பெனெல்லி பைக் கனவை நிஜமாக்கும் நேரம் இதுதான்!! ரூ.12,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

2020ஆம் வருட இறுதியை முன்னிட்டு பெனெல்லி இந்தியா நிறுவனம் அதன் இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

பெனெல்லி பைக் கனவை நிஜமாக்கும் நேரம் இதுதான்!! ரூ.12,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

பெனெல்லி பிராண்டில் இருந்து தற்சமயம் இந்தியாவில் இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் மட்டும்தான் விற்பனையில் உள்ளது. இந்த நிலையில் இந்த பைக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலமாக பராமரிப்பு தொகுப்பு மற்றும் சில எளிய நிதி திட்டங்கள் என ரூ.12,000 வரையில் வாடிக்கையாளர்கள் சேமிக்கலாம்.

பெனெல்லி பைக் கனவை நிஜமாக்கும் நேரம் இதுதான்!! ரூ.12,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

இந்த சிறப்பு சலுகை இந்தியாவில் உள்ள அனைத்து டீலர்ஷிப் மையங்களிலும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே கூறியதுபோல், இந்த சலுகை மட்டுமில்லாமல் இம்பீரியல் 400 பைக்கிற்கு அட்டகாசமான நிதி திட்டங்களையும் பெனெல்லி நிறுவனம் அறிவித்துள்ளது.

பெனெல்லி பைக் கனவை நிஜமாக்கும் நேரம் இதுதான்!! ரூ.12,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

இதில் ரூ.4,999ல் குறைந்த மாதத்தவணை திட்டமும் அடங்குகிறது. சாத்தியமான வாடிக்கையாளர்கள் இந்த 400சிசி ரெட்ரோ மோட்டார்சைக்கிளின் மொத்த எக்ஸ்ஷோரூம் விலையில் 85 சதவீதத்தை மாதத்தவணையாக மாற்றி கொள்ளலாம்.

பெனெல்லி பைக் கனவை நிஜமாக்கும் நேரம் இதுதான்!! ரூ.12,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

இவற்றுடன் 2-வருட சேவை மற்றும் 3-வருட முடிவிலா கிமீ-கள் உத்தரவாதத்தையும் இந்த பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பெனெல்லி நிறுவனம் வழங்குகிறது. இவற்றின் மூலமாக எளிமையாக இம்பீரியல் 400 பைக்கிற்கு உரிமையாளர் ஆகலாம்.

பெனெல்லி பைக் கனவை நிஜமாக்கும் நேரம் இதுதான்!! ரூ.12,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

இந்த 2020 வருடத்தில் அறிமுகமான புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்6 பைக்கை பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தின் மூலமாகவோ அல்லது டீலர்ஷிப் மையத்தின் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். இதற்கான டோக்கன் தொகையாக ரூ.6000 வசூலிக்கப்படுகிறது.

பெனெல்லி பைக் கனவை நிஜமாக்கும் நேரம் இதுதான்!! ரூ.12,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

சிவப்பு, சில்வர் மற்றும் கருப்பு என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் கிடைக்கும் இம்பீரியல் 400 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் பைக்கின் விலை ரூ.10,000 அதிகமாக ரூ.2.10 லட்சமாக உள்ளது.

பெனெல்லி பைக் கனவை நிஜமாக்கும் நேரம் இதுதான்!! ரூ.12,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

பழமையான மோட்டார்சைக்கிள்களின் தோற்றத்தில் வழங்கப்படும் இந்த மோட்டார்சைக்கிள் அதற்கு ஏற்றாற்போல் ஹெட்லேம்ப், டெயில்லேம்ப்கள் மற்றும் டர்ன்-இண்டிகேட்டர்களை ரெட்ரோ தோற்றத்தில் பெறுகிறது.

பெனெல்லி பைக் கனவை நிஜமாக்கும் நேரம் இதுதான்!! ரூ.12,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

பெட்ரோல் டேங்க் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் ரெட்ரோ தோற்றத்தில் காட்சியளிக்கின்றன. மேற்கூறப்பட்ட விளக்கு பகுதிகளிலும், எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் சக்கரங்களிலும் அதிகளவில் கொடுக்கப்பட்டுள்ள க்ரோம் தொடுதல்கள் பைக்கிற்கு விலையுயர்ந்த தோற்றத்தை வழங்குகின்றன.

பெனெல்லி பைக் கனவை நிஜமாக்கும் நேரம் இதுதான்!! ரூ.12,000 வரையில் சலுகைகள் அறிவிப்பு

இம்பீரியல் 400 பைக்கில் 374சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 20 பிஎச்பி மற்றும் 3500 ஆர்பிஎம்-ல் 29 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஒரே ஒரு மோட்டார்சைக்கிள் மாடலாக விற்பனை செய்யப்படுவதால் இம்பீரியல் 400-இன் விற்பனையின் மீது பெனெல்லி இந்தியா நிறுவனம் முழு கவனம் செலுத்தி வருகிறது. அதன் வெளிப்பாடாகவே தற்போது இந்த ரெட்ரோ மோட்டார்சைக்கிளுக்கு வருட இறுதி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli Imperiale 400 Year-End Offers: Benefits Up To Rs 12,000 & More In December 2020
Story first published: Wednesday, December 23, 2020, 22:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X