பஜாஜ் அவென்ஜர் 160 பிஎஸ்6 மற்றும் 220 பிஎஸ்6 பைக்குகளுக்கு முன்பதிவுகள் ஆரம்பம்...!

முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் தனது தயாரிப்பு மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யும் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த வகையில் ஸ்ட்ரீட் 160, ஸ்ட்ரீட் 220 மற்றும் க்ரூஸ் 220 என்ற அவென்ஜர் வரிசை பைக்குகள் பிஎஸ்6 தரத்தில் விரைவில் இந்நிறுவனத்தில் இருந்து சந்தையில் களமிறங்கவுள்ளன.

பஜாஜ் அவென்ஜர் 160 பிஎஸ்6 மற்றும் 220 பிஎஸ்6 பைக்குகளுக்கு முன்பதிவுகள் ஆரம்பம்...!

ஆனால் இதுவரை பஜாஜ் நிறுவனம் இந்த புதிய பிஎஸ்6 பைக் மாடல்களின் அறிமுகத்தை பற்றிய எந்த தகவலையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் நமது தளத்திற்கு இந்த புதிய பிஎஸ்6 அவென்ஜர் பைக்குகளின் விலை பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் அவென்ஜர் 160 பிஎஸ்6 மற்றும் 220 பிஎஸ்6 பைக்குகளுக்கு முன்பதிவுகள் ஆரம்பம்...!

அவென்ஜர் வரிசை பைக் மாடல்களில் ஆரம்ப நிலையில் சந்தைப்படுத்தப்பட்டிருப்பது ஸ்ட்ரீட் 160. பிஎஸ்4 தரத்தில் தற்சமயம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுவரும் இந்த பைக்கின் பிஎஸ்6 மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.89,536 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 அப்டேட்டால் இந்த பைக்கின் விலை ரூ.7,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் 160 பிஎஸ்6 மற்றும் 220 பிஎஸ்6 பைக்குகளுக்கு முன்பதிவுகள் ஆரம்பம்...!

ஸ்ட்ரீட் 220 மற்றும் க்ரூஸ் 220 என்ற மற்ற இரு அவென்ஜர் பைக்குகளும் சந்தையில் ஒரே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் பிஎஸ்6 வெர்சன்கள் எக்ஸ்ஷோரூமில் ரூ.1,15,456-ஐ விலையாக பெற்றுள்ளன. இது இவை இரண்டின் பிஎஸ்4 வெர்சன் பைக்குகளின் விலையை விட ரூ.11,500 அதிகமாகும்.

பஜாஜ் அவென்ஜர் 160 பிஎஸ்6 மற்றும் 220 பிஎஸ்6 பைக்குகளுக்கு முன்பதிவுகள் ஆரம்பம்...!

அவென்ஜர் பிஎஸ்6 பைக்குகளின் விலை பற்றிய தகவல் வரை வெளியாகிவிட்டதால், இந்த பைக்குகளுக்கான முன்பதிவுகள் பெரும்பாலான பஜாஜ் டீலர்ஷிப்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மூன்று அவென்ஜர் பைக்குகளிலும் கிட்டத்தட்ட அதே டிசைன் மற்றும் தொழிற்நுட்ப பாகங்கள் தான் வழங்கப்பட்டுள்ளன.

பஜாஜ் அவென்ஜர் 160 பிஎஸ்6 மற்றும் 220 பிஎஸ்6 பைக்குகளுக்கு முன்பதிவுகள் ஆரம்பம்...!

ஆனால் என்ஜினை பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்துவதற்காக கார்புரேட்டட் அமைப்பிற்கு பதிலாக ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் பைக்கின் மைலேஜ் சுமார் 10 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் அதே என்ஜின் அமைப்பு தான் பிஎஸ்6 தரத்தில் இந்த அவென்ஜர் பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் 160 பிஎஸ்6 மற்றும் 220 பிஎஸ்6 பைக்குகளுக்கு முன்பதிவுகள் ஆரம்பம்...!

அதேபோல் அவை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலின் அளவுகளிலும் எந்த மாற்றமும் இல்லை. ஸ்ட்ரீட் 160 அவென்ஜர் மாடலின் தற்போதைய 160சிசி பிஎஸ்4 என்ஜின் அதிகப்பட்சமாக 14.8 பிஎச்பி பவரையும் 13.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

பஜாஜ் அவென்ஜர் 160 பிஎஸ்6 மற்றும் 220 பிஎஸ்6 பைக்குகளுக்கு முன்பதிவுகள் ஆரம்பம்...!

மற்ற இரு 220சிசி பைக்குகளில் உள்ள என்ஜின் பிஎஸ்4 தரத்தில் 19 பிஎச்பி மற்றும் 17.5 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்கி வருகிறது. இவற்றின் என்ஜின்களுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் 160 பிஎஸ்6 மற்றும் 220 பிஎஸ்6 பைக்குகளுக்கு முன்பதிவுகள் ஆரம்பம்...!

ஏற்கனவே கூறியதுபோல், என்ஜின் அப்டேட் தவிர்த்து இந்த மூன்று அவென்ஜர் பைக் மாடல்களின் தோற்றம் மற்றும் தொழிற்நுட்பங்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

பஜாஜ் அவென்ஜர் 160 பிஎஸ்6 மற்றும் 220 பிஎஸ்6 பைக்குகளுக்கு முன்பதிவுகள் ஆரம்பம்...!

இந்த புதிய அப்டேட்டால் பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 160 பைக் சந்தையில் தனக்கு போட்டியாகவுள்ள சுசுகி இண்ட்ரூடர் 150 மாடலுடன் வலுவாக போட்டியிட முடியும். அவென்ஜர் 220சிசி பைக்குகளுக்கு இந்திய சந்தையில் எந்த பைக் மாடலும் நேரடி போட்டி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
BS6 Bajaj Avenger 160 And 220 Prices Revealed; Bookings Now Open
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X