திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு!

திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூம் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு!

இந்தியாவின் பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் பெனெல்லி நிறுவனம் முக்கிய நிறுவனமாக இருந்து வருகிறது. டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் சரியான விலை என அனைத்திலும் பெனெல்லி நிறுவனத்தின் பைக் மாடல்கள் நிறைவை தருவதால், வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு!

இந்த நிலையில், இந்தியாவில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் பெனெல்லி ஈடுபட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பல முக்கிய நகரங்களில் புதிய ஷோரூம்களை திறந்து வருகிறது.

திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு!

அந்த வகையில், தற்போது திருச்சி மாநகரில் புதிய பைக் ஷோரூமை பெனெல்லி நிறுவனம் திறந்துள்ளது. கரூர் பைபாஸ் சாலையில் விக்ரம் பிளாஸா என்ற முகவரியில் இந்த புதிய ஷோரூம் அமைந்துள்ளது.

திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு!

திருச்சியில் புதிய ஷோரூம் திறப்பு குறித்து பெனெல்லி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜாபா கூறுகையில்,"நாடுமுழுவதும் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையை வழங்கும் வகையில் புதிய டீலர்களை திறந்து வருகிறோம். திருச்சியில் புதிய டீலர்ஷிப் திறப்பு மட்டற்ற மகிழ்ச்சியை வழங்குகிறது.

திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு!

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை அனுபவத்தை வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். திருச்சி டீலரில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் சிறப்பான சேவை அனுபவத்தை உணர்வார்கள்.

திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு!

நாடு முழுவதும் விற்பனை, சர்வீஸ் மற்றும் விற்பனைக்கு பிந்தைய உதிரிபாகங்கள் சப்ளை ஆகியவற்றை வழங்கும் 3எஸ் ஷோரூம்களை திறப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இது வெறும் பைக் ஷோரூமாக மட்டுமில்லாமல், பைக் பிரியர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக அமையும்," என்று தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு!

இந்த ஷோரூமில் பெனெல்லி 302ஆர், டிஎன்டி 300 மற்றும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட இம்பீரியல் 400 பிஎஸ்-6 மாடல் பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மாடலுக்கு ரூ.6,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்ப்டடுள்ளது.

திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு!

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் சிவப்பு, கருப்பு மற்றும் சில்வர் வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த பைக்கிற்கு ரூ.4,999 மாதத் தவணை கொண்ட கடன் திட்டமும் வழங்கப்படுகிறது. இம்பீரியல் 400 பைக்கின் விலையில் 85 சதவீதம் வரை கடனாக பெறும் வாய்ப்பும் உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு திருச்சி பெனெல்லி ஷோரூமை நேரில் அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli has launched new bike dealership in Trichy.
Story first published: Wednesday, December 30, 2020, 11:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X