ஷோரூம்களில் ஹோண்டா க்ரேஸியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்... டெலிவிரி எப்போது துவங்குகிறது..?

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட கிரேஸியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடலை டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணியினை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் துவங்கியுள்ளது. இதுகுறித்து பைக்தேக்கோ செய்தி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஷோரூம்களில் ஹோண்டா க்ரேஸியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்... டெலிவிரி எப்போது துவங்குகிறது..?

கிரேஸியா 125 ஸ்கூட்டரை ஸ்டாண்டர்ட் மற்றும் டீலக்ஸ் என்ற இரு வேரியண்ட்களில் ஹோண்டா நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது. இவற்றில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் விலை ரூ.73,912 ஆகவும், டீலக்ஸின் விலை ரூ.80,978 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஷோரூம்களில் ஹோண்டா க்ரேஸியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்... டெலிவிரி எப்போது துவங்குகிறது..?

தற்போது டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பாகவே இவற்றிற்கான முன்பதிவுகள் துவங்கிவிட்டன. அதன்படி இதன் முன்பதிவிற்கான டோக்கன் தொகைகள் ரூ.500, ரூ.1,000 என்ற அளவுகளில் உள்ளன.

ஷோரூம்களில் ஹோண்டா க்ரேஸியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்... டெலிவிரி எப்போது துவங்குகிறது..?

2020ஆம் ஆண்டிற்காக கிரேஸியா மாடல், ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்டேட் பணியால் ஸ்கூட்டரின் விலை பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் ரூ.13,600 அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஷோரூம்களில் ஹோண்டா க்ரேஸியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்... டெலிவிரி எப்போது துவங்குகிறது..?

முன்பை விட கூர்மையான உடற் அமைப்பால் ஸ்போர்ட்டியான தோற்றத்தை பெற்றுள்ள பிஎஸ்6 கிரேஸியா 125 ஸ்கூட்டரில் எல்இடி டிஆர்எல்களுடன் ஹேண்டில்பார் கௌல், முழு-எல்இடி ஹெட்லைட் மற்றும் ‘ஜெட்' வடிவில் ரீடிசைனில் டெயில்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஷோரூம்களில் ஹோண்டா க்ரேஸியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்... டெலிவிரி எப்போது துவங்குகிறது..?

இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆனது முழு டிஜிட்டலாக வழக்கமான தகவல்களை தாண்டி டச்சோமீட்டர், 3-நிலை ஈக்கோ இண்டிகேட்டர் மற்றும் மைலேஜ் இண்டிகேட்டர் உள்ளிட்டவற்றையும் வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் வழக்கப்படும் என்ஜின் அமைப்பு தான் பிஎஸ்6 கிரேஸியா 125 ஸ்கூட்ட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது.

ஷோரூம்களில் ஹோண்டா க்ரேஸியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்... டெலிவிரி எப்போது துவங்குகிறது..?

இருப்பினும் இந்த என்ஜின் இந்த மாடலில் சற்று குறைவாக 6000 ஆர்பிஎம்-ல் 8.25 பிஎச்பி பவரையும் 5,000 ஆர்பிஎம்-ல் 10.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதே என்ஜின் ஆக்டிவா 125 மாடலில் 6500 ஆர்பிஎம்-ல் 8.29 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. மற்றப்படி இரண்டிலும் டார்க் திறன் அளவில் மாற்றம் இல்லை.

ஷோரூம்களில் ஹோண்டா க்ரேஸியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்... டெலிவிரி எப்போது துவங்குகிறது..?

2020 கிரேஸியா 125 ஸ்கூட்டரில் குறிப்பிடத்தக்க வகையில் எரிபொருள் நிரப்பும் பகுதியின் மூடி, சைலண்ட் ஸ்டார்டர், ஐடியலிங் ஸ்டாப் சிஸ்டம் (டீலக்ஸ் வேரியண்ட்டில் மட்டும்) மற்றும் சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஸ்டார்ட் ஆகாத வசதி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.

ஷோரூம்களில் ஹோண்டா க்ரேஸியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்... டெலிவிரி எப்போது துவங்குகிறது..?

இதில் ஐடியலிங் ஸ்டாப் சிஸ்டம் சிக்னல்களில் நிற்கும்போது வாகனத்தின் எரிபொருளை மிச்சப்படுத்தும். மற்ற மெக்கானிக்கல் பாகங்களில் மாற்றம் இல்லை. ஆனால் ஸ்கூட்டரின் 3 கிலோ எடை அதிகரித்து தற்போது 108 கிலோ எடையில் உள்ளது. அதேபோல் க்ரவுண்ட் கிளியரென்ஸும் 16மிமீ அதிகரிக்கப்பட்டு 171 மிமீ ஆக உள்ளது.

ஷோரூம்களில் ஹோண்டா க்ரேஸியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்... டெலிவிரி எப்போது துவங்குகிறது..?

ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டர் மாடலுக்கு 3 வருட உத்தரவாதத்தை நிலையாக வழங்குகிறது. இதனை மேலும் மூன்று வருடங்களுக்கும் வாடிக்கையாளர் நீட்டிக்க முடியும். சந்தையில் ஹோண்டா கிரேஸியா 125 ஸ்கூட்டருக்கு டிவிஎஸ் எண்டார்க் 125, சுசுகி புர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் அப்ரில்லா எஸ்ஆர் 125 உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles

English summary
Honda Grazia 125 BS6 Reaches Dealerships
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X