Just In
- 1 hr ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 2 hrs ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 3 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ18 லட்சத்தில் விற்பனைக்கு வருகிறது புதிய பிஎம்டபிள்யூ பைக்... இந்திய அறிமுக தேதி அறிவிப்பு...
புதிய ஆர்18 பைக்கை இந்தியாவில் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளதாக பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள டீசர் படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

முதன்முறையாக ஆர்18 பைக்கின் பெயரை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் கடந்த ஏப்ரல் மாதம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவந்தது. இந்த நிலையில் தற்போது இதன் அறிமுகம் வருகிற 19ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான தோற்றத்தில் வடிவமைக்கபடுகின்ற பிஎம்டபிள்யூ ஆர்18 பைக் ஆனது அதிக எடை கொண்ட மாடர்ன் க்ரூஸர் ரக பைக் மாடலாகும். இந்த பைக்கில் கிளாசிக் ஸ்டைல் ஆனது மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வகையில் கண்ணீர் துளி வடிவில் பெட்ரோல் டேங்கை கொண்டுள்ள இந்த பைக்கில் வீல்பேஸ் மிகவும் நீளமானதாகவும், ஹெட்லேம்ப் வட்ட வடிவிலும், சரியான இடங்களில் க்ரோம் தெறிக்கும் விதத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த க்ரூஸர் பைக்கின் டிசைன் 1930களில் விற்பனையில் இருந்த பிஎம்டபிள்யூ ஆர்5-ன் தோற்றத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அழகான க்ரோம்டு என்ஜின், வெளிப்படுத்தப்பட்ட தண்டு இயக்கி, மறைவாக பின்புறத்தில் கான்டிலீவர் மோனோஷாக், மீனின் வால் வடிவிலான முனை & பழமையான வால்வு கவர்களுடன் அருமையாக வடிவமைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் வயர் ஸ்போக் சக்கரங்கள் உள்ளிட்டவை பிஎம்டபிள்யூ ஆர்18 பைக்கின் சிறம்பம்சங்களாகும்.

அமெரிக்கர்கள் ஒற்றை இருக்கை கொண்ட பைக்குகளில் உலா வரவே விரும்புவார்கள் என்பதால் இதன் இருக்கை அமைப்பு எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. பிஎம்டபிள்யூ ஆர்18 பைக்கில் 1802சிசி பாக்ஸர்-இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்த என்ஜின் தலைப்பகுதி பைக்கின் பக்கவாட்டு பகுதியில் சற்று வெளியே நீண்டுள்ளதை படத்தை பார்க்கும்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த ஏர்-கூல்டு/ஆயில்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 4,750 ஆர்பிஎம்-ல் 91 பிஎச்பி பவரையும், 3000 ஆர்பிஎம்-ல் 157 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்த என்ஜின் உடன் இணைக்கப்படுகின்ற 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆனது செயின் இயக்கி அல்லது பெல்ட் இயக்கிகளுக்கு பதிலாக இறுதி தண்டு இயக்கி மூலமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் குறைவான வேகத்தில் பின்னோக்கி இயங்குவதற்கான கியர் வசதியும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

மழை, ரோல் மற்றும் ராக் என்ற மூன்று விதமான ரைடிங் மோட்கள் உடன் விற்பனைக்கு வரவுள்ள இந்த பிஎம்டபிள்யூ பைக்கில் ஆட்டோமேட்டிக் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் மோட்டார் ஸ்லிப் கட்டுப்பாடு உள்ளிட்டவையும் வழங்கப்படவுள்ளது. இதன் மழை மோட் ஆனது குறைவான ஆற்றலில் அதிக ட்ராக்ஷன் கண்ட்ரோல் உடன் பைக்கை இயக்கும்.

அதுவே ரோல் மோட் தினசரி பயன்பாட்டிற்கும், ராக் மோட் அதிக என்ஜின் ஆற்றல் தேவைப்படும் நேரத்திலும் சரியானவைகளாக இருக்கும். அதேபோல் ஸ்டாண்டர்ட் & முதல் எடிசன் என இரு விதமான வேரியண்ட்களில் இந்த பைக் விற்பனை செய்யப்படவுள்ளது.

பிஎம்டபிள்யூ ஆர்18 பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.18 லட்சத்தில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு விற்பனையில் போட்டியாக ட்ரையம்ப் ராக்கெட் 3ஜிடி மற்றும் ராக்கெட் 3ஆர் உள்ளிட்ட க்ரூஸர் பைக்குகள் சந்தையில் உள்ளன.