புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 க்ளாசிக் மோட்டார்சைக்கிள் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் மோட்டார்சைக்கிளில் க்ளாசிக் என்ற புதிய மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிளின் க்ளாசிக் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

உயர்வகை மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் உலக அளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் ஆர்-18 என்ற மோட்டார்சைக்கிள் பவர் க்ரூஸர் என்ற உயரிய வகை க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு சரியான பட்ஜெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிளின் க்ளாசிக் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

கடந்த மாதம்தான் பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற அதிக சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்ட ஆர்-18 க்ளாசிக் என்ற புதிய மாடலை பிஎம்டபிள்யூ மோட்டோராட் வெளியிட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிளின் க்ளாசிக் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த புதிய வேரியண்ட்டில் அதிவேகத்தில் செல்லும்போது காற்று முகத்தில் அறைவதை தவிர்க்கும், பெரிய விண்ட்ஸ்க்ரீன் அமைப்பு, சேடில் பேக்குகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. ஹெட்லைட் தவிர்த்து, இரண்டு எல்இடி துணை ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலமாக, இரவு நேர பயணம் அதிக பாதுகாப்பாக அமையும்.

பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிளின் க்ளாசிக் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

சாதாரண ஆர்-18 மோட்டார்சைக்கிளின் முன்புறத்தில் 19 அங்குல சக்கரம் கொடுக்கப்படும் நிலையில், இந்த புதிய ஆர்-18 க்ளாசிக் மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் 16 அங்குல சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பின்னால் ஒருவர் அமர்வதற்கு ஏற்றவாரு பின் இருக்கையும் இடம்பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிளின் க்ளாசிக் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

ஆர்-18 ஸ்டான்டர்டு மாடலில் இருக்கும் அதே 1,802சிசி பாக்ஸர் எஞ்சின்தான் இந்த மாடலிலும் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 158 என்எம் டார்க் திறனை வாரி வழங்கும். 91 எச்பி பவரை வெளிப்படுத்தும். சாஃப்ட் டிரைவ் முறையில் எஞ்சின் சக்தி பின் சக்கரத்திற்கு செலுத்தப்படுகிறது.

பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிளின் க்ளாசிக் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய பிஎம்டபிள்யூ ஆர்-18 க்ளாசிக் மோட்டார்சைக்கிள் ஃபர்ஸ்ட் எடிசன் என்ற வேரியண்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் இந்த புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை. அதேநேரத்தில், அடுத்த ஆண்டு இந்த புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

Most Read Articles

English summary
BMW Motorrad has revealed R18 Classic motorcycle and it is expected to arrive in India by sometime next year.
Story first published: Saturday, October 24, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X