Just In
- 47 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Movies
ஜாமீன் கிடைச்சு 2 நாளாச்சு.. 140 நாளுக்குப் பிறகு சிறையில் இருந்து வர காத்திருக்கும் ராகிணி திவேதி!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- News
எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Lifestyle
நாவூற வைக்கும்... பஞ்சாபி மட்டன் மசாலா
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாதம் ரூ.4,500 கட்ட முடியுமாங்க?... அப்ப பிஎம்டபிள்யூ ஜி310 பைக்கை ஈஸியா வாங்கலாம்!
மிகக் குறைந்த மாதத் தவணையில் பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகளை வாங்குவதற்கான சிறப்பு கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பிரிமீயம் வகை பைக் தயாரிப்பில் பிஎம்டபிள்யூ நிறுவனம் பிரபலமாக உள்ளது. இந்தியாவிலும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பல்வேறு பட்ஜெட்டில் பிஎம்டபிள்யூ பைக்குகள் கிடைத்தாலும், அந்நிறுவனத்தின் மிக குறைவான விலை கொண்ட மாடல்களாக ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய மாடல்கள் உள்ளன.

டிவிஎஸ் மோட்டார்ஸ் கூட்டணியில் இந்த இரண்டு பைக் மாடல்களையும் பிஎம்டபிள்யூ உற்பத்தி செய்து வருகிறது. பிஎம்டபிள்யூ பைக் கனவில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த இரண்டு பைக் மாடல்களும் சரியான தேர்வாக இருந்து வருகிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் ஆகிய இரண்டு மாடல்களும் விரைவில் பிஎஸ்-6 எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த பைக்குகளுக்கு முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் அல்லது டீலர்கள் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை மனதில் வைத்து, இந்திய வாடிக்கையாளர்கள் எளிதாக இந்த பைக்குகளை வாங்குவதற்கும், வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுப்படுத்துவதற்கும் கவர்ச்சிகரமான கடன் திட்டங்களை இந்த இரண்டு பைக் மாடல்களுக்கும் பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்த சிறப்பு கடன் திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பிஎம்டபிள்யூ புல்லட் கடன் திட்டம் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், இந்த இரண்டு பிஎஸ்6 தர பைக் மாடல்களுக்கும் சிறப்பு கடன் திட்டத்தை பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது. இந்த பைக் மாடல்களில் ஒன்றை வாங்க விரும்புவோர், இந்த சிறப்பு கடன் திட்டத்தை தேர்து கொள்ளலாம்.

மிக குறைவான வட்டி விகிதம் மற்றும் ரூ.4,500 மாதத் தவணை கட்டும் வசதியுடன் இந்த சிறப்பு கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீண்ட கால கடன் திட்டமாக இது வகுக்கப்பட்டு இருக்கும்.

பிஎஸ்4 மாடலிலிருந்து சிறிய மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு புதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக் மாடல்களும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக்குகளில் 312சிசி எஞ்சின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், உள்ளூர் உதிரிபாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட இருப்பதால், பிஎஸ்4 மாடல்களைவிட பிஎஸ்6 மாடல்களின் விலை குறைவாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. குறைவான மாதத் தவணை திட்டம் தவிர்த்து, மூன்று ஆண்டுகளுக்கான வாரண்டி, சாலை அவசர உதவி திட்டங்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.