திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

இந்தியாவில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த டாப்-10 பைக்குகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் திரும்பி பார்க்கலாம்.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, 2020ம் ஆண்டு இந்திய சந்தையில் ஏராளமான புதிய இரு சக்கர வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதில், விலை குறைவான கம்யூட்டர் மோட்டார்சைக்கிள்கள் முதல் விலை உயர்ந்த பெர்ஃபார்மென்ஸ் மோட்டார்சைக்கிள்கள் வரை அனைத்தும் அடங்கும்.

அத்துடன் ஏற்கனவே விற்பனையில் உள்ள பழைய மாடல்கள் ஒரு சில அப்டேட்கள் உடனும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. மேலும் ஸ்பெஷல் எடிசன் மாடல்களும் சந்தையில் களமிறக்கப்பட்டன. 2020ம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், நடப்பாண்டில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப்-10 பைக்குகளின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர்

பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர் பைக்கில், 1800 சிசி பாக்ஸர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 158 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஸ்டாண்டர்டு மற்றும் ஃபர்ஸ்ட் எடிசன் என இரண்டு வேரியண்ட்களில் இந்த பைக் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே 18.90 லட்ச ரூபாய் ஆகவும், 21.40 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

டிரையம்ப் டைகர் 900

டைகர் 800 பைக்கிற்கு மாற்றாக, டிரையம்ப் டைகர் 900 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பைக்கிற்கு 13.7 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ட்ரையம்ப் டைகர் 900 பைக்கில், 888 சிசி மூன்று-சிலிண்டர் லிக்யூட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 87 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

பிஎஸ்6 பிஎம்டபிள்யூ ஜி 310 ட்வின்ஸ்

பிஎம்டபிள்யூ ஜி 310 ட்வின்ஸ் என்பது, ஜி 310 ஆர் (நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர்) மற்றும் ஜி 310 ஜிஎஸ் (அட்வென்ஜர்-டூரர்) ஆகிய இரண்டு பைக்குகளையும் உள்ளடக்கியது ஆகும். இந்த 2 பைக்குகளும் இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. ஆனால் இந்த இரண்டு பைக்குகளும், பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

இந்த இரண்டு பைக்குகளின் விலைகளையும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் குறைத்துள்ளது. தற்போது பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக் 2.45 லட்ச ரூபாய் என்ற விலையிலும், பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக் 2.85 லட்ச ரூபாய் என்ற விலையிலும் கிடைக்கின்றன. இவை இரண்டும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த இரண்டு பைக்குகளிலும், பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான 312 சிசி லிக்யூட்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

கேடிஎம் 390 அட்வென்ஜர்

இந்திய சந்தையில் கேடிஎம் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் அட்வென்ஜர் பைக் இதுதான். கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் அடிப்படையில் கேடிஎம் 390 அட்வென்ஜர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

கேடிஎம் 390 ட்யூக் மற்றும் கேடிஎம் 390 ஆர்சி பைக்குகளில் உள்ள அதே இன்ஜின்தான் கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக்கிற்கு 3.04 லட்ச ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டைல், பெர்ஃபார்மென்ஸ் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த பைக் உள்ளது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

ஹோண்டா ஹைனெஸ் சிபி350

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு ஹோண்டா அளித்துள்ள பதில்தான் ஹைனெஸ் சிபி350. இது இந்திய சந்தைக்காக அறிமுகம் செய்யப்பட்ட புத்தம் புதிய தயாரிப்பு ஆகும். ஹோண்டாவின் பிரீமியம் பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக ஹைனெஸ் சிபி350 விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை 1.85 லட்ச ரூபாயில் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) இருந்து தொடங்குகிறது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில், 350 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.8 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மட்டுமல்லாது, கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் உடனும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 போட்டியிட்டு வருகிறது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350

ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்து வெளிவந்துள்ள புத்தம் புதிய தயாரிப்பு மீட்டியோர் 350. ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 மாடலுக்கு மாற்றாக இந்த மாடர்ன் க்ளாசிக் க்ரூஸர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக்கில் புத்தம் புதிய எஸ்ஓஹெச்சி 350 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு புதிய வசதிகளும், உபகரணங்களும் இடம்பெற்றுள்ளன.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த பைக்கின் விலை 1.75 லட்ச ரூபாயில் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) இருந்து தொடங்குகிறது. ஹோண்டா நிறுவனத்தின் புத்தம் புதிய ஹைனெஸ் சிபி350 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் உடன் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 போட்டியிட்டு வருகிறது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

ஹஸ்க்வர்னா 250 ட்வின்ஸ்

ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் மூலம், ஹஸ்க்வர்னா பிராண்டு இந்திய சந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் நுழைந்தது. கோவாவில் நடைபெற்ற 2019 இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியில், இந்த 2 பைக்குகளும் வெளியிடப்பட்டன. ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 ஆகிய 2 பைக்குகளும் 1.85 லட்ச ரூபாய் என்ற டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கின்றன.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

கேடிஎம் 250 அட்வென்ஜர்

கேடிஎம் நிறுவனத்தின் இந்திய அட்வென்ஜர் லைன்அப்பில், புதிதாக இணைந்துள்ள எண்ட்ரி-லெவல் மாடல் கேடிஎம் 250 அட்வென்ஜர். கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக்கின் டிசைன் அம்சங்களும், பெரும்பாலான உபகரணங்களும்தான் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன. ஆனால் கேடிஎம் 250 ட்யூக் பைக்கின் சிறிய 250 சிசி இன்ஜின் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

ட்யூக் 250 பைக்கில் இந்த இன்ஜின் என்ன பவர் மற்றும் டார்க் திறனை வழங்குகிறதோ, அதேபோல்தான் 250 அட்வென்ஜர் பைக்கிலும் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேடிஎம் 250 அட்வென்ஜர் பைக்கின் விலை 2.48 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (எக்ஸ் ஷோரூம், டெல்லி). இது கேடிஎம் 250 ட்யூக் பைக்கை விட சற்றே அதிகமான விலையாகும்.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

ஹோண்டா ஹார்னெட் 2.0

இந்திய சந்தைக்காக ஹோண்டா நிறுவனம் களமிறக்கிய புத்தம் புதிய தயாரிப்பு இதுவாகும். ஹார்னெட் என்ற பெயரில் ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் பைக்கை விற்பனை செய்திருந்தாலும், இந்த புதிய 2.0 மாடலானது, முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வித்தியாசமானது. முந்தைய மாடல் 160 சிசி செக்மெண்ட்டில் இருந்த நிலையில், புதிய 2.0 மாடல் 184 சிசி இன்ஜினுடன் வந்துள்ளது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

புதிய மாடலில், டிசைன் மாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், ஏராளமான வசதிகளும், உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கின் விலை 1.27 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ் ஷோரூம், டெல்லி). இந்த பைக்கில் 17 பிஎச்பி பவர் மற்றும் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 184 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பிடம் இருந்து வந்த புத்தம் புதிய தயாரிப்பு எக்ஸ்ட்ரீம் 160ஆர். இது எண்ட்ரி-லெவல் நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக் ஆகும். குறைவான விலையில், அதிநவீன வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் இந்த பைக் பெற்றுள்ளது. சிங்கிள் டிஸ்க் மற்றும் டபுள் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் இந்த பைக் கிடைக்கிறது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த சிறந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்கள்...

இந்த பைக்கின் ஆரம்ப விலை 1.02 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி). ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில், 163 சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 15 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் 155 உள்ளிட்ட பைக்குகளுடன், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் போட்டியிட்டு வருகிறது.

Most Read Articles

English summary
Best Bike Launches Of 2020 In India: From Hero Xtreme 160R To BMW R 18 Cruiser. Read in Tamil
Story first published: Thursday, December 17, 2020, 18:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X