பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் புதிய பைக்குகள் அறிமுக விபரம்

பஜாஜ் ஆட்டோ - ட்ரையம்ஃப் நிறுவனங்களின் கூட்டணியில் வெளிவர இருக்கும் பைக்குகள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரூ.2 லட்சத்திலிருந்து புதிய பைக்குகள்: ட்ரையம்ஃப் - பஜாஜ் கூட்டணி அறிவிப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் பிரிமீயம் பைக் நிறுவனத்துடன் இணைந்து நடுத்தர விலை பைக் மாடல்களை உருவாக்குவதற்கு கூட்டணி அமைத்தது.

ரூ.2 லட்சத்திலிருந்து புதிய பைக்குகள்: ட்ரையம்ஃப் - பஜாஜ் கூட்டணி அறிவிப்பு!

முதல்முறையாக இந்த கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பைக் மாடல்கள் குறித்த அறிவிப்பு இன்று புனேயில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.

ரூ.2 லட்சத்திலிருந்து புதிய பைக்குகள்: ட்ரையம்ஃப் - பஜாஜ் கூட்டணி அறிவிப்பு!

இந்த கூட்டணியில் ட்ரையம்ஃப் பிராண்டில் நடுத்தர எடை பிரிவு கொண்ட பிரிமீயம் பைக் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. அதாவது, டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணி போன்றே, இந்த கூட்டணியும் நடுத்தர எடைப் பிரிவு மார்க்கெட்டை குறிவைத்து களமிறங்க உள்ளன.

ரூ.2 லட்சத்திலிருந்து புதிய பைக்குகள்: ட்ரையம்ஃப் - பஜாஜ் கூட்டணி அறிவிப்பு!

பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியில் உருவாக்கப்படும் புதிய பைக் மாடல்கள் ரூ.2 லட்சத்திற்கும் குறைவான ஆரம்ப விலை நிர்ணயிக்கப்படும்.

ரூ.2 லட்சத்திலிருந்து புதிய பைக்குகள்: ட்ரையம்ஃப் - பஜாஜ் கூட்டணி அறிவிப்பு!

வரும் 2022ம் ஆண்டு முதல் பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியில் உருவாகும் பைக் மாடல்கள் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட கால அளவு குறித்த தகவல்களை அடுத்த வரும் மாதங்களில் இந்த கூட்டணி வெளியிடும் வாய்ப்புள்ளது.

ரூ.2 லட்சத்திலிருந்து புதிய பைக்குகள்: ட்ரையம்ஃப் - பஜாஜ் கூட்டணி அறிவிப்பு!

இந்த பைக்குகளுக்காக புதிய எஞ்சின்களும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, 200 சிசி முதல் 750 சிசி வரையிலான எஞ்சின்களுடன் பல்வேறு மாடல்களில் வர இருக்கின்றன.

ரூ.2 லட்சத்திலிருந்து புதிய பைக்குகள்: ட்ரையம்ஃப் - பஜாஜ் கூட்டணி அறிவிப்பு!

மஹாராஷ்டிர மாநிலம் புனே அருகில் சகனில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில் இந்த புதிய பைக் மாடல்கள் உற்பத்தி செய்யப்படும். இந்தியாவிற்கான தேவை மட்டுமின்றி, இங்கு உற்பத்தி செய்யப்படும் புதிய பைக்குகள் உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.

ரூ.2 லட்சத்திலிருந்து புதிய பைக்குகள்: ட்ரையம்ஃப் - பஜாஜ் கூட்டணி அறிவிப்பு!

இந்த புதிய பைக்குகள் இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்படும். அதேபோன்று, வெளிநாடுகளில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டீலர்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட இருக்கிறதாம்.

ரூ.2 லட்சத்திலிருந்து புதிய பைக்குகள்: ட்ரையம்ஃப் - பஜாஜ் கூட்டணி அறிவிப்பு!

மறுபுறத்தில் இந்த கூட்டணியில் உருவாகும் புதிய பைக் மாடல்களை ட்ரையம்ஃப் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தனது டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.

ரூ.2 லட்சத்திலிருந்து புதிய பைக்குகள்: ட்ரையம்ஃப் - பஜாஜ் கூட்டணி அறிவிப்பு!

பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியில் வர இருக்கும் குறைவான பட்ஜெட் விலை பிரிமீயம் பைக்குகள் டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ மோட்டோராட் கூட்டணியின் பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். அதேபோன்று, ஹார்லி டேவிட்சன் உருவாக்கி வரும் புதிய 338 மோட்டார்சைக்கிளுக்கும், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கும் போட்டியாக இருக்கலாம்.

Most Read Articles

English summary
Bajaj and Triumph has confirmed that the partnership will launch all new motorcycle models in 2022.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X