புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 ஷோரூம்களுக்கு வர தொடங்கியது...

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 பைக் ஷோரூம்களுக்கு வர தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 ஷோரூம்களுக்கு வர தொடங்கியது...

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் (Hero Xtreme 200S) பைக்கின் பிஎஸ்-6 வெர்ஷன் இந்திய சந்தையில் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிஎஸ்-4 வெர்ஷன் உடன் ஒப்பிடுகையில் இன்ஜின் பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டிருப்பதுடன், கூடுதல் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பைக் ஷோரூம்களுக்கு வர தொடங்கியுள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 ஷோரூம்களுக்கு வர தொடங்கியது...

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள ரிதி ஹீரோ என்ற ஷோரூமில் இந்த பைக் தரிசனம் வழங்கியுள்ளது. இது தொடர்பான காணொளி, பெங்கால் ரைடர் என்ற யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்6 வெர்ஷன் பற்றிய விரிவான விபரங்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 ஷோரூம்களுக்கு வர தொடங்கியது...

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் பிஎஸ்6 வெர்ஷன் ஸ்போர்ட்ஸ் ரெட், பாந்தர் பிளாக் மற்றும் புதிய பேர்ல் ஒயிட் ஆகிய 3 வண்ண தேர்வுகளில் கிடைக்கும். இந்த பைக்கின் விலையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 1.16 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்-4 வெர்ஷனின் விலையுடன் ஒப்பிடும்போது இதன் விலை சுமார் 15,100 ரூபாய் அதிகம்.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 ஷோரூம்களுக்கு வர தொடங்கியது...

பிஎஸ்-4 வெர்ஷன் 1,00,900 ரூபாய் என்ற விலையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இந்த கூடுதல் விலைக்கு பைக்கை பல்வேறு வழிகளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் ட்யூப்லெஸ் டயர்களுடன் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் நீளம் 2,062 மிமீ, அகலம் 778 மிமீ, உயரம் 1,106 மிமீ, வீல் பேஸ் 1,338 மிமீ. க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 165 மிமீ.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 ஷோரூம்களுக்கு வர தொடங்கியது...

அத்துடன் இந்த பைக்கில் 12.8 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் எடை 154.5 கிலோ. ட்வின் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப் ஆகியவற்றை புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 வெர்ஷன் பெற்றுள்ளது. அத்துடன் ஏற்கனவே கூறியபடி, இந்த பைக்கின் இன்ஜின் பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 ஷோரூம்களுக்கு வர தொடங்கியது...

இந்த பைக்கில் 199.6 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், ப்யூயல் இன்ஜெக்டட், ஆயில் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8,500 ஆர்பிஎம்மில் 17.8 ஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 16.4 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டிருப்பதுடன், எக்ஸ்சென்ஸ் தொழில்நுட்பத்தையும் இந்த இன்ஜின் பெற்றுள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்6 ஷோரூம்களுக்கு வர தொடங்கியது...

ஆனால் பிஎஸ்-4 விதிகளுக்கு இணக்கமான பழைய இன்ஜின் உடன் ஒப்பிடுகையில், 0.3 ஹெச்பி பவரும், 0.7 என்எம் டார்க் திறனும் குறைந்துள்ளது. எனவே பிஎஸ்-4 வெர்ஷன் உடன் ஒப்பிடுகையில், பிஎஸ்-6 வெர்ஷனின் செயல்திறன் சற்றே குறைவாக இருக்கலாம். சஸ்பென்ஸனை பொறுத்தவரை முன்பகுதியில் டெலஸ்கோபிக் போர்க்கும், பின் பகுதியில் மோனோ ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங்கை பொறுத்தவரை முன் பகுதியில் 276 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 200 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியையும், புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக் பெற்றுள்ளது. இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. டெலிவரி மிக விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
BS6 Hero Xtreme 200S Arrives In Showroom - Details. Read in Tamil
Story first published: Tuesday, November 17, 2020, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X