Just In
- 2 hrs ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 3 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 5 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 15 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- Sports
குட்டிப் பசங்களுடன் ஆடும் இந்திய அணி.. இம்ப்ரஸ் ஆயிட்டேன்.. புகழ்ந்து தள்ளிய பாக். வீரர்!
- News
விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஜன.26-ல் விவசாயிகளின் 1 லட்சம் டிராக்டர் பேரணி
- Movies
இது எப்ப? நடிகர் சோனு சூட் தையல் கடை.. இங்கு இலவசமாக துணி தைத்து கொடுக்கப்படும்!
- Finance
40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரம்மாண்டமான பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆர்18 க்ரூஸர் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

பிரிமீயம் பைக் தயாரிப்பில் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலும் பல பிரிமீயம் பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தனது ஆர்18 பைக் மாடலுடன் இன்று இந்தியாவின் க்ரூஸர் பைக் மார்க்கெட்டிலும் கால் பதித்துள்ளது.

பழமையான டிசைன் தாத்பரியங்களுடன் நவீன தொழில்நுட்பங்களின் கலவையாக இந்த பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 1936ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிஎம்டபிள்யூ ஆர்5 பைக்கின் டிசைன் அம்சங்கள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர், கண்ணீர் துளி வடிவிலான பெட்ரோல் டேங்க்,க்ரோம் பூச்சுடன் கூடிய எஞ்சின் கேஸ் மற்றும் சைலென்சர் குழாய்கள், அதிக வீல்பேஸ் நீளம் என ஒரு முழுமையான க்ரூஸர் பைக் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் பின்புற சஸ்பென்ஷன் வெளியில் தெரியாத வகையில் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருப்பது இதன் சிறப்பு. கருப்பு வண்ண பைக்கில் ஏராளமான க்ரோம் பாகங்கள் கொடுக்கப்பட்டு க்ரூஸர் பைக்கிற்கான தோற்றத்தை எளிதாக கொண்டு வந்துள்ளனர்.

இந்த பைக்கின் தோற்றத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில், 1,802சிசி பாக்ஸர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 91 பிஎச்பி பவரையும், 157 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட பைக்கை எளிதாக பின்னால் நகர்த்துவதற்கு ஏதுவாக, ரிவர்ஸ் கியர் வசதியும் உள்ளது. மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

இந்த பைக்கில், மூன்று விதமான ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மோட்டார் ஸ்லிப் உள்ளிட்ட வசதிகளும் உள்ளது. மழை பெய்யும்போது தரையில் அதிக பிடிப்புடன் செல்வதற்கு ரெயின் ரைடிங் மோடு உதவும். இந்த பைக் 345 கிலோ எடை கொண்டது. 4 பிஸ்டன் காலிபர்களுடன் முன்சக்கரத்தில் 300 மிமீ ட்வின் டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டம் உள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 பைக் மாடலானது ஸ்டான்டர்டு மற்றும் ஃபர்ஸ்ட் எடிசன் என இரண்டு வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. ஸ்டான்டர்டு வேரியண்ட்டிற்கு ரூ.18.90 லட்த்திலும், ஃபர்ஸ்ட் எடிசன் வேரியண்ட்டிற்கு ரூ.21.90 லட்சம் எக்ஸ்ஷோரூ்ம் விலையு் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஆர்18 பைக்கிற்கு ட்ரையம்ஃப் ராக்கெட் 3ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜிடி ஆகிய பைக் மாடல்கள் நேரடி போட்டியாக இருக்கும். இந்த பைக் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.