டிஸ்க் ப்ரேக் உடன் பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ்... டெலிவிரி பணிகள் ஆரம்பம்...

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான பிளாட்டினா 100 பைக்கின் டாப் டிஸ்க் வேரியண்ட்டின் டெலிவிரி விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டிஸ்க் ப்ரேக் உடன் பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ்... டெலிவிரி பணிகள் ஆரம்பம்...

பஜாஜ் நிறுவனத்தின் சிறந்த விற்பனை பைக் மாடக்களுள் ஒன்றாக விளங்கும் பிளாட்டினா 100 இஎஸ் (எலக்ட்ரிக் ஸ்டார்ட்)-ன் புதிய டிஸ்க் வேரியண்ட், ரூ.60,698 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் சந்தையில் அறிமுகம் செய்ய்ப்பட்டிருந்தது.

டிஸ்க் ப்ரேக் உடன் பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ்... டெலிவிரி பணிகள் ஆரம்பம்...

அதேநேரம் இதன் ட்ரம் ப்ரேக் வேரியண்ட்டின் விலை ரூ.58,477 ஆக உள்ளது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் அளவிலான விலை வேறுபாட்டிற்கு காரணம், டிஸ்க் வேரியண்ட்டில் முன்புறத்தில் 240மிமீ டிஸ்க்கும், பின்புறத்தில் 110மிமீ-ல் ட்ரம் ப்ரேக்கும் ஆண்டி-ஸ்கிட் ப்ரேக்கிங் சிஸ்டத்துடன் வழங்கப்படுகின்றன.

டிஸ்க் ப்ரேக் உடன் பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ்... டெலிவிரி பணிகள் ஆரம்பம்...

இவை இரண்டு மட்டுமின்றி கிக்-ஸ்டார்ட் வேரியண்ட்டிலும் பிளாட்டினா 100 விற்பனை செய்யப்படுகிறது. அதன் விலை ரூ.50,464 ஆகும். பிளாட்டினா வரிசையில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் பைக்கை 2015ல் பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

டிஸ்க் ப்ரேக் உடன் பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ்... டெலிவிரி பணிகள் ஆரம்பம்...

அதன்பின் கடந்த மே மாதத்தில் பிஎஸ்6 வெர்சனுடன் வெளியான பிளாட்டினா, இந்தியாவில் அதிக எரிபொருள் திறனில் செயல்படும் பைக்குகளுள் ஒன்றாகும். இதற்கு காரணம் இதன் மைலேஜின் அளவு 70-80 kmpl ஆக உள்ளது.

டிஸ்க் ப்ரேக் உடன் பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ்... டெலிவிரி பணிகள் ஆரம்பம்...

பிளாட்டினா 100இஎஸ்-ஐ பற்றி கூற வேண்டுமென்றால், நேர்த்தியான ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்களுடன் பைக் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிக்கரமான தோற்றத்தில் இருக்கும். சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த பைக்கில் முன்புறத்தில் 135மிமீ-ல் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 110மிமீ-ல் ஸ்ப்ரிங் ஆன் ஸ்ப்ரிங் (SoS)-உம் உள்ளன.

டிஸ்க் ப்ரேக் உடன் பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ்... டெலிவிரி பணிகள் ஆரம்பம்...

இந்த இரு சஸ்பென்ஷனிலும் சஸ்பென்ஷன் ட்ராவல் நன்கு நீளமானதாகவே வழங்கப்பட்டுள்ளது. டிஸ்க் ப்ரேக்கை தவிர்த்து தற்போது டெலிவிரியை துவங்கியுள்ள பிளாட்டினா 100 பைக்கில் வேறெந்த புதிய மாற்றமும் கிடையாது. மற்ற வேரியண்ட்களில் பொருத்தப்படும் என்ஜின் தான் பொருத்தபட்டுள்ளது.

டிஸ்க் ப்ரேக் உடன் பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ்... டெலிவிரி பணிகள் ஆரம்பம்...

முன்னதாக பஜாஜ் மேற்கொண்டிருந்த சவுகரியத்தில் சிறப்பான பைக் எது என்ற சவாலில் 90 சதவீத பங்கேற்பாளர்கள் பிளாட்டினாவை தேர்வு செய்திருந்தனர். சுமார் 55 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த சவாலில் மொத்தம் 45,800 பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: Ganesh Bajaj

Most Read Articles

English summary
New Bajaj Platina 100 ES Disc Arrives At Showroom – Deliveries Start
Story first published: Tuesday, August 18, 2020, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X