கேடிஎம் சந்தையை உடைக்க ஸ்கெட்ச் போட்ட பிஎம்டபிள்யூ!

கேடிஎம் சந்தையை உடைக்கும் விதத்தில், ஜி310 ட்வின்ஸ் பைக்குகளின் விலையை தடாலடியாக குறைக்க பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கேடிஎம் சந்தையை உடைக்க ஸ்கெட்ச் போட்ட பிஎம்டபிள்யூ!

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் டிவிஎஸ் கூட்டணியில் ஜி310 பிராண்டில் இரண்டு வகை பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. ஆரம்ப ரக பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை பிடிக்கும் விதத்தில் ஜி 310ஆர் என்ற நேக்கட் வகை ஸ்ட்ரீட் பைக் மாடலையும், ஜி 310 ஜிஎஸ் என்ற சாகச வகை பைக் மாடல்களையும் சந்தைப்படுத்தியது.

கேடிஎம் சந்தையை உடைக்க ஸ்கெட்ச் போட்ட பிஎம்டபிள்யூ!

இந்த பைக்குகள் தனித்துவமான வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றிருப்பதுடன், வெற்றிகரமான மாடல்களாகவும் உள்ளன. இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக இந்த இரண்டு பைக் மாடல்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

MOST READ: தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ்.. புது வகை டெஸ்டிங் லேப்பை கையாளும் பிரபல நிறுவனம்...

கேடிஎம் சந்தையை உடைக்க ஸ்கெட்ச் போட்ட பிஎம்டபிள்யூ!

இந்த இரண்டு பைக் மாடல்களும் வரும் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஸிக் வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

கேடிஎம் சந்தையை உடைக்க ஸ்கெட்ச் போட்ட பிஎம்டபிள்யூ!

பொதுவாக பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும் மாடல்கள் விலை கணிசமாக உயர்த்தப்பட்டு வருகின்றன. மாறாக, பிஎம்டபிள்யூ ஜ310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக் மாடல்களின் விலையும் கணிசமாக குறைக்கப்பட உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

MOST READ: அட்டகாசமான நிறத்தில் டீலர்களை சென்றடைந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245...

கேடிஎம் சந்தையை உடைக்க ஸ்கெட்ச் போட்ட பிஎம்டபிள்யூ!

தற்போது பிஎஸ்4 மாசு உமிழ்வு தரம் கொண்ட பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் ரூ.2.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜி 310ஜிஎஸ் சாகச பைக் ரூ.3.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கேடிஎம் சந்தையை உடைக்க ஸ்கெட்ச் போட்ட பிஎம்டபிள்யூ!

இந்த நிலையில், புதிய பிஎஸ்6 மாடலின் விலை ரூ.75,000 வரை குறைக்கப்பட உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. இதனால், கேடிஎம் 390 பைக் மாடல்களுக்கு மிக நெருக்கமான விலையில் இந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது. இதனால், கேடிஎம் பைக் மாடல்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும்.

MOST READ: 1 ரூபா செலவில்லாம 32,000 கிமீ ஓட்டியாச்சு.. கோனா மின்சார காரின் உரிமையாளர் பெறுமிதம்.. இது உண்மைதானா

கேடிஎம் சந்தையை உடைக்க ஸ்கெட்ச் போட்ட பிஎம்டபிள்யூ!

டிவிஎஸ் அப்பாச்சி ஆஆர் 310 பைக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்6 எஞ்சின்தான் இந்த இரு பைக்குகளிலும் சிறிய மாற்றங்கள் செய்து பொருத்தப்பட உள்ளது. பவர் வெளிப்படுத்தும் திறனில் சிறிய வித்தியாசங்கள் இருக்கலாம்.

கேடிஎம் சந்தையை உடைக்க ஸ்கெட்ச் போட்ட பிஎம்டபிள்யூ!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் வழங்கப்பட்டுள்ள பிஎஸ்6 எஞ்சின் அதிர்வுகள் குறைவாக இருக்கும் இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தும் திறனில் மாற்றம் இல்லாத வகையில் மிகவும் நுணுக்கமாக மாற்றங்களை செய்துள்ளது.

MOST READ: கொரோனா தடுப்பு பணிகள்... ரூ.3 கோடி மதிப்புடைய உதவிகளை வழங்கும் பிஎம்டபிள்யூ!

கேடிஎம் சந்தையை உடைக்க ஸ்கெட்ச் போட்ட பிஎம்டபிள்யூ!

இந்த பைக்கில் இருக்கும் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 312சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், பிஎம்டபிள்யூ ஜி 310 பைக்குகளின் எஞ்சினுடன் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் நிரந்தர அம்சமாக கொடுக்கப்படும்.

கேடிஎம் சந்தையை உடைக்க ஸ்கெட்ச் போட்ட பிஎம்டபிள்யூ!

இதுதவிர்த்து, வேறு பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்று நம்பலாம். இரண்டு மாடல்களிலுமே அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உண்டு.

கேடிஎம் சந்தையை உடைக்க ஸ்கெட்ச் போட்ட பிஎம்டபிள்யூ!

கேடிஎம் 390 ட்யூக், ஹோண்டா சிபி 300ஆர் ஆகிய பைக் மாடல்களுக்கு பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் போட்டி போடும். ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மார்க்கெட்டை குறிவைத்து பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக் விலை குறைப்புடன் வர இருக்கிறது.

Most Read Articles

English summary
BMW G 310 R and G 310 GS BS6 models are expected to arrive by September. Both the models are expected to take a massive price cut of around Rs 75,000 in its BS6 format.
Story first published: Thursday, April 16, 2020, 16:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X