிறுத்தப்படுகிறதா எலெக்ட்ரிக் சேத்தக் உற்பத்தி..?

இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வரும் பஜாஜ் நிறுவனம், நீண்ட வருட இடைவெளிக்கு பின்னர் ஸ்கூட்டர் உற்பத்தியில் களமிறங்கியுள்ளது.

அதவாது பஜாஜ் சேத்தக் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பின்னர் தற்போதே சேத்தக் பிராண்டில் மின்சார ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அது அறிமுகம் செய்துள்ளது.

பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்... நிறுத்தப்படுகிறதா எலெக்ட்ரிக் சேத்தக் உற்பத்தி..?

இந்நிலையில் எங்களுக்கும், ஸ்கூட்டர்களுக்கும் ரொம்ப தூரம் என்று பஜாஜ் நிறுவனம் கூறுவதைப் போன்று ஓர் தகவலை வெளியிட்டுள்ளது. ஆகையால், தற்போது இந்தியர்கள் மத்தியில் அதீத ஆவலை ஏற்படுத்தியுள்ள சேத்தக் மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தி நின்றுவிடுமோ என்ற அச்சம் நிலவ ஆரம்பித்துள்ளது.

இதுகுறித்து, பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கூறியதைக் கீழே காணாலம்...

பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்... நிறுத்தப்படுகிறதா எலெக்ட்ரிக் சேத்தக் உற்பத்தி..?

"நாங்கள் ஸ்கூட்டர் உற்பத்தியில் முழு கவனம் செலுத்தவில்லை. எங்கள் நிர்வாகம் ஒருபோதும் அதன் கொள்கையை மாற்றிக்கொள்ளாது" என தெரிவித்தார்.

மேலும், நாங்கள் சேத்தக்கினை ஐசி (எரிபொருள்) எஞ்ஜினில் உற்பத்தி செய்ய திட்டமிடவில்லை. இது ஓர் தனித்துவமான மின்சார ஸ்கூட்டராகவே காட்சியளிக்கும்" என்றும் கூறினார்.

பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்... நிறுத்தப்படுகிறதா எலெக்ட்ரிக் சேத்தக் உற்பத்தி..?

முன்னதாக, மின்சார சேத்தக் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், பஜாஜ் ஆட்டோ தங்கள் மூலோபாயத்தை மாற்றிவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் அது அப்படி இல்லை. தற்போது, அது வெளியிட்ட தகவலின்படி, பஜாஜ் ஒருபோதும் அதன் கொள்கையை மாற்றிக் கொள்ளாது என்பது தெரியவந்துள்ளது.

பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்... நிறுத்தப்படுகிறதா எலெக்ட்ரிக் சேத்தக் உற்பத்தி..?

அதேசமயம், முன்னதாக சேத்தக் பிராண்டில் பெட்ரோல் எஞ்ஜின் ஸ்கூட்டரும் வெளிவரலாம் என்ற தகவல் பரவிய வண்ணம் இருந்தது. ஆனால், அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த தகவல் வெளியாகி இருக்கின்றது. தொடர்ந்து, பஜாஜ் பைக்குகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது. உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு அதிக லாபம் அளிக்கும் துறையாக இருக்கின்றது.

பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்... நிறுத்தப்படுகிறதா எலெக்ட்ரிக் சேத்தக் உற்பத்தி..?

இதுகுறித்து பஜாஜ் கூறுகையில், "இந்தியாவில் பைக்குகளுக்கான எதிர்பார்ப்பே அதிகம். இதற்கான வரவேற்பு அதீத அளவில் நிலவுகின்றது. இதன்காரணமாகவே, நாங்கள் மோட்டார் சைக்கிள்களின் மீது அதிக கவனத்த செலுத்த காரணமாக இருக்கின்றது. மேலும், ஸ்கூட்டரின்மீது கவனத்தைச் செலுத்துவதால் பைக்கின்மீதுள்ள கவனம் சிதறலாம். இதுவே, ஸ்கூட்டர்களிடமிருந்து விலகி இருக்க முக்கிய காரணம்" என தெரிவித்தார்.

பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்... நிறுத்தப்படுகிறதா எலெக்ட்ரிக் சேத்தக் உற்பத்தி..?

பஜாஜ் நிறுவனத்தின் இந்த கூற்றை வைத்து பார்க்கையில், ஐசி எஞ்ஜின் சேத்தக் ஸ்கூட்டரின் வருகைதான் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால், மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தம் பற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஆகையால், சேத்தக் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்... நிறுத்தப்படுகிறதா எலெக்ட்ரிக் சேத்தக் உற்பத்தி..?

சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டே பொதுபார்வைக்கு கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, வருகின்ற 14ம் தேதி முதல் விற்பனைக்கும் கொண்டுவரப்பட உள்ளது. இன்றைய தினத்திலேயே பஜாஜ் ஸ்கூட்டரின் விலை மற்றும் வேறு சில தகவல்கள் வெளியிடப்பட உள்ளது. இத்துடன், டெலிவரி எப்போது தொடங்கும் என்ற தகவலும் வெளியட வாய்ப்பு இருக்கின்றது.

பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்... நிறுத்தப்படுகிறதா எலெக்ட்ரிக் சேத்தக் உற்பத்தி..?

பஜாஜின் முதல் முன்சார ஸ்கூட்டர் முன்னதாக புனே மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதைத்தொடர்ந்தே சென்னை, மும்பை மற்றும் டெல்லி போன்ற நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது.

பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்... நிறுத்தப்படுகிறதா எலெக்ட்ரிக் சேத்தக் உற்பத்தி..?

முக்கியமாக, இந்த மின்சார ஸ்கூட்டர் கேடிஎம் நிறுவனத்தின் ஷோரூம் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஆகையால், இது பிரிமியம் மாடலாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.

பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்... நிறுத்தப்படுகிறதா எலெக்ட்ரிக் சேத்தக் உற்பத்தி..?

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் இதர முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இருப்பினும், 75 கிமீ ரேஞ்ச் இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று, அந்த ஸ்கூட்டர் ரூ. 1.10 லட்சம் முதல் ரூ. 1.30 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கலாம் எனறு எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: MB

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Says Company Has Not Made Chetak IC Engine Scooter. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X