எதிர்காலத்தில் ஸ்கூட்டர் இப்படிதான் இருக்குமோ! விநோத உருவத்தில் பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்

எதிர்காலத்தில் ஸ்கூட்டர்கள் இப்படிதான் இருக்குமோ என கேள்வியெழுப்பும் அளவிற்கு முற்றிலும் விநோத தோற்றத்தில் பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

எதிர்காலத்தில் ஸ்கூட்டர் இப்படிதான் இருக்குமோ! விநோத உருவத்தில் பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்...

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ, பிஎம்டபிள்யூ மோட்டாராட் எனும் பெயரில் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிறுவனம், உலக தேவையை அறிந்து மின்சார வாகன உற்பத்தியில் தற்போது களமிறங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அதன் முதல் மின்சார இருசக்கர வாகனத்தை வெளியீடு செய்துள்ளது.

எதிர்காலத்தில் ஸ்கூட்டர் இப்படிதான் இருக்குமோ! விநோத உருவத்தில் பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்...

டெஃபினிஷன் சிஇ 04 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கும் அனைத்து மின்சார இருசக்கர வாகனங்களையும் ஓரம் கட்டக்கூடிய வசதி, உருவம் மற்றும் திறனில் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, இதன் தோற்றம் இதுவரை கண்டிராத அமைப்பில் உள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டருக்கு நீளமான பெட்டிப் போன்ற உருவமைப்பை பிஎம்டபிள்யூ வழங்கியுள்ளது.

எதிர்காலத்தில் ஸ்கூட்டர் இப்படிதான் இருக்குமோ! விநோத உருவத்தில் பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்...

ஹாலிவுட் திரைப்படங்களில் வரக்கூடிய டம்மி இருசக்கர வாகனத்தைப் போன்று இது தோன்றுகின்றது. ஆனால், பயன்படக்கூடிய நவீன ரக மின்சார ஸ்கூட்டராகும். இதன் வசதி மற்றும் உருவம் ஆகிய அனைத்தும், இருசக்கர வாகனம் என்றால் இப்படிதான் இருக்கும் என்கிற நம்முடைய பார்வையை மாற்றும் வகையில் அமைந்துள்ளது.

எதிர்காலத்தில் ஸ்கூட்டர் இப்படிதான் இருக்குமோ! விநோத உருவத்தில் பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்...

இதற்கேற்ப ஸ்கூட்டரின் பின்னிருக்கை உள்ளது. தனியாக அந்தரத்தில் தொங்கக்கூடிய அமைப்பு அதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற உருவமைப்பை பைக்குகளில் மட்டுமே இதுவரை நாம் கண்டிருப்போம். வித்தியாசமாக பிஎம்டபிள்யூ மோட்டாராட் அதன் மின்சார ஸ்கூட்டரில் இந்த அமைப்பை நிறுவியுள்ளது. இதுமட்டுமின்றி இதன் கால் வைக்கும் பகுதி, எஞ்ஜின் தோற்றம் மற்றும் ஸ்கூட்டரின் முன் பகுதி என அனைத்தும் எதிர்கால டிசைனில் காட்சியளிக்கின்றது.

எதிர்காலத்தில் ஸ்கூட்டர் இப்படிதான் இருக்குமோ! விநோத உருவத்தில் பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்...

தொடர்ந்து ஸ்மார்ட்போனை பெரிய அளவிலான திரை கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஸ்கூட்டரின் ரேஞ்ஜ், சார்ஜ் அளவு, இணைப்பு வசதி மற்றும் வேகம் என பல்வேறு தகவல்களை வழங்கக்கூடியது. இந்த புதுமுக மின்சார ஸ்கூட்டரின் ரேஞ்ஜின் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து, என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் இந்த ஸ்கூட்டரில் இடம்பெற இருக்கின்றது என்பது பற்றிய தகவலையும் அது ரகசியமாக மறைத்து வைத்துள்ளது.

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் இந்த டெஃபினிஷன் சிஇ 04 மின்சார ஸ்கூட்டரை கான்செப்ட் மாடலாகவே அறிமுகம் செய்திருக்கின்றது. ஆகையால், இது விற்பனைக்கு வர இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகலாம் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியிடப்படிவில்லை.

எதிர்காலத்தில் ஸ்கூட்டர் இப்படிதான் இருக்குமோ! விநோத உருவத்தில் பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்...

தற்போது உலகம் முழுவதிலும் மின் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் விரைவில் உற்பத்தி மாடலாக இது அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
BMW Motorrad Reveals Definition CE 04 Concept e-Scooter. Read In Tamil.
Story first published: Friday, November 13, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X