விலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

பிஎம்டபிள்யூ ஜி310 பைக் மாடல்களின் பிஎஸ்-6 மாடல் விலையை குறைத்து அறிமுகம் செய்தததற்கு கை மேல் பலன் கிட்டி உள்ளது. இந்த இரண்டு பைக்குகளுக்கும் சிறப்பான புக்கிங் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

 புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

பிரிமீயம் பைக்குகள் தயாரிப்பில் பிரபலமான பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் மிக குறைவான பைக் மாடல்களாக ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய பைக் விற்பனையில் வைக்கப்பட்டுள்ளன. இதில், பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் நேக்கட் பாடி ஸ்டைலிலும், ஜி310 ஜிஎஸ் பைக் மாடலானது அட்வென்ச்சர் பைக் மாடலாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ பைக் பிரியர்களுக்கு இந்த இரண்டு பைக்குகளுக்கும் மிக குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் வாய்ப்பை தந்து வருகின்றன.

 புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் வடிவமைப்பில் மாறுதல்களுடன் மேம்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக் மாடல்களும் கடந்த 8ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

 புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தரும் வகையில், இந்த இரண்டு பைக் மாடல்களின் விலையையும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் அதிரடியாக குறைத்து நிர்ணயித்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது.

 புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

இந்த விலை குறைப்பு நடவடிக்கைக்கு கை மேல் கிடைத்துள்ளது. அதாவது, இந்த இரண்டு பைக் மாடல்களுக்கும் 1,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

 புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் பிஎஸ்6 மாடலுக்கு ரூ.2.45 லட்சம் விலையும், ஜி310 ஜிஎஸ் மாடலுக்கு ரூ.2.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டது.

 புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

அதாவது, ஜி310 ஆர் பிஎஸ் பைக் மாடலைவிட பிஎஸ்-6 மாடல் விலை ரூ.54,000 குறைத்து நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று, ஜி310 ஜிஎஸ் பைக் மாடலின் விலை ரூ.64,000 குறைத்து நிர்ணயிக்கப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்களின் கவனத்தை இந்த இரண்டு பைக் மாடல்களும் வெகுவாக கவர்ந்துள்ளது.

 புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

இந்த பைக் மாடல்களில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 313சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 33 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் க்ளட்ச், ரைடு பை வயர் தொழில்நுட்பங்களும் இதில் உள்ளன.

 புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

புதிய பிஎம்டபிள்யூ 310 பைக் மாடல்களில் முழுமையான எல்இடி ஹெட்லைட், எல்இடி இண்டிகேட்டர்கள், எல்இடி பிரேக் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்குகளில் க்ளட்ச் லிவர் மற்றும் ஹேண்ட்பிரேக் லிவர்களை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளன.

 புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

இந்த பைக் மாடல்களுக்கு ரூ.50,000 முன்பணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பிஎம்டபிள்யூ மோட்டோராட் டீலர்களில் இந்த பைக்குகளை புக்கிங் செய்து கொள்ளலாம். கடந்த வாரம் முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
The updated BMW G310 R and G310 GS bike models have received over 1,000 Bookings since its launch in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X