பிஎஸ்6 பஜாஜ் அவென்ஜெர் ஸ்ட்ரீட் 220 பைக்கின் என்ஜின் குறித்த தகவல்...

முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ்-ல் இருந்து விரைவில் அவென்ஜெர் ஸ்ட்ரீட் 220 பைக் மாடல் சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் இந்த பைக்கின் என்ஜினின் ஆற்றல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎஸ்6 பஜாஜ் அவென்ஜெர் ஸ்ட்ரீட் 220 பைக்கின் என்ஜின் குறித்த தகவல்...

பஜாஜ் நிறுவனம் கடந்த மாதத்தில் இந்த 220சிசி பைக்குடன் அவென்ஜெர் மாடலின் 160சிசி பைக்கிற்கும் முன்பதிவை துவங்கியது. மேலும் அப்போதே இந்த இரு பைக்குகளுக்கான எக்ஸ்ஷோரூம் விலைகளும் வெளியிடப்பட்டன.

பிஎஸ்6 பஜாஜ் அவென்ஜெர் ஸ்ட்ரீட் 220 பைக்கின் என்ஜின் குறித்த தகவல்...

இந்த வகையில் பிஎஸ்6 தரத்தில் சந்தைக்கு வரும் பஜாஜ் அவென்ஜெர் ஸ்ட்ரீட் 220 பைக்கின் விலை ரூ.1.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஆர்டிஒ சான்றிதழில் இந்த பைக் 220சிசி, ஏர்-கூல்டு என்ஜினை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஎஸ்6 பஜாஜ் அவென்ஜெர் ஸ்ட்ரீட் 220 பைக்கின் என்ஜின் குறித்த தகவல்...

வழக்கமான 17.5 என்எம் டார்க் திறனை 7,000 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தவுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,400 ஆர்பிஎம்-ல் 18.7 பிஎச்பி பவரை பைக்கிற்கும் வழங்கும். அவென்ஜெர் ஸ்ட்ரீட் 220 பைக்கின் நீளம் 2210 மிமீ, அகலம் 806 மிமீ, உயரம் 1142 மிமீ ஆக உள்ளது.

பிஎஸ்6 பஜாஜ் அவென்ஜெர் ஸ்ட்ரீட் 220 பைக்கின் என்ஜின் குறித்த தகவல்...

பைக்கின் மொத்த எடை 313 கிலோ ஆகும். 1490 மிமீ நீளத்தில் வீல்பேஸ் அளவை கொண்டுள்ள இந்த பிஎஸ்6 பைக், பிஎஸ்4 தரத்தில் கொண்டிருந்த டெலிஸ்கோப் முன்புற ஃபோர்க் மற்றும் ட்வின் ரியர் ஷாக் அப்சார்ப்ஸை அப்படியே பெற்றுள்ளது.

பிஎஸ்6 பஜாஜ் அவென்ஜெர் ஸ்ட்ரீட் 220 பைக்கின் என்ஜின் குறித்த தகவல்...

ப்ரேக்கிங் சிஸ்டமும் முந்தைய மாடலில் இருந்து தொடர்ந்துள்ளது. இந்த வகையில் இந்த 220சிசி பைக் முன் சக்கரத்தில் டிஸ்க்கையும், பின் சக்கரத்தில் ட்ரம் ப்ரேக்குகளையும் கொண்டுள்ளது. இவற்றுடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் நிலையாக வழங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 பஜாஜ் அவென்ஜெர் ஸ்ட்ரீட் 220 பைக்கின் என்ஜின் குறித்த தகவல்...

பிஎஸ்6 அப்டேட்டாக புதிய விண்ட்ஸ்க்ரீனை பெற்றுள்ள அவென்ஜெர் ஸ்ட்ரீட் 220 பைக்கில் அப்டேட்டான கண்ணாடிகள் மற்றும் புதிய நிறத்தேர்வுகளையும் பஜாஜ் நிறுவனம் வழங்கியுள்ளது.

பிஎஸ்6 பஜாஜ் அவென்ஜெர் ஸ்ட்ரீட் 220 பைக்கின் என்ஜின் குறித்த தகவல்...

மற்ற டிசைன் பாகங்களாக எல்இடி டிஆர்எல்கள் விளக்குகளுடன் ஹெட்லைட்ஸ், பாடி கிராஃபிக்ஸ், பெரிய இன்ஷைனியா, கருப்பு நிறத்தில் என்ஜின் & அலாய் சக்கரங்கள் மற்றும் ரியர் க்ராப் ரெயில் உள்ளிட்டவற்றை தற்போதைய மாடலில் இருந்து அப்டேட்டாக கொடுக்கப்பட்டுள்ளன.

பிஎஸ்6 பஜாஜ் அவென்ஜெர் ஸ்ட்ரீட் 220 பைக்கின் என்ஜின் குறித்த தகவல்...

இதனுடன் சந்தைப்படுத்தப்படவுள்ள அவென்ஜெர் ஸ்ட்ரீட் 160 பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.89,536 ஆக உள்ளது. இது இதன் முந்தைய பைக் மாடலின் விலையை விட சுமார் ரூ.7,501 அதிகமாகும். அவென்ஜெர் ஸ்ட்ரீட் 220 பிஎஸ்6 பைக்குடன் அவென்ஜெர் க்ரூஸர் 220 பைக்கும் இன்னும் சில வாரங்களில் இந்திய அறிமுகத்தை காணவுள்ளது. இவை இரண்டின் விலை அவற்றின் பிஎஸ்4 வெர்சன் பைக்குகளை விட ரூ.11,500 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
BS6 Bajaj avenger street 220 engine details revealed launch in coming weeks
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X