ப்ரேக்டவுனாலும் இயங்கக்கூடிய பென்லிங் அவ்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான பென்லிங், அவ்ரா என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

ப்ரேக்டவுனாலும் இயங்கக்கூடிய பென்லிங் அவ்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

ரூ.99,000-ஐ ஆன்-ரோடு விலையாக கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. 2500 பிஎல்டிசி எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் அகற்றக்கூடிய 72 வோல்ட்/ 40 ஆம்பியர் நேரம் லித்தியம்-இரும்பு பேட்டரி இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது.

ப்ரேக்டவுனாலும் இயங்கக்கூடிய பென்லிங் அவ்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

அவ்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் செயல்படுதிறன் பற்றி கலவையான கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. டீலர் ஒருவர் இந்த ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜில் 60ல் இருந்து 70 கிமீ தூரம் வரை பயணிக்கும் என கூறினார். ஆனால் மற்றொரு டீலரோ 90-100 கிமீ வரை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜில் இயங்கும் என கூறியுள்ளார்.

ப்ரேக்டவுனாலும் இயங்கக்கூடிய பென்லிங் அவ்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

அதுவே பென்லிங் நிறுவனமோ இந்த ஸ்கூட்டர் ஒரே சார்ஜில் 120 கிமீ தூரம் வரை இயங்கும் ஆற்றல் கொண்டது என கூறுகிறது. இதில் எது உண்மை என்பது டெலிவிரிக்கு பிறகே தெரியவரும். பென்லிங் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரிக்கு 3 வருட உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.

ப்ரேக்டவுனாலும் இயங்கக்கூடிய பென்லிங் அவ்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்த ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக 65 kmph வேகத்தில் இயங்கும் திறனை பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர் ப்ரேக்டவுனால் நின்று போனாலும் இதில் உள்ள ப்ரேக்டவுன் ஸ்மார்ட் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தால் ஸ்கூட்டரை மறுபடியும் ஸ்டார்ட் செய்யவும், நகர்த்தவும் முடியும்.

ப்ரேக்டவுனாலும் இயங்கக்கூடிய பென்லிங் அவ்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

ப்ரேக்டவுன் மட்டுமில்லாமல், கண்ட்ரோலர், மோட்டார் அல்லது பேட்டரி போன்றவற்றில் எதாவது ஒன்று செயலிழந்து ஸ்கூட்டர் இயங்குவது நின்றாலும் இந்த சிஸ்டத்தை ஆக்டிவேட் செய்து ஸ்கூட்டரை அந்த இடத்திலிருந்து இயக்கி செல்ல முடியும்.

ப்ரேக்டவுனாலும் இயங்கக்கூடிய பென்லிங் அவ்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

ஆனால் இந்த மோடில் ஸ்கூட்டர் மெதுவாகவே இயக்கும். இந்த சிஸ்டம் ஸ்கூட்டரை அவசரக்காலத்தில் இயக்குவதற்கு பேட்டரியின் பவரை பயன்படுத்தி கொள்கிறது. இதன் பேட்டரி முழுவதும் 100 சதவீத சார்ஜை அடைய 4 மணிநேரத்தை எடுத்துக்கொள்ளும்.

ப்ரேக்டவுனாலும் இயங்கக்கூடிய பென்லிங் அவ்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

பிரபலமான வெஸ்பாவின் சீன நகல் போல் உள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வட்ட வடிவிலான ஹெட்லைட்ஸ், டர்ன் சிக்னல் இண்டிகேட்டர்ஸ், ஏற்ற இறக்கம் இல்லாத பெரிய அளவிலான இருக்கை அமைப்பு, அதிக இடைவெளியில் கால் வைக்கும் போர்டு மற்றும் ரெட்ரோ டிசைனில் டெயில்லைட்ஸ் உள்ளிட்டவற்றை பென்லிங் நிறுவனம் வழங்கியுள்ளது.

ப்ரேக்டவுனாலும் இயங்கக்கூடிய பென்லிங் அவ்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இவை மட்டுமின்றி, சாவியில்லாமல் ஸ்கூட்டரை இயக்கும் வசதி, யுஎஸ்பி சார்ஜர், வாகனத்தை திருடுப்போகாமல் தடுக்க அலாரம், ரியர் வீல் லாக்கிங் சிஸ்டம், முழுவதும் டிஜிட்டலாக உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பின்புற பார்க்கிங் அசிஸ்ட் போன்றவையும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளன.

ப்ரேக்டவுனாலும் இயங்கக்கூடிய பென்லிங் அவ்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

பென்லிங் நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே க்ரிட்டி, ஐகான் மற்றும் ஃபால்கான் என்ற மூன்று மிதவேக ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அவ்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வேகமான ஸ்கூட்டர் பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

ப்ரேக்டவுனாலும் இயங்கக்கூடிய பென்லிங் அவ்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இவ்வளவு அதிகமான நவீன தொழிற்நுட்பங்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளதால், இந்த ஸ்கூட்டருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.99,000 என்கிற விலை நியாயமானதே. ஆனால் இந்த ஸ்கூட்டர் அங்கம் வகிக்கவுள்ள பிரிவில் சேத்தக், ஏத்தர் 450 போன்ற பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளதால், இதன் விற்பனை எந்த அளவில் இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

English summary
Benling Aura Electric Scooter Launched In India At Rs 99,000 On Road
Story first published: Friday, January 24, 2020, 18:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X