விரைவில் விற்பனையை துவங்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி &எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் பிஎஸ்6 வெர்சன்கள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தை புதிய பிஎஸ்6 எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் பெயர்களை சேர்த்து அப்டேட் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

விரைவில் விற்பனையை துவங்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி &எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் பிஎஸ்6 வெர்சன்கள்

இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஹீரோ இணையத்தள பக்கத்தை இந்த இரு பிஎஸ்6 பைக்குகளுடன் எக்ஸ்ட்ரீம் 200ஆர்-ஐயும் சேர்த்து ஏப்ரல் மாதத்திலேயே அப்டேட் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவின் எதிரொலியாக தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனையை துவங்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி &எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் பிஎஸ்6 வெர்சன்கள்

இருப்பினும் எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் பிஎஸ்6 வெர்சனை பற்றிய தகவல் எதுவும் தற்போதைக்கு இல்லை. தற்போது ஹீரோ இணையத்தள பக்கத்திற்கு வந்துள்ள இரு பைக்குகளிலும் என்ஜின் அமைப்பு மட்டும் தான் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனையை துவங்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி &எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் பிஎஸ்6 வெர்சன்கள்

மற்றபடி பைக்கின் மற்ற டிசைன் பாகங்கள் அனைத்தும் அப்படியே தொடர்ந்துள்ளன. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200எஸ் சாலை பயன்பாட்டிற்கு ஏற்ற பைக் மாடலாகும். அதுவே, எக்ஸ்பல்ஸ் 200டி முழுக்க முழுக்க தொலைத்தூர பயணத்திற்கு ஏற்ற பைக்காக வடிவமைக்கப்பட்டு வருகிறது.

விரைவில் விற்பனையை துவங்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி &எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் பிஎஸ்6 வெர்சன்கள்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பெரும்பான்மையான பாகங்களை இதன் அட்வென்ஜெர் வெர்சனான எக்ஸ்பல்ஸ் 200-ல் இருந்து பெற்றுள்ளது. அதேபோல் எக்ஸ்ட்ரீம் 200எஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200டி பைக்குகளும் ப்ளாட்ஃபாரம் உள்பட பெரும்பான்மையான பாகங்களை பகிர்ந்து கொண்டுள்ளன.

விரைவில் விற்பனையை துவங்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி &எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் பிஎஸ்6 வெர்சன்கள்

ஹீரோ நிறுவனம் அதன் 200சிசி பைக்குகள் அனைத்திலும் ப்ளூடூத் இணைப்பு மற்றும் டர்ன் நாவிகேஷன் வசதிகளுடன் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை வழங்கி வருகிறது. இந்த வகையில் இந்த க்ளஸ்ட்டரை பெற்றுள்ள இந்த இரு பிஎஸ்6 பைக்குகளிலும் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விரைவில் விற்பனையை துவங்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி &எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் பிஎஸ்6 வெர்சன்கள்

ஹீரோ எக்ஸ் குடும்படுத்தில் எக்ஸ்பல்ஸ் 200, 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர், 200ஆர், 200எஸ் உள்ளிட்ட பைக் மாடல்கள் அடங்குகின்றன. ஆனால் இவற்றில் தற்சமயம் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்குகள் மட்டும் தான் பிஎஸ்6 தரத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

விரைவில் விற்பனையை துவங்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி &எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் பிஎஸ்6 வெர்சன்கள்

தற்போது பிஎஸ்6 எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் பிஎஸ்6 எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் பெயர்களும் நிறுவனத்தின் இணையத்தள பக்கத்திற்கு வந்துள்ளதால் இவற்றின் விற்பனையையும் விரைவில் ஹீரோ நிறுவனம் ஆரம்பித்துவிடும். எக்ஸ் 200 ரேஞ்ச் பைக்குகளில் 199.6சிசி ஆயில்-கூல்டு, ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜினை ஹீரோ நிறுவனம் வழங்கி வருகிறது.

விரைவில் விற்பனையை துவங்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி &எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் பிஎஸ்6 வெர்சன்கள்

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 17.8 பிஎச்பி பவரையும், 6,400 ஆர்பிஎம்-ல் 16.45 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதேநேரம் பிஎஸ்6 அப்டேட்டால் 0.3 பிஎச்பி மற்றும் 0.7 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் இழந்துள்ளது.

விரைவில் விற்பனையை துவங்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி &எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் பிஎஸ்6 வெர்சன்கள்

பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்டு இருப்பினும் கேட்டலிக் கன்வெர்டரையும் இந்த என்ஜின் தொடர்ந்துள்ளது. விரைவில் விற்பனையை துவங்கவுள்ள ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்குகளின் விலை ரூ.5,000- ரூ.10,000 வரையில் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
Hero Xtreme 200S Xpulse 200T BS6 Teaser
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X