ரூ.19 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ பைக்கின் போலி பைக்.. வெறும் ரூ.1.5 லட்சத்தில் சீனாவில் அறிமுகம்

உலகளவில் பிரபலமான 1000சிசி பைக்கான பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கை அச்சு அசலாக காப்பயடிக்கப்பட்டு சீனாவில் புதிய பைக் ஒன்று உருவாகியுள்ளது. இந்த போலி பைக்கை பற்றிய விரிவான விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.19 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ பைக்கின் போலி பைக்.. வெறும் ரூ.1.5 லட்சத்தில் சீனாவில் அறிமுகம்

சீனா, போலி வாகனங்களுக்கு பிரபலமான சந்தை. போலி வாகனம் என்பது சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனையில் வாகனத்தின் தோற்றத்தை அப்படியே காப்பியடித்து உருவாக்கப்படும் வாகனங்கள் ஆகும்.

ரூ.19 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ பைக்கின் போலி பைக்.. வெறும் ரூ.1.5 லட்சத்தில் சீனாவில் அறிமுகம்

தற்போதும் அங்கு தொடரும் பழக்கத்தில் ஏகப்பட்ட போலி வாகனங்கள் வெளிவந்திருப்பதை இதற்கு முன்னர் பார்த்திருப்போம். இந்த வகையில் தான் தற்போது பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் சூப்பர்பைக்கின் அச்சு அசல் தோற்றத்தில் மோட்டோ எஸ்450ஆர்ஆர் என்ற பெயரில் புதிய பைக் மாடல் ஒன்று சீனாவில் வெளியாகியுள்ளது.

ரூ.19 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ பைக்கின் போலி பைக்.. வெறும் ரூ.1.5 லட்சத்தில் சீனாவில் அறிமுகம்

பைக்கின் முன்பக்கம் மட்டுமின்றி பக்கவாட்டு பேனல்கள், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என ஆரம்பித்து பின்பகுதி கூட இந்த சீன தயாரிப்பு பிஎம்டபிள்யூ பைக்கை தான் ஒத்து காணப்படுகிறது. இருப்பினும் இந்த போலி பைக்கின் பின்பகுதி நமக்கு கவாஸாகி நிஞ்சா 300 பைக்கையும் ஞாபகப்படுத்துகிறது.

ரூ.19 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ பைக்கின் போலி பைக்.. வெறும் ரூ.1.5 லட்சத்தில் சீனாவில் அறிமுகம்

எஸ்1000ஆர்ஆர் பைக்கின் நீலம்-சிவப்பு நிறத்தை காப்பியடித்துள்ளார் என்றால் கூட பரவாயில்லை எனலாம், ஆனால் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள முத்திரை கூட பிஎம்டபிள்யூ முத்திரையில் இருந்து பெறப்பட்டது போல் இருந்தால் என்னத்த சொல்ல..

ரூ.19 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ பைக்கின் போலி பைக்.. வெறும் ரூ.1.5 லட்சத்தில் சீனாவில் அறிமுகம்

இதனால் இந்த மோட்டோ எஸ்450ஆர்ஆர் பைக்கை சாலையில் பார்த்தால் பிஎம்டபிள்யூ பைக் என்று நினைப்பவர்கள் தான் அதிகமாக இருப்பர். இருப்பினும் என்ஜின் அமைப்பில் இது வேற பைக் என்பதை வெளிப்படுத்த அந்த சீன தயாரிப்பு நிறுவனம் முயற்சித்துள்ளது.

ரூ.19 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ பைக்கின் போலி பைக்.. வெறும் ரூ.1.5 லட்சத்தில் சீனாவில் அறிமுகம்

ஏனெனில் இந்த போலி எஸ்1000ஆர்ஆர் பைக்கில் 450சிசி, ஃப்யூல்-இன்ஜெக்டட், இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6500 ஆர்பிஎம்-ல் 24 பிஎச்பி பவரையும், 7000 ஆர்பிஎம்-ல் 22 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ரூ.19 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ பைக்கின் போலி பைக்.. வெறும் ரூ.1.5 லட்சத்தில் சீனாவில் அறிமுகம்

வியட்நாம் நாட்டு பண மதிப்பில் மோட்டோ எஸ்450ஆர்ஆர் பைக்கின் விலை 50 மில்லியன் வியட்நாமிய டோங்-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய ரூபாயில் வெறும் ரூ.1.58 லட்சம் மட்டுமே ஆகும். ஏனெனில் பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கின் விலை ரூ.18.5 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
China’s Moto S450RR Is A Blatant Copycat Of BMW S1000RR
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X