மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட எச்எஃப் டீலக்ஸ் பைக்கின் மிகவும் மலிவான விலை கொண்ட வேரியண்ட்டான கிக்-ஸ்டார்ட்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. எச்எஃப் டீலக்ஸின் இந்த புதிய வேரியண்ட்டில் பிஎஸ்6 அப்டேட்டாக கொண்டுவரப்பட்டுள்ள அம்சங்களை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

இந்த பிஎஸ்6 வேரியண்ட், மிகவும் முக்கியமான அப்டேட்டாக எலக்ட்ரிக்-ஸ்டார்ட் வசதியை ஏற்றுள்ளது. ஸ்போக் சக்கரம் மற்றும் அலாய் சக்கரம் என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் எச்எஃப் டீலக்ஸ் பைக் எக்ஸ்ஷோரூமில் ரூ.46,800- ரூ.47,800 அளவில் விலையை கொண்டுள்ளது.

மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

முன்னதாக கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகமான எச்எஃப் டீலக்ஸ் செல்ஃப்-ஸ்டார்ட் மாடலின் விலை தற்போது அறிமுகமாகியுள்ள கிக்-ஸ்டார்ட் மாடலின் ஆரம்ப விலையை காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் அதிகமாக ரூ.56,675 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

இந்த இரு விதமான எச்எஃப் மாடலிலும் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஒரே விதமான 100சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் பிஎஸ்6 அப்கிரேட்டாக ஃப்யூல்-இன்ஜெக்டட் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிஸ்டத்தினால் 9 சதவீத எரிபொருள் திறனை கூடுதலாக வழங்கும் இந்த 100சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 8.36 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

முன்னதாக பிஎஸ்4 தரத்தில் இந்த என்ஜின் 7.94 பிஎச்பி பவரை தான் வெளிப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் டார்க் திறனில் எந்த மாற்றமும் இல்லாமல் 8.05 என்எம்-ஆக தான் உள்ளது. இவை மட்டுமின்றி இந்த புதிய என்ஜின் அமைப்பு 6 சதவீத வேகமான ஆக்ஸலேரேஷன் உடன் சிறப்பான செயல்திறனை வழங்கும்.

மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

இவற்றுடன் புதிய எச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் ஹீரோ நிறுவனத்தின் ஐ3எஸ் (ஐடியல் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம்) சிஸ்டத்தையும் பெற்றுள்ளன. எச்எஃப் டீலக்ஸ், ஹீரோ நிறுவனத்தின் சிறப்பான விற்பனை மாடலாக ஸ்பிளெண்டர்+ பைக்கிற்கு அடுத்த நிலையில் உள்ளது.

மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

சமீபத்தில் நிறைவடைந்த 2019-20 நிதியாண்ட்டில் இந்த இரு ஹீரோ பைக்குகளின் விற்பனையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. 20,63,148 யூனிட்கள் விற்பனையுடன் ஸ்பிளெண்டர்+ முதலிடத்தையும், அதனை விட சில ஆயிரங்களை மட்டுமே குறைவாக பெற்று எச்எஃப் டீலக்ஸ் 20,50,974 யூனிட்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...

இந்திய சந்தையில் மிகவும் மலிவான விலை கொண்ட பைக் மாடலாக ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 பைக் தற்போது அறிமுகமாகினாலும், இதனை விட குறைவான விலையில் பஜாஜ் நிறுவனத்தின் சிடி100 மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பஜாஜ் பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.41,293-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
BS6 Hero HF Deluxe kick-start launched at Rs 46,800
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X