வெறும் ரூ.2 ஆயிரம் விலை உயர்வுடன் அறிமுகமாகவுள்ள புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6...

டோமினார் மாடலின் புதிய தலைமுறை பைக்கை மிக விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த பஜாஜ் நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,91,751-ஆக நிர்ணயிக்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் ரூ.2 ஆயிரம் விலை உயர்வுடன் அறிமுகமாகவுள்ள புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6...

தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய விலை தற்போதைய டோமினார் மாடலின் விலையை விட வெறும் ரூ.1,749 மட்டுமே அதிகம். இதுவரை பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான மோட்டார்சைக்கிள்கள் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரையில் விலை அதிகரிப்பை பெற்று நிலையில், புதிய பஜாஜ் டோமினாரின் விலை 2 ஆயிரத்திற்கும் குறைவாக அதிகரிக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியே ஆகும்.

வெறும் ரூ.2 ஆயிரம் விலை உயர்வுடன் அறிமுகமாகவுள்ள புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6...

இவ்வாறு குறைவாக டோமினார் பிஎஸ்6 பைக்கின் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. என்னவென்றால் பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டில் தான் டோமினார் மாடலின் விலை இரு முறை அதிகரிக்கப்பட்டு இருந்தது. முதலில் 6 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு பிறகு மீண்டும் ரூ.10,000 உயர்த்தப்பட்டிருந்தது.

வெறும் ரூ.2 ஆயிரம் விலை உயர்வுடன் அறிமுகமாகவுள்ள புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6...

இதனால் டோமினார் பைக்கில் பிஎஸ்6 என்ஜினை பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டிலேயே வழங்கியிருந்தது. விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய தலைமுறை டோமினார் பைக்கில் என்ஜினானது, இசியூ மற்றும் கேட்டலிடிக் கன்வெர்டர் என இரு விதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.2 ஆயிரம் விலை உயர்வுடன் அறிமுகமாகவுள்ள புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6...

மற்றப்படி, இந்த புதிய என்ஜின் பைக்கிற்கு வழங்கவுள்ள ஆற்றல் அளவுகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. டோமினாரின் 373.3சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு, டிஒஎச்சி பிஎஸ்6 என்ஜின் 8650 ஆர்பிஎம்-ல் 40 பிஎச்பி பவரையும், 7000 ஆர்பிஎம்-ல் 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

வெறும் ரூ.2 ஆயிரம் விலை உயர்வுடன் அறிமுகமாகவுள்ள புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6...

ட்ரான்ஸ்மிஷனிற்கு இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அறிமுகமான இதன் பிஎஸ்6 வெர்சனில் என்ஜின் மட்டும் தான் மேம்படுத்தப்பட்டிருந்தது. இதுதவிர பைக்கின் டிசைன், பெயிண்ட் அமைப்பு மற்றும் தொழிற்நுட்பங்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

வெறும் ரூ.2 ஆயிரம் விலை உயர்வுடன் அறிமுகமாகவுள்ள புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6...

இந்திய சந்தையில் பஜாஜ் டோமினார் பிஎஸ்6 பைக், கருப்பு மற்றும் பச்சை என்ற நிற கலவையில் விற்பனை செய்யப்படவுள்ளது. சிவப்பு மற்றும் வெள்ளை என்ற மற்றொரு நிறத்தேர்வில் டீலர்ஷிப்களில் கிடைக்கும் டோமினார் வேரியண்ட் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படவில்லை.

வெறும் ரூ.2 ஆயிரம் விலை உயர்வுடன் அறிமுகமாகவுள்ள புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6...

என்ஜின் அப்டேட் தவிர்த்து இந்த புதிய டோமினார் பைக் எந்த மாற்றத்தையும் பெறாததால், இதன் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படுவது கடினம் தான். கடந்த ஆண்டில் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கும் அதிகமாக விலை உயர்வை பஜாஜ் டோமினார் சந்தித்துள்ளதால், இதன் கடந்த சில மாதங்களின் விற்பனை பெரிய அளவில் சரிவை நோக்கி சென்றுள்ளது.

வெறும் ரூ.2 ஆயிரம் விலை உயர்வுடன் அறிமுகமாகவுள்ள புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6...

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெறும் 180 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்த டோமினார் பைக் பஜாஜ் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களிலேயே மிகவும் குறைவான விற்பனை எண்ணிக்கையை எந்தவொரு மாதத்திலும் பெற்ற பைக்காக விளங்குகிறது.

வெறும் ரூ.2 ஆயிரம் விலை உயர்வுடன் அறிமுகமாகவுள்ள புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6...

இதனால் பஜாஜ் நிறுவனம் குறைந்தது 700 யூனிட்கள் டோமினார் பைக்கையாவது ஒரு மாதத்தில் விற்பனை செய்துவிட வேண்டும் என திட்டமிட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டு சந்தைகளில் பல நிற தேர்வுகளில் சந்தைப்படுத்தப்பட்டிருக்கும் டோமினார் இந்தியாவில் மிக குறைவான எண்ணிகையில் நிற தேர்வுகளை கொண்டு 700 யூனிட்கள் விற்பனையாகுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவே.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
BS6 Bajaj Dominar launch price is Rs 2k more than BS4
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X