விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ ஆர்18!

பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் மோட்டார்சைக்கிள் இந்திய இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இந்த பிரிமீயம் வகை மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ ஆர்18!

பிரிமீயம் வகை மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக்குகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ ஆர்18!

இந்த நிலையில், அந்த நிறுவனம் பிரிமீயம் வகை க்ரூஸர் மோட்டார்சைக்கிள் ரகத்தையும் பிடிக்கும் விதமாக ஆர்18 என்ற புதிய மாடலை அண்மையில் அறிமுகப்படுத்தியது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

MOST READ: ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ ஆர்18!

இந்த நிலையில், இந்த புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள டீலர்களில் ரகசியமாக முன்பதிவு ஏற்கப்படுவதாக தகவல் வெளியானது.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ ஆர்18!

இந்த சூழலில், இந்த பரபரப்பை உறுதிப்படுத்தும் விதமாக, பிஎம்டபிள்யூ மோட்டாராட் இந்திய இணையதளப்பக்கத்தில் இந்த புதிய ஆர்18 மோட்டார்சைக்கிள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இந்த மோட்டார்சைக்கிள் அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் விரைவில் வருவது உறுதியாகி இருக்கிறது.

MOST READ: "விலை உயர்வா? வாய்ப்பே இல்ல!" யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல பைக் நிறுவனம்!

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ ஆர்18!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவன்ததின் பழம்பெருமை வாய்ந்த ஆர்5 க்ரூஸர் மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் நவீன அம்சங்களுடன் கூடிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மாடலாக ஆர்18 உருவாக்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ ஆர்18!

இந்த புதிய மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மற்றும் ஃபர்ஸ்ட் எடிசன் என்ற வேரியண்ட்டுகளில் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இரண்டு வேரியண்ட்டுகளுமே இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதில், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாக ஃபர்ஸ்ட் எடிசன் விற்பனை செய்யப்படும்.

MOST READ: சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ ஆர்18!

ஃபர்ஸ்ட் எடிசன் வேரியண்ட்டில் ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கான விசேஷ பேட்ஜ், லெதர் பெல்ட்டுகள், விசேஷமான பின் ஸ்ட்ரிப் கோடுகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும். இது பழமையை போற்றும் அம்சங்களாக இருக்கும்.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ ஆர்18!

பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிளில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 1,802 சிசி ஏர்-ஆயில் கூல்டு எஞ்சின் பாக்ஸர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 158 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

MOST READ: பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது..? சூசகமாக பதிலளித்துள்ள டிவிஎஸ்

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ ஆர்18!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் சென்ட்ரல் ஷாக் ஸ்ட்ரட் சஸ்பென்ஷன் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபன்று, முன்சக்கரத்தில் இரண்டு 300 மிமீ டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் ஒற்றை 300 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ ஆர்18!

முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 16 அங்குல சக்கரமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில், முன்சக்கரத்தில் 120/70 அளவுடைய டயரும், பின்சக்கரத்தில் 180/60 அளவுடைய டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ ஆர்18!

எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட்டுகள், எல்இடி இன்டிகேட்டர்கள், மூன்று ரைடிங் மோடுகள், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ஸ்லிப் ரெகுலேஷன் தொழில்நுட்ப், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இன்னபிற முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ ஆர்18!

புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மிக விரைவில் இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
BMW Motorrad India has listed the recently unveiled R 18 Heritage Cruiser motorcycle in their official website. This indicates that the cruiser might be expected to go on sale in the Indian market very soon.
Story first published: Wednesday, April 22, 2020, 18:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X